ஸ்டேட் பாங்கில் பி.ஓ., பணி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
00:00

எஸ்.பி.ஐ., என்று நம் அனைவராலும் அறியப்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கான அடித்தளம் 1806லேயே இடப்பட்டுவிட்டது. பாங்க் ஆப் கோல்கட்டா என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்று பெயர் மாற்றம் பெற்றது.
இதன் பின்னர் தேசியமயமாக்கலின் போது பாரத ஸ்டேட் வங்கி என்று பெயர் பெற்று இன்று இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் இடம் பெற்று பிரசித்தி பெற்ற மிகப் பெரிய வங்கியாக வளர்ச்சி கண்டுள்ளது. நவீனமய சேவைகள், எண்ணற்ற ஏ.டி.எம்., இயந்திரங்கள், தனியார் துறை வங்கிகளுக்கு சவால் விடும் சேவைகள் என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே இருக்கலாம். இன்று போட்டித் தேர்வு எழுதும் எண்ணற்றவர்களின் பிரதான விருப்பப் பணியாகக் கருதப்படும் ஸ்டேட் பாங்கின் பி.ஓ., பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைகள்:


பாரத ஸ்டேட் வங்கியின் பி.ஓ., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2013 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒரு மையத்தில் எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும். 28.04.2013 அன்று நடத்தப்பட உள்ள 250 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் அப்ஜெக்டிவ் மற்றும் டெஸ்கிரிப்டிவ் வகையிலான கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற விபரங்கள்:


பாரத ஸ்டேட் வங்கியின் மேற்கண்ட புரெபேஷனரி அதிகாரி பதவிக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.200/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்னர் முதலில் இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆப்-லைனில் கட்டணம் செலுத்த இறுதி நாள் :


28.02.2013

ஆன்-லைனில் கட்டணம் செலுத்த, விண்ணப்பிக்க இறுதி நாள் :


23.02.2013

இணையதள முகவரி :


www.sbi.co.in/webfiles/uploads/files/1358933833794_SBI_PO&ADVT&JAN13.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.