அஞ்சனாவின் நடனம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
00:00

மயிலை பெத்தாச்சி கலையரங்கத்தில், அண்மையில் நடைபெற்ற பிரம்ம கான சபாவின் நாட்டிய விழாவில், நடனமனி இளம் அஞ்சனா ஜான் அபாரத் திறமையுடன் அரங்கேறி, ஆடி ரசிகர்களை கவர்ந்தார். கலைமாமணி, நிருத்ய சூடாமணி, ஊர்மிளா சத்திய நாராயணின் அருமையான நடனப் பயிற்சியில் பயின்ற, சங்கல்பாவின் திறமையான மாணவி அஞ்சனா. வழுவுர் தோடய மங்களத்துடன், சுவாமி மலை சுரேஷின் இனிமையான, இறைவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கங்கமுத்து நட்டுவனார் இயற்றிய கணேச கவுத்துவத்துடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த, இந்த கவுத்துவத்தில் விநாயகப் பெருமானின் அத்தனை சிறப்புக்களையும், அருள் வேண்டியும் அமைந்த கச்சிதமான அபிநயங்கள், கணேச முத்திரைகள் மனம் கவர்ந்தன.
நாட்டிய இதயமாக விளங்கும் வர்ணத்திற்கு, நாட்டிய குரு பந்தநல்லூர் சீனிவாச பிள்ளை இயற்றிய கானடா, ரஞ்சனி, சுத்ததன்யாசி, சாரங்கா ஸ்ரீரஞ்சனி, கல்யாணி, கௌளை ராகங்களில் அமைந்த ராகமாலிகை, ஆதிதாள வர்ணமாக பரமசொரூப பரந்தாமனை நினைத்து, பரவசம் கொண்டேன் பாங்கியே என்று துவங்கும் அருமையான, ஆழமான வர்ணத்தை தேர்ந்தெடுத்து ஆடச் செய்த குருவிற்கு நன்றி கூறலாம். இவரது வர்ணத்தின், நாட்டிய வடிவமைப்பு சிறப்பாக இருந்தது.
வள்ளிக் கணவன் பேரை, காவடிச் சிந்து பாடலுக்கு துள்ளிக் குதித்து முருகன் பேரைக் கேட்ட உடனேயே, உள்ளம் குழைவதை அற்புதமாக ஆடினார் அஞ்சனா. குகனோடு வாழ்ந்தததெல்லாம் வரியின் நாட்டிய வடிவமைப்பில்ல , அபிநயம் ரசிக்கும்படி இருந்தது. நிறைவாக வயலின் மேதை, லால்குடி ஜெயராமனின் மோகன கல்யாணி, ஆதி தாளம் தில்லானாவை மிகச் சிறப்பாக ஆடியதும், பாராட்ட வைத்தது. இந்த நாட்டிய வடிவமைப்பு நிகழ்ச்சிக்கு, உறுதுணையாக செயல்பட்ட நாட்டிய சங்கல்பா நடனகுரு ஊர்மிளா, சுவாமிமலை எஸ்.கே.சுரேஷ், ரமா துரை சுவாமிநாதன், சாயி பிரசன்னா, ரேகா எல்லாருமே பாராட்டுக்குரியவர்கள்.
குறிப்பாக நிகழ்ச்சியில் இந்த பள்ளியின் மூத்த மாணவி ரேகாவின் சிறப்பான நட்டுவாங்கம், எஸ்.கே. சுரேஷின் இனிமையான பாட்டு, ஈஸ்வர் ராமகிருஷ்ணா வயலின், சசிதர் புல்லாங்குழல், தனஞ்செயன் மிருதங்கம் ஆகியவை சிறப்பாக இருந்தன. நடனகுரு ஊர்மிளாவின் நிகழ்ச்சி முன்னுரை, தமிழிலும் இருந்திருந்தால் இன்னும் வரவேற்றிருக்கலாம்.

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.