Advertisement
சாம்சங் கேலக்ஸி டேப் 2 311க்கான முன்பதிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

தன் சாம்சங் கேலக்ஸில் டேப் 2 311க்கான (GTP3110), இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் முந்தைய பதிப்பான, டேப் 2 310 விற்குக் கூடுதலாக வைபி வசதியுடன் இந்த டேப் தரப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 தரப்பட்டுள்ளது. ரூ. 13,990 செலுத்தி, சாம்சங் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் 3ஜி வசதி இல்லை. மற்றபடி 7 அங்குல டச் ஸ்கிரீன் டி.எப்.டி. எல்.சி.டி. திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், ஒரே போகஸ் கொண்ட, வீடியோ பதிவு வசதியுடன் 3 எம்பி திறன் கொண்ட கேமரா, முன்பக்கமாக விஜிஏ கேமரா தரப்பட்டுள்ளன.
1 ஜிபி ராம் மெமரி, உள் நினைவகம் 16 எம்.பி., மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியவை வழங்கப்படுகின்றன. வை-பி டைரக்ட், புளுடூத் 3.0., ஏஜிபிஎஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 4,000mAh திறன் கொண்டது. ஏழு மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 193.7´122.3´10.5 மிமீ. எடை 344 கிராம். பார் டைப் வடிவில் வடிவமைக்கப்படுகிறது. ஜி.பி.ஆர்.எஸ். தரப்பட்டுள்ளது. இமெயிலுடன் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன.
இது வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, எதிர்பாராத மகிழ்ச்சி அளிக்கும் பரிசு ஒன்றைத் தருவதாக, சாம்சங் அறிவித்துள்ளது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.