Advertisement
மூன்று நூற்றாண்டுகளை பார்த்தவர்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013,00:00 IST

ஜப்பானைச் சேர்ந்த, ஜிரொயுமான் கிமுராவுக்கு, இப்போது, 115 வயது. உலகின், மிக வயதான மனிதர் என்ற, கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் இவர் தான். ஏற்கனவே, தாமஸ் கிறிஸ்டியன் மார்டென்சன் என்பவர் தான், இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இவர், 115 ஆண்டு, 252 நாட்கள் வாழ்ந்தார்.
ஆனால், ஜிரொயுமான், சமீபத்தில், 115 ஆண்டு, 253 நாட்களை கடந்து, தாமசிடமிருந்து, சாதனையை, தட்டிப் பறித்துள்ளார். ஜிரொயுமான், 1897ல், பிறந்தவர். இதன் மூலம், மூன்று நூற்றாண்டுகளை பார்த்தவர், என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது.
இவருக்கு, ஏழு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 14 பேரன், பேத்திகள், 25 கொள்ளுப் பேரன், பேத்திகள், 13 எள்ளுப் பேரன், பேத்திகள் என, இவரது சாதனை பட்டியல், நீண்டு கொண்டே செல்கிறது.
"அதிக வயது வரை வாழும் ரகசியம் என்ன,' என, இவரிடம் கேட்டபோது, "அளவோடு சாப்பிட்டால், வளமாக, நீண்ட காலம் வாழலாம்...' என, ரத்தினச் சுருக்கமாக பதில் அளிக்கிறார்.
ஜோல்னா பையன்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
srinivasansulochana - newsouthwales,ஆஸ்திரேலியா
03-பிப்-201314:20:57 IST Report Abuse
srinivasansulochana எவ்வளவு அளவோடு சாப்பிட்டாலும் இப்போதைய விதை இலிருந்து ,, உரத்திலிருந்து எல்லா உணவுகள், மருந்துகள் ,என்று எல்லாவற்றிலும் உள்ள கலப்படங்கல், காற்றில் ஏற்படும் மாசு ,பிளாஸ்டிக்குகள் ,ஆகியவைகளால் மனிதனின் ஆயுள் காலம் நிச்சயமாக குறையத்தான் செய்யும்.
Rate this:
1 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.