அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கண்ணை தாங்கப்பா!


உலக சுகாதார அமைப்பின் கணிப்புபடி இந்தியாவில் 67 லட்சம் பேர் கண் தெரியாதவர் கள். வருடந்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை பார்வை இழப்பிற்கு உள்ளா கின்றனர். இவர்களுக்கெல்லாம் கண்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வருடந் தோறும் தேசிய கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது. இந்தியாவில் நடக்கும் கண் மாற்று அறுவை சிகிச்சையில் 90 சதவீதம் வெற்றியடைகிறது. அதன் மூலம் 9 முதல் 90 வயது வரை உள்ளவர்கள் பார்வை பெறுகின்றனர்.
ஒருவர், இறந்த 6 மணி நேரத்திற்குள் அவரது விழித்திரையை (கார்னியா) எடுக்க வேண்டும். 15 நிமிடங் களில் இதை எடுத்துவிட முடியும் என்பதால், ஈமச் சடங்குகளுக்கு இது எந்த விதத்திலும் இடைஞ்சலாக இருக்காது. முகத்தின் தோற்றமும் பாதிக்காது. மூளைச் சாவில் இருக்கும்போது அவரது உடலின் மற்ற பகுதிகளை தானமாக எடுப்பர். ஆனால், அந்த நபர் இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்பு கண்களை எடுத்தால் போதுமானது.
""இந்தியாவில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான "கார்னியா' தேவைப் படுகிறது. ஆனால், 2009ம்-10ம் ஆண்டில் 47 ஆயிரம் கார்னியாக்களே சேகரிக்கப்பட்டிருக் கின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 250 கண் வங்கிகள் இயங்குகின்றன. மரணமடையும் ஒருவரது கண்கள், இருவருக்கு பார்வை அளித்து, அவர் இறந்த பின்பும் நீடித்து வாழும். அதனால்தான் தானத்தில் சிறந்த தானம், "கண்தானம்' என்கின்றனர்.

குற்றாலம்!


நெல்லை என்று சொன்னவுடன், நம் நினைவுக்கு வருவது குற்றால நீர்வீழ்ச்சிகள். அருவி என அருமையான பெயர் சொல்லி அழைப்பர். குற்றாலத்தில் கீழ்க்கண்ட அருவிகள் இருக்கின்றன.
பிரதான அருவி, தேன் அருவி, செண்பகா தேவி அருவி, புது அருவி, சிற்றருவி,புலி அருவி, ஐந்தருவி,
இந்த அருவிகள் தவிர பாபநாசத்தில் வானதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி என இரு அருவிகள் இருக்கின்றன. மேலும், மணி முத்தாறில் ஓர் அருவி இருக்கிறது. இந்த பத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்து, நாள் ஒன்றுக்கு பலமுறை குளித்து மகிழலாம். எத்தனை முறை குளித்தாலும் ஜலதோஷம் பிடிக்காது; சளி பிடிக்காது. இந்த அருவிகளின் தண்ணீர் பல மூலிகைத் தாவரங்களை தாண்டிவருவதால், உடலுக்கு நலம் தருவதாக நம்பப்படுகிறது. இந்த அருவிகளில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய குளிப்பது சிறந்தது. உலகில் மூன்று முக்கிய நீர் வீழ்ச்சிகள் இருக்கின்றன அவை.

விக்டோரியா நீர்வீழ்ச்சி:


தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருக்கிறது. உலகில் மிக அதிகமான தண்ணீரைக் கொட்டும் நீர்வீழ்ச்சி இதுதான். இதன் அகலம் ஒருமைல்; உயரம் 354 அடி. நொடி ஒன்றுக்கு 1000 டன் தண்ணீரை ஜாம்பேசி நதியில் கொட்டு கிறது. நீர்வீழ்ச்சியிலிருந்து கிளம்பும் நீர் துளிகள் மேகக் கூட்டங்கள் போல் காட்சியளிக்கின்றன. இந்த நீர் வீழ்ச்சியை, 1855-ஆம் ஆண்டு டேவிட் லிவிங்ஸ்டோன் என்பவர் கண்டுபிடித்து பிரிட்டன் நாட்டின் ராணி விக்டோரியாவின் பெயரைச் சூட்டினார்.

