சுவேதாவின் சுகமான அபிநயம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
00:00

ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலையரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியில், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசியங்களும் இல்லாத கச்சித அணுகுமுறை அபிநயங்களும், முத்திரைகளும் கவனமாக கோர்க்கப்பட்ட ஜதிகளும், சிறப்பாக அமைந்திருந்தன.
நிகழ்ச்சியின் துவக்கமே, பளிச்சென்று சதுச்ர ஏகம் தாளத்தில் அமைந்த கம்பீர நாட்டை மல்லாரி. லயம், நடை பேதங்கள் சிறப்பாக இருந்தன. பிரதான வர்ணம் அம்சத்வனி ராகத்தில், ஆதிதாளத்தில் நந்தினி சர்மா மெட்டமைப்பில், ஓம் எனும் பொருளே உமையவள் மகனே, என்று விநாயகப் பெருமானின், அத்தனை சிறப்புக்களையும், விளக்கும் விதத்தில் உள்ளடக்கிய, சிறப்பான நாட்டிய வடிவமைப்பு ஆகும்.
சுவேதா இந்த நிகழ்ச்சியில் ஆடிய, அபிநய பதமான தெருவில், வரானோ (கமாஸ்) தமிழ் பதம், கூடுதல் நயத்துடன் அமைந்திருந்தது. சிதம்பரநாதன் தில்லை நடராசர் மீது, காதல் கொண்ட நாயகி, பாவத்துடன் வாசலில் அவன் வருகிறானா என்று எட்டிப்பார்ப்பது, காணாமல் தவித்து, உருகுவது போன்ற உணர்ச்சிகளை, மிக கச்சிதமாக அழகாக அனுபவித்து ஆடியது, ரசிக்கும்படி இருந்தது.
ஊத்துக்காடு வேங்கடகவியின் நாதமுரளிகான (அமீர் கல்யாணி) (ஆதி திச்ரம்) பாடலுக்கு கண்ணன் லீலைகளையும், இடைச் செருகல் ஜதிகளுக்கு சிறப்பாக ஆடியதும் வரவேற்க வைத்தது. அமரர் பாபநாசம், சிவனுடைய புதல்வி டாக்டர் ருக்மணியின், அருமையான தில்லானா (சூர்யா ராகம், ஆதி தாளம்) நிகழ்ச்சியில், உயர்வான நிருத்தத்துடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நடன குரு ரோஜா கண்ணனுடைய சிறப்பான நட்டுவாங்கம், நடன வடிவமைப்பு கச்சிதம், நயம்.
கலைமாமணி ராதா பத்ரியின் பாட்டு, கேட்போரை மயங்க வைக்கிறது என்றால் மிகையில்லை. நடனத்திற்கு எப்படிப் பாட வேண்டும் என்று தெரிந்து கொண்டு பாடும் புத்திசாலி இவர். கலைமாமணி நெல்லை கண்ணனின் சிறப்பான லயம், கலைமாமணி டி.கே.பத்மநாபனின் வயலின் வாசிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தன.
-மாளவிகா

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.