ஒரு மாணவன், ஒரு கேமரா, ஒரு நாள், ஒரு சாதனை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 நவ
2011
00:00

நெய்வேலியில் உள்ளது ஜவஹர் உயர்நிலைப்பள்ளி.
நெய்வேலியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் மாணவ - மாணவியருக்கும் மற்றும் பொது மக்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும்; நெய்வேலி என்பது நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு தொழில் நகரம் என்றளவில் மட்டுமே தெரிந்தவர்களுக்கு, இதன் பசுமையை வெளிப்படுத்த வேண்டும்; அதன் மூலம் இந்த நெய்வேலியின் சுற்றுச்சூழல் மீது அனைவருக்கும் உள்ள அக்கறையை மேம்படுத்த வேண்டும் என்பது பள்ளியின் திட்டம்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட மாணவனே திவாகரன்.
அந்த பள்ளியில் தற்போது பிளஸ் ஒன் படிக்கும், புகைப் படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன், காலை, 6:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை நெய்வேலியில் பசுமை தொடர்பான படங்களை எடுத்து, அதை, உடனடியாக பிரின்ட் போட்டு, அந்த படங்களை வைத்து, சுற்றுச் சூழல் தினமான மறுநாள் கண் காட்சி நடத்த வேண்டும்; இதை, அனைவரும் பார்வையிட வேண்டும். இதுதான் திட்டம். லிம்காவும், சாதனைப் புத்தகமும் இந்த திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியது.
இதற்கான திட்டமிடலில் துவங்கி, அனைத்து வேலைகளையும், <உதவிகளையும் செய்ய தலைமையாசிரியர் யசோதா, ஓவிய ஆசிரியர்கள் செ.பார்த்திபன், ந.செல்வன் உள்ளிட்டோர் கொண்ட குழுவின் வழிகாட்டுதலின்படி பயணம் துவங்கியது.நெய்வேலி நிறுவனமும் அனுமதியையும் வழங்கி, பையனின் ஆர்வத்தை ஊக்குவித்தது.
காலை, 4:00 மணிக்கு தயாராகி, நெய்வேலி நுழைவு வாயிலிற்கு வந்த மாணவன் திவாகரன், ஒரே நாளில் குறைந்தது, ஆயிரம் பசுமையான படங்களையாவது எடுத்து விட வேண்டும் என்று துடிப்புடன் சரியாக காலை, 6:00 மணிக்கு கிளம்பினான்.
அவனுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்யவும், வழிகாட்டவும் ஒரு குழு உடன் சென்றது.
ஆர்வம் கொப்பளிக்க காலை உணவு, தேநீர் போன்றவைகளைக் கூட தேடாமல், பசுமையான இடங்களை தேடி பயணம் செய்தான். இப்படியாக, 20 கி.மீ., சுற்றளவில் உள்ள நெய்வேலியை சுற்றி, சுழன்று மாலை, 6:00 மணி வரை படம் எடுத்த போது, அயர்ச்சிக்கு பதில் முகத்தில் அபாரமான மகிழ்ச்சி. காரணம், எண்ணியதை விட கூடுதலாக அதாவது, 1,555 படங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதில், ஐநூறு படங்களை மட்டுமே கண்காட்சியில் வைக்க முடியும் என்ற நிலையில், அனுபவம் மிக்கவர்களைக் கொண்டு, அதற்கான படங்களை தேர்வு செய்து, அதன் பின் கடலூர் சென்று, அங்குள்ள கலர் லேப்பில், ஐநூறு படங்களையும் பெரிய அளவில் பிரின்ட் போட்டு, திரும்ப நெய்வேலிக்கு எடுத்து வந்து, அதற்கான அரங்கத்தில் படங்களை பார்வைக்கு ஏற்றபடி அடுக்கி வைத்து நிமிர்ந்த போது மறுநாள் காலை, 8 :00 மணி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்டபடி கண்காட்சி துவங்கிய போது, படங்களைப் பார்த்த, 15 ஆயிரம் மாணவ - மாணவியர்களாகட்டும், பொது மக்களாகட்டும், இது நம்ம நெய்வேலிதானா என்று வியந்து போயினர்.
கேள்விப்பட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த விருந்தினர்கள், மாணவன் திவாகரனின் சாதனையையும், அவரது சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் பாராட்டினர்.
கண்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே சென்ற பொது மக்களில் பலர், வாசலில் இருந்த செடி, கொடிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடி சென்றனர்.
***

எல். முருகராஜ்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thivakar Thivan - Neyveli,இந்தியா
06-ஜூன்-201300:30:22 IST Report Abuse
Thivakar Thivan உங்கள் அன்பு கருத்துக்கு மிக்க நன்றி மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - oman,இந்தியா
02-டிச-201113:09:07 IST Report Abuse
SENTHIL vaazthukal
Rate this:
Share this comment
Cancel
என்.ஸ்ரீதர் - kuwait,குவைத்
02-டிச-201100:25:15 IST Report Abuse
என்.ஸ்ரீதர் நல் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் என்.ஸ்ரீதர்
Rate this:
Share this comment
Cancel
ரியாஸ் - சென்னை,இந்தியா
01-டிச-201112:43:33 IST Report Abuse
ரியாஸ் அன்று நடந்த அந்த சம்பவத்தினை அப்படியே என் கண் முன் நிறுத்திய எழுத்தாளருக்கு (எல். முருகராஜ்) மிக பெரிய பாராட்டுக்கள்!!! இந்த கட்டுரையை படிக்கும் பொழுது சிறு இடைவெளி விட கூட மனம் ஒப்புக்கொள்ளவில்லை!! வாழ்த்துக்கள் திவாகரன்!!!
Rate this:
Share this comment
Cancel
சுமதி - சென்னை,இந்தியா
01-டிச-201112:17:31 IST Report Abuse
சுமதி Dear, diwakar u done a great job, ur school and ur city became a famous because of ur photograph nice. may god bless u all the best for ur future
Rate this:
Share this comment
Cancel
JAGANATHAN - melanikuzhi,இந்தியா
01-டிச-201110:35:07 IST Report Abuse
JAGANATHAN வாழ்த்துக்கள் தம்பி
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீதர் - ஓமன்,இந்தியா
30-நவ-201110:32:18 IST Report Abuse
ஸ்ரீதர் வாழ்த்துகள்... முதன் முதலில் நெய்வேலியை உன் கேமராக்குள் அடக்கி விட்டாய்
Rate this:
Share this comment
Thivakar Thivan - Neyveli,இந்தியா
27-மே-201318:02:12 IST Report Abuse
Thivakar Thivanமிக்க நன்றி சார் ஸ்ரீதர்...
Rate this:
Share this comment
Cancel
hari - kaLakkad,இந்தியா
30-நவ-201107:14:22 IST Report Abuse
hari வியத்தகு சாதனை . மற்ற ஊர் மக்களும் பள்ளிக்கூடமும் பின் பற்ற வேண்டியது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Delhi,இந்தியா
29-நவ-201113:01:27 IST Report Abuse
Balasubramanian Good effort keep it up
Rate this:
Share this comment
Cancel
Chitra - Delhi,இந்தியா
28-நவ-201101:11:17 IST Report Abuse
Chitra வாழ்த்துக்கள் திவாகரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.