மத்திய அரசுப் பணிக்கான எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

தகுதி :


பட்டப்படிப்பு

தேர்வு முறை :


2 கட்டத் தேர்வு
மத்திய அரசுப் பணிகளுக்காக 2011ம் ஆண்டு சுமார் 12500 இடங்களுக்காகவும் 2010ல் 8000 பணியிடங்களுக்காகவும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையமான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பட்டப்படிப்பு முடித்தவருக்கான கிராஜூவேட் லெவல் தேர்வை நடத்தியது. இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும் கணிசமான காலியிடங்களுக்காக இதே தேர்வு அறிவிப்பை இந்த தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அரசுத் துறையில் 2 கோடி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதை ஒட்டி இந்தத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் குறைந்தது 10 ஆயிரம் பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது என நாம் நம்பலாம்.
எந்தத் துறைகளில் வேலை உள்ளது?
* ரயில்வே
* வெளியுறவுத் துறை
* உளவுத் துறை (ஐ.பி.,)
* மத்திய விஜிலன்ஸ் கமிஷன்
* சென்ட்ரல் செகரடரியேட் சர்விஸ்
* மத்திய வருவாய்த் துறை
* என்போர்ஸ்மென்ட் இயக்குனரகம்
* இன்கம்டாக்ஸ்
* எக்சைஸ்
* போதைப் பொருள் ஒழிப்பு இயக்குனரகம்
* புள்ளியல் துறை

தகுதிகள்:


புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மட்டும் கணிதம்/புள்ளியியல்/பொருளாதாரம்/காமர்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். பிற பணிகளுக்கு பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஜனவரி 1, 2013 அன்று இதைப் பெற்றிருப்பதோடு வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். வழக்கமான வயது தகுதி சலுகைகள் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குத் தரப்படும்.

தேர்வு முறை:


இந்தப் பணிகளுக்கான போட்டித் தேர்வு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் ரீசனிங், பொது அறிவு, கணிதம் மற்றும் ஆங்கிலம் இவற்றில் கேள்விகள் இடம் பெறும். 2 மணி நேரத் தேர்வு. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படும். 2ம் கட்டத் தேர்வில் கணிதத் திறன், ஆங்கிலம் மற்றும் புள்ளியியல் பகுதிகளில் 3 தாள்கள் இடம் பெறும். இதன் பின் நேர்முகத் தேர்வு/ஸ்கில் டெஸ்ட்/கம்ப்யூட்டர் திறனறியும் பகுதி ஆகியவற்றிலும் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி:


விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இது சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீ ஸ்டாம்பாக மட்டுமே செலுத்தப்படவேண்டும். இது ஆப்லைனில் விண்ணப்பிக்க மட்டுமே பொருந்தும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளைகளில் கட்டணத்தை செலுத்தி பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படி முதல் பகுதி பதிவு செய்தபின் 2ம் கட்ட பதிவுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
முழு விபரங்களையும் எஸ்.எஸ்.சி., இணைய தளத்தில் கட்டாயம் பார்த்துக் கொள்ளவும்.

இணைய தள முகவரி:


www.ssc.nic.in

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய தள முகவரி:


ssconline.gov.in; sssonline2.gov.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:


பிப்ரவரி 15, 2013

தேர்வு நாள்:


முதற் கட்டத் தேர்வு ஏப்ரல் 14, 21
2ம் கட்டத் தேர்வு ஜூலை 20, 21

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.