அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவே படத்துக்கு படம் நடித்து வரும் பியாவுக்கு, தொடர்ந்து அப்படி நடித்து போரடித்து விட்டதாக கூறுகிறார். அதனால், இனி தன் ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்டியூம் ஸ்டைலை, வில்லேஜ் மற்றும் ஹோம்லியான வேடங்களுக்கேற்ப மாற்றி, அந்த மாதிரி கதைகள் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்! — எலீசா
அதிரடி பேச்சை குறைத்த பார்வதி!
பூ படத்தில் நடித்த போது, தன்னை தொடர்பு கொண்ட படாதிபதிகளை, அதிரடியாக சம்பளம் கேட்டு ஓட வைத்தவர் பார்வதி. ஆனால், இப்போது தனுஷுடன் மரியான் படத்தில் நடித்து வரும் அவர், பழைய பந்தாக்களை ஓரங்கட்டி விட்டு, பக்குவமாக பேசத் தொடங்கியுள்ளார். அதோடு, படக் கூலியையும் குறைத்திருப்பதால், மீண்டும் பார்வதியை கோலிவுட் முற்றுகையிட்டு வருகிறது. காரியம் உண்டானால் கழுதையின் காலையும் பிடி! — எலீசா
ரீ-மேக் படத்தில் மேக்னா ராஜ்!
தமிழில் சசிகுமார் நடித்த, சுந்தர பாண்டியன் படம், கன்னடத் தில் ராஜு ஹீலி என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. தமிழில் லட்சுமி மேனன் நடித்த வேடத்தில், மேக்னா ராஜ் நடிக்கிறார். "கிராமத்து பெண் வேடம் என்பதால், இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம்; அதோடு, வலுவான வேடம் என்பதால், இப்படத்தில் சிறப்பாக நடித்து, என் தாய்மொழியான கன்னடத்தில் நிலையான இடம் பிடித்து விடுவேன்...' என்கிறார் மேக்னா ராஜ். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்! — எலீசா
தமன்னா ஆவேசம்!
வேங்கை படத்துக்கு பின், கோலிவுட்டை விட்டு வெளியேறிய தமன்னா, அஜீத்தின் புதிய படத்தின் மூலம், ரீ - என்ட்ரி ஆகிறார். அடுத்து தமிழில் ஆழமாக காலூன்றி விடுவேன் என்று சொல்லும் தமன்னா, "அயன், படிக்காதவன், சிறுத்தை, பையா என, நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற போதும், எனக்கு படமே இல்லாமல் போனதற்கு காரணம், எனக்கு எதிராக சிலர் செய்த சதி வேலைதான். அதனால், அடுத்து நான் கோடம்பாக்கத்துக்கு வந்ததும், அந்த சதிகார கும்பலை முறியடிப்பதே என் முதல் வேலை...' என்று ஆந்திராவில் இருந்தபடியே ஆவேச குரல் எழுப்பி வருகிறார். உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு, பார்க்கிறேன் ஒரு கை! — எலீசா
கவுதம் மேனன் படத்தில் அஜீத்!
நீ தானே என் பொன் வசந்தம் படத்தை அடுத்து, விஜய்யை வைத்து, யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கவிருந்த கவுதம் மேனன், அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இதையடுத்து, முதன் முறையாக அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்க அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது. தற்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கும் அஜீத், இயக்குனர் சிவா படத்தில் நடித்து முடித்ததும், கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். — சி.பொ.,
இந்திக்கு செல்லும் அர்ஜுன்!
தென்னிந்திய சினிமாவில், 150 படங்கள் வரை நடித்துள்ள அர்ஜுன், ஏற்கனவே, தமிழில் ஜெய்ஹிந்த், கர்ணா மற்றும் ஏழுமலை ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது, காமன் மேன் என்ற பெயரில், ஒரு இந்தி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை தன் படங்களில் இடம்பெறாத அளவுக்கு, அதிரடி சண்டை காட்சிகளையும் அமைக்கஉள்ளார். இப்படத்தை இயக்கி, நடித்து, தானே தயாரிக்கவும் செய்கிறார். — சினிமா பொன்னையா
அமிதாப்பச்சன் எழுதிய கவிதை, சினிமா பாடலாகிறது!
டில்லி
மருத்துவ கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவத்தை, ப்ரீடம் என்ற
பெயரில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்குகிறார் டான்
கவுதம். "கொலைவெறி' புகழ் அனிருத் பின்னணி இசையமைக்கும் இப்படத்திற்கு,
குலாம் நபி என்ற பாகிஸ்தான் இசையமைப்பாளர், பாடல்களுக்கு இசையமைக்கிறார்.
இவரது இசையில், இறந்த அந்த மாணவிக்காக, நடிகர் அமிதாப்பச்சன் எழுதிய,
கவிதைகள், பாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. — சினிமா பொன்னையா
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.