Advertisement
விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ.
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் தினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குபவர்களும், புதியதாக இந்த சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்துபவர்களும், இதில் உள்ள யு.இ.எப்.ஐ. (UEFI) என்னும் அப்ளிகேஷன் குறித்து கேள்வி எழுப்பி கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். அது குறித்து இங்கு காணலாம்.
UEFI என்பதனை United Extensible Firmaware Ingterface என விரிக்கலாம். கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்கத் தொடக்க நிலைகளில் ஒன்று என இதனைக் கூறலாம். பூட் அல்லது பூட்டிங் என்று சொல்லப்படுகிற, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் நிலை என்பது, கம்ப்யூட்டர் இயங்குவதற்கென வரிசையாக மேற்கொள்ளப்படுகிற செயல்பாடுகளாகும். பவர் பட்டன் அழுத்தி, கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு நாம் அதன் முன் அமர்ந்து கொள்கிறோம். ஸ்டார்ட் ஸ்கிரீன் வரும் முன், கம்ப்யூட்டரின் பூட் இயக்கம் நமக்குப் பல திரைகளைக் காட்டுகிறது. இதில் பல தொழில் நுட்ப தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றில் பல நமக்குப் புரியாத, பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாத தகவல்களாகவே இருக்கின்றன.
இதற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் கம்ப்யூட்டரில் லோட் ஆவதைக் காணலாம். இதனை சில பாக்ஸ் மூலமாகவோ, அல்லது வேறு ஏதேனும் எல்.இ.டி. விளக்குகள், மூலம் தெரிந்து கொள்ளலாம். இறுதியாக லாக் இன் திரை அல்லது ஸ்டார்ட் திரை நமக்குக் காட்டப்படும். இதுதான் கம்ப்யூட்டர் பூட்டிங் செயல்பாடாகும்.
பவர் பட்டன் இயக்கி, ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் ஆகி கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினைத் தன் வசம் எடுத்துக் கொள்ளும் முன், கம்ப்யூட்டரின் செயல் பாட்டினைக் கட்டுப்படுத்தி இயக்க, ஒரு செயல்முறை தேவைப்படுகிறது. அதுவே பயாஸ் (BIOS) எனப்படும் இயக்க முறை தேவைப்படுகிறது. இதுவும் ஒரு குழப்பமான செயல் முறை என்றாலும், இதனைத் தெரிந்து கொள்வது நல்லது.
BIOS என்பது Basic Input Output System ஆகும். இது முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட போது, கம்ப்யூட்டர் பவர் பட்டனை இயக்கியவுடன், செயல்பாட்டிற்கு வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும், அதனுடன் இணைக்கப்பட்ட பல்வேறு சாதனங்களுக்கும் இடையே (ஹார்ட் டிஸ்க், வீடியோ கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை)மேற்கொள்ளப்படும் டேட்டா பரிமாற்றத்தினை BIOS நிர்வகிக்கிறது. இது இயங்கத் தொடங்கியவுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை லோட் செய்து இயக்கும் முன்னர், கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து சாதனங்களும், சரியான முறையில் அதனதன் தன்மைக்கேற்றபடி இணைக்கப்பட்டு இயங்குகிறதா என்பதனைச் சரி பார்க்கிறது. ஏதாவது ஒரு சாதனம் சரியாக இணைக்கப்பட்டு இயங்கவில்லை எனில், அதனை ஒரு பிழைச் செய்தியாக அறிவித்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை லோட் செய்திடாமல் நிறுத்துகிறது.
கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமிற்குப் பதிலாக UEFI இல்லை. அதற்குப் பதிலாக, பயாஸ் புரோகிராமின் இயக்கத்திற்குத் துணை போவதாய், அதன் மேலாகவே அமர்ந்து கொள்கிறது. பயாஸ் நிலையாகவும் எளிதாகவும் இயங்க உதவி செய்கிறது. பயாஸ் எப்போதும் கம்ப்யூட்டரில் இயங்கும் ப்ராசசருக்கேற்ற வகையிலேயே அமைக்கப்படுகிறது. கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள சில சாதனங்கள், பயாஸ் அமைப்புடன் ஒத்துப் போகாத நிலையில் இருக்கலாம். அப்போது பயாஸ் புரோகிராமினை இணைந்து செயல்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. அதாவது, இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் வடிவமைப்புக்கும், பயாஸ் அமைப்பிற்கும் இசைவான சூழ்நிலை இல்லை என்றாலும், அதனை அமைத்துக் கொடுக்கும் வழியை UEFI தருகிறது.
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே UEFI தரப்பட்டுள்ளது. இது எதனைக் குறிக்கிறது? விண்டோஸ் 8 எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் எத்தன்மையுடையனவாக இருந்தாலும், கம்ப்யூட்டர் பூட் செய்யப்பட்டு, விண்டோஸ் 8 இயங்கி, நீங்கள் இயக்கத் தயாராக இருக்கும். அடிப்படையில், சிஸ்டத்தின் பூட்டிங் திறனை UEFI செறிவாக்கி, பூட் ஆகும்போது எந்த பிரச்னையும் எழாமல் பார்த்துக் கொள்கிறது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.