சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
00:00

உலர் மலர்கள்:


பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன. வருடங்கள் வரை பல மதிப்புகூட்டும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் மலர் தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் தமிழகத்தில் பரவலாகவும் காணப்படுகின்றன. தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சென்னையில் இயங்கிவருகின்றன.

உலர்மலர் தொழில்நுட்பம்:


தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.

வகைகள்:


வீட்டு அலங்காரப் பொருட்கள்: மேஜை, ஜாடி அலங்காரங்கள், மலர் வளையங்கள், மாலைகள், தோரணங்கள், சுவர் அலங்காரங்கள், சிறு மரங்கள், வாழ்த்து அட்டைகள்.

வீட்டு நறுமணப் பொருட்கள்:


உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். உலர் மலர்களை கடல்வழிப்பயணம் மூலம் போக்குவரத்து செய்யலாம். ஆனால் கொய்மலர்களை துரிதப் போக்குவரத்து மூலமாக மட்டுமே அனுப்பலாம். இத்தொழிலை சிறு தொழிலாக சுயஉதவி குழு பெண்கள் செய்யலாம்.
மூலப்பொருட்கள் சேமிப்பின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.70-80 வருவாய் ஈட்டலாம். மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் மூலம் சுமார் ரூ.100-150 வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். அலங்காரப் பொருட்களைச் செய்ய தேவையான அங்கங்களின் மற்றும் துணைப் பொருட்களைத் தயாரித்தல் மூலம் சுமார் 180-200 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். முழு அலங்கார பொருட்களைச் செய்து தருவதன் மூலம் அல்லது நேரடியாக கொள்முதல் செய்வதன்மூலம் ரூ.300 முதல் 500 வரை ஈட்டலாம். (தகவல்: முனைவர் மு.ஜவகர்லால், முனைவர் மா.விசாலாட்சி, முனைவர் த.வெற்றிவேல், மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003, போன்: 0422-244 4625)

பப்பாளி (பப்பாளி மரம் படம் போடவேண்டும்):


தமிழகத்தில் பப்பாளி சாகுபடி தற்போது பழச்சந்தைக்காகவும், பப்பயின் எடுப்பதற்கும் பிரபலமாகி வருகிறது. உழவர்களுக்கு நிகரலாபம் அதிகமாக கிடைப்பதால் ஒப்பந்த அடிப்படையில் பெருவாரியான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பப்பாளி சாகுபடி கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பப்பாளியில் சிவப்பு சதைப்பற்றுள்ள உயர்விளைச்சல் தரக்கூடிய ஒரு பாலின ரகம் கோ.8. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இது பழமாக உண்பதற்கும் பால் எடுப்பதற்கும் உகந்தது.
பப்பாளி வளையப்புள்ளி நச்சுயிரி மேலாண்மை உத்திகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மக்காச்சோளத்தை வரப்பு பயிராக ஒரு மாதத்திற்கு முன் வயலில் நடவு செய்தல். * பப்பாளி நாற்றங்காலை பூச்சி புகாத குடில்களில் வளர்த்தல். * நடவு செய்த நான்காவது, ஏழாவது மாதங்களில் நுண்ணூட்டக்கலவை (சிங்க் சல்பேட் 5 கிராம்/ லிட்டர், போராக்ஸ் 1 கிராம்/லிட்டர்) இலை வழியாக தெளித்தல். * மாதம் ஒரு முறை ஊடுருவிப்பாயும் பூச்சிக்கொல்லி மருந்தான டைமீத்தோயேட் 1 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.