மிக மிக மலிவான குவெர்ட்டி போன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
மிக மிக மலிவான குவெர்ட்டி போன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2010
00:00

அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா (Airfone India) நிறுவனம், அண்மையில் Buddy AQ9 மற்றும் Buddy AQ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. Buddy AQ9இரண்டு சிம், வயர்லெஸ் எப்.எம்., சரவுண்ட் சவுண்ட் கூடிய எம்பி3 பிளேயர், அதற்கான இயக்கத்திற்கு ஒரே கீ, எப்.எம். ரேடியோ, ஐந்து எல்.இ.டி. டார்ச், அதிகப்படுத்தக் கூடிய மெமரி, க்யூ.வி.ஜி.ஏ., 1.8 அங்குல திரை, ஜிமெயில், யாஹூ, லோட்டஸ் நோட்ஸ் போன்ற வற்றை அணுக Mobee.in வசதி, குவெர்ட்டீ கீ போர்டு எனப் பல வகையான வசதிகளை உள்ளடக் கியுள்ளது. இதன் விலை ரூ.2,000 மட்டுமே. Buddy AQ9+ போன் மேலே தரப்பட்ட அனைத்து வசதிகளுடன் சற்று அகலமான 2 அங்குல திரையு மற்றும் விஜிஏ கேமரா கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,500. இவை சிகப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.


 


Advertisement