சென்னை மருந்துவமனை ஒன்றில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது மருத்துவமனை காவலையும் மீறி, ""அண்ணே!'' என்று ஒருவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
""நீங்க செத்துப் போயிட்ட தாக வெளியே பேச்சு தாங்க முடியல, அதாண்ணே ஓடியாந்தேன்,'' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
அவரை அருகில் அழைத்து தைரியம் கூறினார் என்.எஸ்.கே.
சிறிது நேரத்தில், அடுத்து ஒருவர் கதறிக்கொண்டு ஓடி வந்து அதே கதையைச் கூறினார்.
அவரோ வாய்விட்டுச் சிரித்தார்.
மறுநாள் சேலத்தைச் சேர்ந்த ஒரு பட முதலாளி, ""ஐயா நீங்க காலமாயிட்டதாக சேலத்திலே ஒரு பரபரப்பு! தியேட்டர்களிலெல்லாம் கறுப்புக் கொடிகட்டி நேத்து, ஆட்டத்தைக் கூட நிறுத்திட்டாங்க!,'' என்று கண்ணீர் வடித்தார்.
""ஏய் நான் சாகலேன்னா விடமாட்டான் போல இருக்கே? அவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும்,'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மரணப்படுக்கையிலும், நகைச்சுவையோடு பேசிய அந்த உன்னதக் கலைஞர், அதற்கு அடுத்தநாளே இறந்து போனார் என்பதுதான் வருத்தம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.