மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் உளவுத்துறை இயங்கி வருகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை அவ்வப்போது அரசுக்கு வழங்குவதன் மூலம் நாட்டிற்கு உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. இவ்வளவு புகழ் பெற்ற உளவுத்துறையில் உள்ள 2 பிரிவுகளிலான உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்னென்ன பிரிவுகள்:
இன்டலிஜென்ஸ் பீரோவின் அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பதவி 2 பிரிவுகளில் முறையே 19 மற்றும் 57 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிகளுக்கு மத்திய அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்:
உளவுத்துறை சார்ந்த மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவி இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் மாறுதலுக்கு உட்பட்ட தன்மை கொண்டது என்பதால் இதற்குத் தயாரானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் பிரிவான டெக்னிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் சிறப்புப் பாடமாக முடித்திருக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரி வாயிலாக எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் இன்ஜினியரிங் டிப்ளமோவை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.ஜி.டி.சி.ஏ., பி.சி.ஏ., கம்ப்யூட்டர் தொடர்புடைய பிரிவில் பி.இ., பி.டெக்., முடித்தவர்களும் டெக்னிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 2வது பிரிவுக்கு பி.எஸ்சி.,யில் கணிதம் அல்லது இயற்பியல் முடித்தவர்கள், பாலி டெக்னிக் கல்லூரி மூலமாக ரேடியோ இன்ஜினியரிங் முடித்தவர்கள், எம்.எஸ்சி.,(வயர்லெஸ்) முடித்தவர்கள், பி.சி.ஏ., பி.சி.எஸ்., கம்ப்யூட்டர் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்தவர்களும் டபிள்யூ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதர விபரங்கள்:
இன்டலிஜென்ஸ் பீரோவின் மேற்கண்ட அஸிஸ்டென்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் சலான் மூலமாகவோ, நெட் பேங்கிங் முறையிலோ அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் டெபிட் கார்டு மூலமாகவோ செலுத்த வேண்டும். இந்த பதவிக்கு அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் ஜெனரல் அவேர்னஸ்/நாலெட்ஜ், ரீசனிங், காம்ப்ரிஹென்சன், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களிலும் நடத்தப்படும். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை பின்வரும் இணைய தளத்தைப் பார்த்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.