தாமரைத் தாயார்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 நவ
2011
00:00

நவ., 28 - திருச்சானூர் தேரோட்டம்

திருச்சானூர் எனும் திருத்தலத்தில் குடி கொண்டிருக்கும் பத்மாவதி தாயார், செல்வ வளம் தருபவள். இவளது வரலாறைக் கேளுங்கள்...
பூலோகத்தில் கலியுகம் துவங்கி, அநியாயங்கள் பெருகின. இதை தடுக்க, பூலோகத்தில் சீனிவாசனாக அவதாரம் செய்தார் திருமால். ஒரு புளியமரத்தின் புற்றில் இருந்த அவரை, அங்கு வந்த மாடு ஓட்டும் தொழிலாளி தலையில் அடித்து விட்டான். அதில் காயமடைந்த அவர், மருந்திடுவதற்காக மூலிகையை தேடிச் சென்றார். வழியில் வராஹ மூர்த்தியின் ஆசிரமத்தில் வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) என்ற பெண்மணியை பார்த்தார். வந்திருப்பது முற்பிறப்பில் தன் பிள்ளையாக வளர்ந்த கண்ணனே என்பதை உணர்ந்து, பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அவளை, "அம்மா' என்று பாசத்துடன் அழைத்தார். வகுளாதேவி தன் பிள்ளைக்கு, "ஸ்ரீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டாள்.
இங்குள்ள சந்திரிகிரியை, ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி, தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி, புத்திர காமேஷ்டி யாகம் செய்ய ஏற்பாடு செய்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு, "பத்மம்' என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு, "பத்மாவதி' என்று பெயரிட்டான்.
ராமாவதாரத்தின் போது வேதவதி எனும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், அந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதம் கடைபிடித்ததால், அவளை மறு அவதாரத்தில் மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படி வேதவதியே, பத்மாவதியாகப் பிறந்தாள். சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது.
பத்மாவதி, திருச்சானூர் எனும் அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள்.
"அலர்மேலு' என்பதையே, "அலமேலு' என சொல்கிறோம். இதை, "அலர்+மேல்' அல்லது "அலை+மேல்' என பிரிக்கலாம். "அலர்' என்றால் மலர்தல். "தாமரை மலர் மேல் பிறந்தவள்' என்பதாலும், "பாற்கடல் அலைமேல் பிறந்தவள்' என்பதாலும் இந்தப் பெயரை பெற்றாள்.
இவள் பிறப்பதற்கு தாமரையை ஏன் தேர்ந்தெடுத்தாள் தெரியுமா?
விண்ணுலகில் இருந்து, "பூ' உலகிற்கு வருகிறாள் லட்சுமி. உலகத்தையே, "பூ' லோகம் என்பதால், ஒரு பூவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவளது ஆசை. மேலும், பெண்களுக்கு மிகவும் விருப்பமானது பூ. பூங்கோதை, பூங்கொடி என்றெல்லாம் அவர்களை வர்ணிப்பது இயற்கை. அந்த பூக்களிலும் உயர்வானது தாமரை. "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை...' என்ற தேவாரப் பாடல் ஒன்றில் கூறப்பட்டுள்ளதில் இருந்து, இதன் அருமையைப் புரிந்து கொள்ளலாம். எனவே, தான் <உயர்ந்த தாமரை மலரை தன் பிறப்பிடமாக தேர்ந்தெடுத்தாள் பத்மாவதி.
இவள், "பத்மஹஸ்தம்' என்ற நிலையில் கையில் தாமரை மலரை வைத்திருக்கிறாள். செந்தாமரை மலர் மீது அமர்ந்திருக்கிறாள். அவள் வாழும் இடத்துக்கு, "கமலாலயம்' என்று பெயருண்டு.
அவள், தன் கணவன் திருமாலின் மேல் நிறைய பக்தியுள்ளவள். அவரது மார்பிலேயே வசிப்பவள். தினமும் அவரை தழுவ வேண்டும் என்பதற்காக தாமரையாக மாறி, குளங்களில் அமர்ந்தாள். அரங்கநாதருக்கு, 1,001 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வதை மிகவும் விசேஷமாக கூறுவர். இவ்வாறு அர்ச்சனை நடப்பதன் மூலம் அவரைத் தழுவும் பாக்கியத்தை லட்சுமி தாயார் உருவாக்கி கொண்டாள்.
மேலும், விஷ்ணுவும், தன் உந்தியிலேயே செந்தாமரை மலரை காம்புடன் உருவாக்கி, அதன் மேல் பிரம்மாவை அமர்த்தி கொண்டார். பிரம்மாவும் அந்த தாமரை மலரில் அமர்ந்தபடி தான், உயிர்களைப் படைக்கும் தொழிலைச் செய்கிறார்.
அசுவினி தேவர்கள் எனப்படும் மருத்துவக் கடவுளருக்கு நீலத்தாமரையை அர்ச்சிக்கும் வழக்கம் இருந்ததாக குறிப்பிடுகிறது ரிக்வேதம். அவ்வகையில், பத்மாவதி தாயாருக்கு விருப்பமான தாமரை, நோய் தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது. கோவில்களில் தாமரை மலர் குளங்கள் அமைந்தது கூட இதனால் தான்.
இந்த தாமரை தாயாருக்கு, திருச்சானூரில் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்படும். இதன் முக்கிய விழாவான தேரோட்டத்தை தரிசிப்பவர்கள், செல்வ வளம் பெற்று, சிறப்புடன் வாழ்வர்.
***

தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.