ஸ்மார்ட் போன் விலை குறைவதுடன், மக்களின் பயன்பாட்டின் எல்லையும் விரிவடைகிறது என்பதே மிக முக்கியமான அம்சம். இது மக்களை மேம்படுத்துவதுடன், பொருளாதாரத்திலும் அவர்களை உயர்த்தும் என்பதே உண்மை. எனவே, இதனை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல்களைத் தொடர்ந்து தரவும்.
டாக்டர் எஸ். கதிரேசன், மதுரை.
விண்டோஸ் இயக்கம் நின்று போய், கைகளைப் பிசைகையில், பொறுமையாக என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என எழுதப்பட்ட கட்டுரை, என்னைப் போன்றவர்களுக்கான நன்னூல். மிகப் பயனுள்ள டிப்ஸ் மற்றும் அறிவுரை தந்தமைக்கு நன்றி.
எஸ். ஆராவமுதன், திருச்சுழி.
விண்டோஸ் இயங்காமல் போவதற்கு இத்தனை காரணங்களையும் கூறிவிட்டு, இன்னும் பல இருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். என் கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படுகையில், விண்டோஸ் இயக்கத்தினை நானே முடக்கி, மீண்டும் ரீ பூட் செய்துள்ளேன். பல நேரங்களில் உதவியிருக்கிறது.
என். லஷ்மி காமராஜ், திருப்பூர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியின் பதிவுகள், நமக்கு என்றென்றும் அதன் வளர்ச்சியினைச் சுட்டிக் காட்டி, உழைப்பின் உயர்வைக் காட்டும். தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் அனைவரும் இதனைத் தங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
என். பிரானேஷ், கவரப்பேட்டை.
இந்த வார இணைய தளம் பகுதியில் வெளியிட்டிருந்த நம் பூமியின் வண்ணப் போட்டோ மிகவும் அற்புதமான காட்சியைத் தத்ரூபமாகத் தருகிறது. அந்த தளம் சென்று, மற்றவற்றையும் ரசித்தேன். என் குழந்தைகளிடமும் காட்டினேன். மிக்க நன்றி.
எஸ். மனோகரன், மதுரை.
நம் வாழ்வைச் சுற்றி, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சாதனமாக, உணவாக இன்டர்நெட் வளர்ந்து வருகிறது. ஆண், பெண் பேதமின்றி, அனைவரும் இதனைப் பயன்படுத்தும் காலம் விரைவில் வர வேண்டும். உங்கள் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
டாக்டர் கே. சுரேஷ் ராஜ், கோவை.
டெம்பரரி டைரக்டரியில் உள்ளவை, கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத் தேவையான பைல் என்று எண்னி இருந்தேன். தெளிவாக விளக்கம் அளித்தது சிறப்பாக இருந்தது.
தெ. ஆ. கரிகாலன், எண்ணூர்.
தாங்கள் குறிப்பிட்டபடி, என் ஆண்ட்ராய்ட் போனில், எஸ்.எம்.எஸ். பிளாக்கர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். வழிமுறைகளை நீங்கள் விளக்கி அளித்தது எனக்கு மிகவும் உதவியது. நன்றி.
எஸ். ரோஸ்லின் கனி, சென்னை.
எக்ஸெல் ஒர்க்ஷீட் குறித்த டிப்ஸ் அதிகம் வருவதில்லை. என் போன்ற சிறிய அலுவலகங்களில் பணி புரிவோருக்கு உங்கள் டிப்ஸ் மிகவும் உதவியாக இருக்கின்றன. அவசியம் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். சுரேந்திரன், தாம்பரம்.
டாஸ் இயக்கத்திலிருந்து விண்டோஸ் 8 வரை மைக்ரோசாப்ட் உயர்ந்தது பிரமிப்பாக உள்ளது. உலகின் சிந்தனையை, வாழ்க்கை நடைமுறையை மாற்றிய இந்நிறுவனம், நிச்சயம் இறவாப் புகழ் பெற்று இயங்கும்.
கா. செல்வி பூமிநாதன், விருதுநகர்.
விண்டோஸ் முடங்கிப் போவது போல, மானிட்டர், ஸ்பீக்கர், இன்டர்நெட் இணைப்பு, பிரிண்டர் ஆகியன முடங்கிப் போவதற்கான காரணங்களையும் பட்டியலிட்டு விளக்கவும்.
சா. இளவேனில், மதுரை.
மொபைல் டிப்ஸ் எனத் தந்துள்ளது அனைத்துமே பயனுள்ளவை. வாராவாரம் வேர்ட், எக்ஸெல் டிப்ஸ் போல, மொபைல் டிப்ஸ்களும் தரவும்.
என்.பிரபு செல்வன், பழநி.
ஸ்மார்ட்போன்களும், குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் வசதியும், வைபி தொழில் நுட்ப பரவலும் இணைந்து, மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த ஆண்டில் இதனை அதிகம் எதிர்பார்க்கலாம். தங்கள் கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் இதனை உறுதி செய்கின்றன.
பேரா. கி. திருமாறன், விழுப்புரம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.