கர்னாடகாவில் அந்நாட்களில் மிகவும் சிறிய நகரமாக இருந்த மங்களூருவில் 1906ல் சிறந்த தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்று போற்றப்படும் அம்மெம்பால் சுப்பாராவ் பை கனரா வங்கி நிறுவப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த வங்கி பல்வேறு கோணங்களிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. 1969ல் இந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டது. தற்போது கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பதுடன் கோர் வங்கிச் செயல்பாடும் இருப்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வங்கியில் அக்ரிகல்சுரல் எக்ஸ்டென்ஷன் ஆபிசர் பதவியில் உள்ள 350 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
கனரா வங்கியின் அக்ரிகல்சுரல் எக்ஸ்டென்ஷன் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், செரிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், டெய்ரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஷரீஸ் சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரிகல்சுரல் மார்க்கெடிங் அண்டு கோஆபரேஷன் ஆகிய ஏதாவது ஒரு விவசாய அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கட்டாயம் தேவைப்படும் என்ற போதும் ஒரு வேளை இந்த வங்கியில் பதவி கிடைத்தால் அதிலிருந்து 6 மாதத்திற்குள் இந்தத் தகுதியைக் கட்டாயம் பெற வேண்டும். இந்தி மொழியில் பணிபுரியத் தக்க திறனை புரொபேஷன் காலத்திற்குள் முடிக்க வேண்டியிருக்கும். இவற்றுடன் கடந்த 2011-12ல் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பதவிக்காக ஐ.பி.பி.எஸ்., நடத்திய பொது எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றவை:
கனரா வங்கியின் விவசாய விரிவாக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ரூ.20/- மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.