1977ல் இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இப்படை நிறுவப்பட்டது முதல் இன்று வரை மிகவும் சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஜெனரல் டியூடி (நாவிக்) பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தேவைகள்:
இந்திய கடலோரக் காவல் படையின் நாவிக் - ஜெனரல் டியூடி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.1991க்குப் பின்னரும் 31.07.1995க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உள்ளது. பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் படித்திருப்பதோடு குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உயரம் குறைந்த பட்சம் 157 செ,மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவளவு குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவரிடம் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இந்த நிலைக்கு முன்னர் பற்கள் மற்றும் காதுகளை உரிய விதத்தில் சுத்தம் செய்துவிட்டே செல்ல வேண்டும். மண்டல ரீதியாக இந்தப் பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்:
இந்தப் பதவி எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற வெவ்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் எதிர்கொள்ளலாம். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் எழுத்துத் தேர்வு நடத்த படலாம் என்று தெரிகிறது. இந்தியக் கடலோரக் காவல் படையின் நாவிக் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.