மத்திய அமைச்சரவையில் உள்ள இளம் மந்திரிகளில், தனித்து நிற்பவர், பாராட்டப்படுகிறவர் சச்சின் பைலட். ராணுவப் படையின் ஒரு அதிகாரியாக நியமனம் பெறும் முதல் மத்திய மந்திரி சச்சின் பைலட். இவரது ரேங்க் லெப்டினென்ட். மந்திரி என்ற வகையில், ராணுவ அதிகாரிகள் இவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். ஆனால், லெப்டினென்ட் ரேங்க் அதிகாரியாக இவர், உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்க வேண்டும். நிலைமையை எப்படி சமாளிப்பது? சச்சின் பைலட் சாதாரண உடையில் இருக்கும்போது ராணுவ அதிகாரிகள் அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும், சச்சின் பைலட் மிலிடரி யூனிபார்மில் இருக்கும்போது, உயர் அதிகாரிகளுக்கு அவர் சல்யூட் அடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டும், தாத்தாவும் ராணுவத்தில் பணி புரிந்திருக் கின்றனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என்னுடைய கனவு என்கிறார் சச்சின். சில வி.ஐ.பி.,க்கள் ராணுவம் மற்றும் விமானப்படையில் கவுரவ அதிகாரிகளாக சேருகின்றனர். நடிகர் மோகன்லால், கபில் தேவ் போல! ஆனால், சச்சின் பைலட், ராணுவத்தில் சேருவதற்குரிய தேர்வுகள் எழுதி உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.