இன்டெல் நிறுவனத்தின் 1.2 கிகா ஹெர்ட்ஸ் ஆட்டம் லெக்ஸிங்டன் இஸட் 2420 ப்ராசசருடன் (Atom Lexington Z2420 processor) வந்திருக்கும் முதல் ஸ்மார்ட் போன் ஸோலோ எக்ஸ் 500. இரண்டு சிம் இயக்கம் கொண்டுள்ள இதில் ஆண்ட்ராய்ட் 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) தரப்பட்டுள்ளது. இதில் 3.5 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கிடைக்கிறது. லெக்ஸிங்டன் இஸட் 2420 ப்ராசரில் ஹைப்பர் த்ரெடிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டிருப்பதால், யூசர் இன்டர்பேஸ் இயங்குவது அதிக வேகத்தில் இருக்கும். ஒரே நேரத்தில், அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க முடியும். இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டு 1080ணீ வீடியோ பதிவும், எச்.டி. வீடியோ இயக்கமும் கொண்டுள்ளது.
3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. 3ஜி, வைபி, புளுடூத், ஜி.பி.எஸ்., 512 ராம் நினைவகம், 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை கிடைக்கின்றன. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.8,999.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.