Advertisement
விடுதலை வழங்கிய பாதாள சாக்கடை!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
00:00

1918ம் ஆண்டு ஜெர்மனி.
நிலக்கரிச் சுரங்கத்தில், பிரிட்டிஷ் யுத்தக் கைதிகள் வேலையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணி. முதல் மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை அது.
மே மாதத்தின் ஒரு காலைப் பொழுதில், கைதிகளைச் சுரங்கப்பகுதியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, சுரங்கவாசலில் காவலிருந்தனர் ஜெர்மன் சோல்ஜர்கள். கைதிகளில் "பிரைவேட் பியர்ஸ்' என்பவர் ஒருவர். நிலக்கரிச் சுரங்கத்தில் பியர்ஸும், மற்ற கைதிகளும் குத்துக் கோடாரியோடு, சுரங்கத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. பியர்ஸின் குத்துக் கோடாரி ஒரு பெரிய கல்லைப் பெயர்த்துப் புரட்டித் தள்ளியது. அங்கே... ஒரு... வழி! வழியா அது? தன் கை விளக்கைத் தூக்கிப்பிடித்து உற்றுப்பார்த்தார். ஆச்சரியம்! நிலக்கரிச் சுரங்கத்துக்குள் ஒரு சுரங்க வழியா! செங்கல் சுவர்களோடு அமைக்கப் பட்டிருந்த அது ஒரு பாதாளச் சாக்கடை. புழக்கத்தில் இல்லாது. கைவிடப்பட்ட "டிரைனேஜ்!'
ஜெர்மானியரின் சிறை முகாமிலிருந்து தப்பிச் செல்வது எப்படி என்று பியர்ஸும், அவர் நண்பர்களும் பல மாதங்களாகச் சிந்தித்துக் கொண்டிருந்தனர். இதோ, இந்தச் சாக்கடை வழிகாட்டி விட்டது. ஓசையின்றி கல்லைப் புரட்டி அந்த வழியை மூடினார் பியர்ஸ். சுரங்க வேலை முடிந்து கைதிகளை சிறை முகாமில் கொண்டு வந்து அடைத்தனர்.
அன்று இரவு, பியர்ஸ் தன் தோழர்களிடம் தன் கண்டுபிடிப்பைப் பற்றி கூறினார். உடனே எல்லாரும் பரபரப்படைந்தனர். முன்பே சேமித்து வைத்திருந்த அந்தப் பகுதியின் வரைபடம், காம்பஸ் மற்றும் பல உபகரணங்களைக் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டனர். மறுநாள் காலை தங்கள் அதிர்ஷ்டத்தை அந்தப் பாதாள சாக்கடை மூலம் சோதித்து விடுவது என்ற முடிவுக்கு வந்தனர்.
மறுநாள் குவாரியில், கைதிகளை வேலைக்காகக் கொண்டு வந்து இறக்கினர். சுரங்கத்தினுள் அனுப்பும் முன் கைதிகளைப் பரிசோதனை செய்து (செக்) அனுப்பினர். தோழர்களின் உதவியுடன், காவலர்களின் கவனம் ஈர்க்கப்படாமல், அவர்கள் கவனித்துக் கொள்ள பியர்ஸும், மற்ற இருவரும் அந்தக் கல்லை நகர்த்தி, அந்த ஓட்டையில் தங்கள் உடலைப் புகுத்தி நுழைந்தனர். அவர்கள் பாதாளச் சாக்கடைக்குள் புகுந்ததும், வெளியிலிருந்தவர்கள் கல்லைக் கொண்டு அதை மூடினர்.
