வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக படுக்கை வரிசைத் தகவல்களை ஒரு கமா இட்டு அடிக்க வேண்டும். இதே போல நெட்டு வரிசை களையும் வரிசையாக அமைக்க வேண்டும். பின் இவற்றை செலக்ட் செய்து “Table > Insert Table”. செலக்ட் செய்து கிளிக் செய்தால் டேபிள் உருவாகி நீங்கள் டைப் செய்த தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் அமர்ந்திருக்கும். அகலத்தினை சுருக்கலாம்; நீட்டலாம். இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் “Table > Table Autoformat” என்ற பிரிவில் கிளிக் செய்தால் பல வகை டேபிள்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் தேவையான டேபிள் அமைப்பைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.