ஆப்பிள் சென்ற வாரம் தன் ஐபேட் வரிசையில், புதியதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி. இதில் ரெடினோ டிஸ்பிளே உள்ளது. ஏற்கனவே ஐபேட் 4 மாடலில், 16, 32, 64 ஜிபி கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டவை இருந்தன. இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் IOS வெளியான மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது
வரை 12 கோடி ஐபேட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. மக்கள் இதனை மிகவும் நேசிக்கத் தொடங்கி விட்டனர். கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், அவர்கள் ஐபேட் சாதனத்தையே வேலை பார்க்கவும், பொழுது போக்கவும் பயன்படுத்துகின்றனர். இதில் பயன்படுத்தவென 3லட்சம் அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன என்று ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் ஷில்லர் கூறியுள்ளார். பிப்ரவரி 5 முதல் வர்த்தக ரீதியாக உலகெங்கும் இது கிடைக்கும். வைபி மட்டும் உள்ள ஐபேட் 799 டாலர்; சிம் வசதி கொண்டது 929 டாலர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.