சாக்கடையினுள் சென்ற மூவரும் சிரமத்துடன் மெல்ல, மெல்ல முன்னேறினர். இரண்டடி குறுக்களவேயுள்ள டன்னல் அது. அக்குழாய்ப் பாதை மூலம் ஒரு மணிநேரம், இருளில் மூச்சுத் திணற, தவழ்ந்து புழுப் போல நெளிந்து முன்னேற... ஓரிடத்தில் லேசான வெளிச்சம்... இவர்களுடைய அவஸ்தைக்கு ஆறுதலளித்தது. அதை நோக்கி ஊர்ந்து போனார்கள். இரும்புக் கம்பியினால் உருவாக்கிய கிராதி சாக்கடை மூடி (மேன் ஹோல்) அது!
அதை நகர்த்த முடியுமா? திறக்க முடியுமா? அந்தப் பாதாளச் சாக்கடைத் திறப்பு எங்கிருக்கிறது? இத்தனை கேள்விகளுக்கும் நெஞ்சைத் தடதடக்கச் செய்ய, ஒருவர் மீது ஒருவராக ஏறி நின்று, அந்த இரும்புக் கம்பியிட்ட கிராதித் தடுப்பு மூடியை தூக்கினர்.
அதிர்ஷ்டம் பியர்ஸின் பக்கமிருந்தது! கனத்தகிராதி மெல்ல நகர்ந்து உயர்ந்தது. தலையை நுழைத்து எட்டிப் பார்த்தார். நல்ல வேளை! வீடுகள் இல்லாத பகுதி. ஏதோ ஒரு விவசாயப் பண்ணை. தூரத்தில் வைக்கோல் போர்.
வைக்கோல் போரில் ஒளிந்திருக்கும் போது ஒவ்வொரு விநாடியும் அவர்கள் மனோநிலை? அப்பப்பா! ஆனந்தம், அச்சம், தவிப்பு, குதூகலம் அத்தனையும் கலவை யிட்டன. இருள்கவியும் வேளை. அதிர்ஷ்டம் கொஞ்சம் விளையாட எண்ணியது போலும், பண்ணை வேலைக்காரன் ஒருவன், ஒளிந்துள்ள இவர்களைப் பார்த்து விட்டான். அவன் அபாயக் குரல் எழுப்புமுன், பியர்ஸ் அசுர வேகத்தில் அவனைத் தாக்கி வீழ்த்தினார். பிறகு, மூவரும் தங்களிடமிருந்த திசைகாட்டும் கருவியின் (கம்பாஸ்) உதவியினால், ஐம்பது மைல் தொலைவிலுள்ள டச்சு எல்லையை நோக்கி ஓடலாயினர்.
இதற்குள் மாலை ஆறு மணிக்கு கைதிகளைப் பெயர் கூறி அழைத்துச் சோதித்து சிறைக்குள் அனுப்பும் வேளையில், பியர்ஸும் மற்ற இருவரும் "எஸ்கேப்' ஆகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிறை முகாமுக்கு அருகே உள்ளது டச்சு எல்லை தான். ஆகவே, தப்பிய கைதிகள் அதை நோக்கியே ஓடி இருப்பர் என்றும் ஊகித்து விட்டனர். வேட்டை நாய்களோடு தேடிக்கிளம்பியது ஒரு ஜெர்மன் ராணுவ வீரர்படை.
அதிர்ஷ்டம் தன் பரிபூரண பாதுகாப்பை பியர்ஸுக்கு அளித்திருக்கும் போது, அவர்களிடம் அகப்படுவாரா? அவர்களுக்குக் கடுக்காய் கொடுத்து எஸ்கேப்பானாலும், கடைசியில் ஒரு பைட் இல்லாவிட்டால் சுவாரஸ்யமிருக்காதே!
டச்சு எல்லைக்குச் சில கெஜ தூரமே உள்ள போது, ஒரு ஜெர்மன் சோல்ஜர் குறுக்கிட, இம்மூவரும் காவல் வீரரைத் தாக்கிவிட்டு, முள்வேலியைத் தாண்டி, டச்சு எல்லையில் குதித்து, ஹாலந்தில்-அப்பாடா "எஸ்கேப்!' என்று கூவினர்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.