நயாகரா நீர்வீழ்ச்சி:


அமெரிக்கா - கனடா, நாடுகளின் எல்லையில் இருக்கிறது. உலகிலேயே மிக ஆழமான நீர் வீழ்ச்சி இதுதான். இந்த நீர்வீழ்ச்சி குதிரை லாபம் நீர்வீழ்ச்சி, அமெரிக்க நீர்வீழ்ச்சி மணப்பெண்ணின் முக்காடு நீர் வீழ்ச்சி என்ற பெயர்கள் தாங்கி விழுகிறது. இந்த நீர் வீழ்ச்சியை படகில் சென்று பக்கத்தில் நின்று பார்க்கலாம். நீர்வீழ்ச்சிக்கு பின்புறம் பாறையில் இருக்கும் குகை வழியாகச் சென்றும் பார்க்கலாம். நீர் வீழ்ச்சியின் அருகில் கட்டப்பட்டிருக்கும் டவர் மீது ஏறி உயரத்திலிருந்து பார்த்து மகிழலாம்.

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி:


தென் அமெரிக்காவில் வெனிசுலா நாட்டில், இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. உலகத்தில் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுதான். 3210 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. தங்கம் தேடிவந்த அமெரிக்கர் ஜிம்மி ஏஞ்சல் என்பவரால், இந்த நீர்வீழ்ச்சி சென்ற நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பெயரால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்பட்டு வருகிறது.

சூப்பர் "கான்'!


உலோகம் இல்லாத ஒரு மூலப்பொருள் சிலிக்கான். இது இயற்கையில் சுத்தமான வடிவில் கிடைப்பதில்லை. சுத்தமான சிலிக்கான் கனமான கருமையான தவிட்டு நிறத்தில் இருக்கும். இது உலோகம்போல் ஒளி வீசும். பளிங்குபோல் மின்னும். சாதாரண வெப்பநிலை இதை பாதிக்காது. அதிக மான வெப்பத்தில் மற்ற மூலகத்துடன் சேர்ந்து இது சேர்மமாக மாறுகிறது. நிலத்தின் மேற்பரப்பில் 28 சதவீதம் சிலிக்கான் உள்ளது. சீனத்து களி மண்ணில் இது 50 சதவீதம் உள்ளது. மணலிலும் அதிகம் இவை காணப் படும். சிலிக்கான் டை-ஆக்ஸைடு சேர்மத்திலிருந்து சிலிக்கான் மூலகம் எடுக்கப்படுகிறது. சிலிக்கான் மண்ணிலிருந்து சிலிக்கா உருவில் கிடைக்கும். இதையே சிலிக்கான்-டை- ஆக்ஸைடு என்கின்றனர். இது சிலிக்கானும், ஆக்ஸிஜனும் கலந்த சேர்மம். படிக்கல், சிவப்பு அல்லது மஞ்சள் நிற மணிக்கல், பால் நிறக்கல், மணல், இவையெல்லாம் சிலிக்கானின் வெவ்வேறு உருவங்களே. சிலிக்கேட் என்பது சிலிக்கானின் மற்றொரு சேர்மம். மைக்கா, ஆஸ்பெஸ்டாஸ் ஆகியவையும் சிலிக்கேட்டாகத்தான் கிடைக் கிறது. சிலிக்கேட் நமக்கு பல விதத்திலும் பயன் தருகிறது. இது பல ரகங்களான கண்ணாடி செய்யவும், எனாமல், பீங்கான் ஆகியவை செய்யவும் பயன்படுகிறது. சோடியம் சிலிக்கேட் சோப் செய்ய பயன்படுத்தப் படுகிறது.
மரச்சாமான்களை செல்லரிக்காமல் பாதுகாக்கவும், முட்டைகளை அழுகாமல் காக்கவும் இது பயன்படும்.செயற்கை ரப்பர் செய்யவும், அதை மென்மைப்படுத்தவும் இதனை பயன்படுத்தலாம். சுத்தமான சிலிக்கான் போட்டோசெல், டிரான்ஸிஸ்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பகுதிகள் செய்யவும் பயன்படும். சிலிக்கானும், கார்பனும் சேர்ந்த சேர்மத்துக்கு சிலிக்கான் கார்பைட் அல்லது கார்போரண்டம் என்று பெயர். உலோகப் பொருட்களை பாலிஷ் செய்ய இது பயன்படுகிறது. நம் வாழ்வுக்கு பயனளிக்கும் செமி கண்டெக்டர் செய்யவும் சிலிக்கான் பயன்படும். சிலிக்கானுடன் மண்ணும், மணலும் கலந்து செங்கல் செய்கின்றனர்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


சேனை சிப்ஸ் செய்முறை நேரம்.
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள்-ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை: சேனைக் கிழங்கு தோல் நீக்கி, வறுவல் கட்டையில் சீவவும். இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் போடவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, அரை மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
எண்ணெயில் போட்டு பொரித்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் போட்டு காய வைப்பதால் சேனை அரிக்காமல் இருக்கும். வித்தியாசமான சுவையாக இருக்கும்!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.