Advertisement
சாரி நண்பா!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

சங்கர் வீட்டில் அவனது பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சங்கருக்கு இது பன்னிரண்டாவது பிறந்த நாள்.
இன்னும் சிறிது நேரத்தில், அவன் வெட்டப்போகும் கேக் தயாராக மேசை மீது வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு உணவுக்காக, அவன் தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தான். சங்கரின் அம்மா உணவை சமைத்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நண்பராக வீட்டிற்கு வரத் தொடங்கினர். சங்கர் எல்லாரையும் வரவேற்றான். முதலில் கார்த்திக் வந்து, புத்தகம் ஒன்றை சங்கருக்கு பரிசளித்தான். தொடர்ந்து விமல், பிரகாஷ், சவும்யா, சேகர் என எல்லாரும் சற்று விலையுயர்ந்த பரிசுகளை அளித்தனர்.
சங்கரின் தந்தை சிவக்குமார் தன் வீட்டிற்கு வந்திருந்த சங்கரின் அனைத்து நண்பர்களையும் கவனித்தார். சங்கரின் நெருங்கிய நண்பன் கோபியைக் காணவில்லை.
சிவக்குமார் சங்கரை அழைத்து, ""கோபியை இன்னும் காண வில்லையே... அவன் வந்தவுடன் கேக் வெட்டி விடலாம் அல்லவா?'' என்று கேட்டார்.
""இல்லையப்பா... அவன் வரமாட்டான் போலிக்கிறது... நான் கேக்கை வெட்டி விடுகிறேன்...'' என்று பதிலளித்தான்.
சங்கரின் பதிலில் திருப்தியுறாத அவனது தந்தை, ""கோபி ஏன் வரமாட்டான்? அவன் ஊருக்கு ஏதேனும் போயிருக்கிறானா?'' என்று மீண்டும் கேட்டார்.
""இல்லையப்பா... நான் அவனை அழைக்கவில்லை!'' என்று சொன்னான்.
""ஏன் அழைக்கவில்லை?'' என்று கேட்டார்.
சங்கர் தன் தந்தையை உள் அறைக்கு அழைத்துப் போய், ""அப்பா! நேற்று என் சைக்கிள் பழுதாகி விட்டதால், நான் பள்ளிக்கு நடந்துதான் சென்றேன். மாலையில் கோபி என்னை அவனது சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து போவதாகச் சொன்னான். ஆனால், என்னை விட்டுவிட்டு, அவன் மட்டும் கிளம்பி வந்துவிட்டான். கோபி மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்காகத்தான், அவனை என் பிறந்த நாளுக்கு அழைக்க வில்லை...!'' என்று மெதுவாகச் சொன்னான்.
""சங்கர்! நீ செய்தது மிகவும் தவறு. உன்னை சைக்கிளில் அழைத்துப்போகிறேன் என்று சொன்னதை அவன் மறந்து போயிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம்! நீயாகவே அவன் உனக்குத் துரோகம் செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அவன் இதற்கு முன்பு, எத்தனையோ முறை உன்னைத் தன் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். பள்ளியிலிருந்து வீட்டிற்கும் அழைத்து வந்திருக் கிறான். அவன் செய்த நன்மைகளையெல்லாம் மறந்துவிட்டு, ஏதோ அறியாமல் நிகழ்ந்த தவறுக்காக, அவன் மீது விரோதம் கொண்டால் தேவையில்லாமல் வன்மம்தான் வளரும். ஒருவர் ஏதேனும் சூழலில் நமக்குத் தீமை செய்தாலும் கூட அவர் செய்த நன்மைகளை மட்டும் நினைவில் வைத்து, நாம் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். இதுதான் நல்ல மனிதர்களின் பண்பு. நீ உடனே, தொலைபேசியில் கோபியை வரச்சொல்...'' என்று சொன்னார் சிவக்குமார்.
தந்தையின் அறிவுரையில் சங்கரின் மனம் மாறிவிட்டது. அவன் உடனே சென்று தொலைபேசியில் கோபியை அழைத்தான்.
""கோபி! என் பிறந்தநாள் விழாவைப் பற்றி முன்பே சொல்லாததற்கு என்னை மன்னித்துக் கொள். நீ உடனே புறப்பட்டு வா! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்தவுடன், கேக்கை வெட்டிக் கொண்டாட வேண்டும். இன்று இரவு என் வீட்டில்தான் உணவு சாப்பிட வேண்டும்,'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் சங்கர்.
சற்று நேரத்தில் சங்கர் வீட்டிற்கு வந்த கோபி, ""சங்கர்! நேற்று என் சைக்கிளில் உன்னை அழைத்து வருவதாகச் சொன்னதை நான் மறந்தே போய்விட்டேன். பாதி வழியில்தான் நினைவுக்கு வந்தது. நான் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து பார்த்தேன். உன்னைக் காணவில்லை. இன்று உன் பிறந்த நாள் என்பது எனக்கு நினைவில் இல்லை. இப்போது கடைசி நேரத்தில் என்னை அழைத்ததால் என்னால் உனக்கு எளிய பரிசைத் தான் வாங்கிவர முடிந்தது!'' என்று சொல்லி, பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்தான்.
""அன்போடு கொடுக்கும் எந்தப் பரிசும் விலை மதிப்பற்ற பரிசுதான் கோபி!'' என்று பேனாவைப் பெற்றுக் கொண்டான் சங்கர். சற்று நேரத்தில் அங்கே மகிழ்ச்சியான பிறந்தநாள் விழா ஆரம்பமானது.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.