ஜனவரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

*****
தமிழகம்
*****


ஜன., 3: இந்திய அறிவியல் காங்கிரசின் 98வது மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சென்னையில் நடந்தது.
ஜன., 7: ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூரில் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஜன., 9: தே.மு.தி.க., சார்பில் உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது.
ஜன., 24: புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலில் பலி.
ஜன., 27: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி., பெயரை மத்திய அரசு சூட்டியது.
ஜன., 29: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சேகர்பாபு தி.மு.க., வில் இணைந்தார்.


*****
இந்தியா
*****


ஜன., 2: இந்தியா ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 2 ஆண்டு ஒப்பந்தத்தில் உறுப்பினராக சேர்ந்தது. எம்.எல்.ஏ.,வுக்கு தண்டனை
ஜன., 4: பீகாரில் பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ் கி÷ஷார் கேஷ்ரியை, ரூபம் பதாக் என்ற பெண் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்தார். விசாரணையில் இப்பெண் ராஜ் கிஷோரால் மானபங்கம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இக்கொலை நடந்துள்ளது.
ஜன., 5: ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குஜ்ஜார் இனமக்கள் 17 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
ஜன., 6: உத்தரகண்ட் மாநிலத்தில் மூசூரியில் இருந்து ஹரித்துவார் சென்ற பஸ், பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலி.
ஜன., 11: ஆந்திராவுக்கான கிருஷ்ணா நதிநீர் பகிர்வை கண்டித்து, டில்லியில் ஜெகன்மோகன் ரெட்டி உண்ணாவிரதம்.
ஜன., 13: உத்தரபிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் கைது.
ஜன., 14: பாதுகாப்பு குளறுபடி: சபரிமலையில் ஜன., 14, மகரஜோதி காண்பதற்காக புல்மேட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது ஜீப் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 106 பேர் பலியாகினர்.
ஜன., 15: இந்திய வானிலை மையம் 2010ம் ஆண்டை "வெப்ப ஆண்டாக' அறிவித்தது.
ஜன., 19: மத்திய அமைச்சரவை விரிவாக்கம். இதில் மூன்று அமைச்சர்கள் புதிதாக இடம் பெற்றனர்.
ஜன., 20: மொபைல் எண்ணை மாற்றாமல், தொலைத்தொடர்பு நிறுவனத்தை மாற்றும் வசதி ( மொபைல் நம்பர் போர்டபிலிட்டி) நாடு முழுவதும் அமல்.
ஜன., 23: எடியூரப்பா மீது வழக்கு தொடர, அம்மாநில கவர்னர் பரத்வாஜ் அனுமதி. இதனால் எடியூரப்பா கவர்னர் பரத்வாஜ் இடையே மோதல்.
ஜன., 24: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தோனேசியா அதிபர் சுசிலோ பாம்பங் 3 நாள் பயணமாக இந்தியா வருகை.
* இந்தோனேசியா - இந்தியா இடையே பாதுகாப்பு துறை, நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜன., 25: 2011ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு 128 பேர் தேர்வு.
ஜன., 25: ஆண்டுதோறும் ஜன., 25ம் தேதி "தேசிய வாக்காளர் தினம்' கொண்டாட தேர்தல் ஆணையம் முடிவு.
ஜன., 28: ஆபிள் நிறுவனம் "ஐபாட்' எனும் டேபிள்டாப் கம்ப்யூட்டர் விற்பனையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவக்கியது.
ஜன., 29: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 37 இந்திய மீனவர்கள் விடுதலை.
* ஜன., 29: "செபி' எனப்படும் இந்திய பங்குசந்தை வாரியத்தின் புதிய தலைவராக யு.கே.சின்கா நியமனம்.


****
உலகம்
****


ஜன., 1: ஈஸ்தானியா நாடு, "யூரோ' நாணயத்துக்கு மாறியது. யூரோ வளையத்தில் சேர்ந்த 17வது நாடானது.
* அர்ஜென்டினாவின் வடகிழக்கு பகுதியில், ரிக்டரில் 7 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.
ஜன., 2: தென் அமெரிக்க நாடான பிரேசிலின் முதல் பெண் அதிபராக டில்மா ரூசெப்(63) பதவியேற்பு.
ஜன., 3: சிலியில் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
ஜன., 6: ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது குறித்து மக்களின் கருத்துகளை அறிவதற்கு ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஜன., 6ல் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. இதில் முக்கிய அம்சமாக தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு இல்லை என தகவல்.
ஜன., 9: ஒன்றிணைந்த சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாக உருவாக்குவதற்கான தேர்தல் நடந்தது.
ஜன., 10: ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 72 பேர் பலி.
ஜன., 11: பூமியை போன்ற மிகச்சிறிய "கெப்லர்-10பி' என்ற புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
* பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 800க்கும் மேற்பட்டோர் பலி.
ஜன., 14: புரட்சி ஆரம்பம்: துனீசியாவில் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 23 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிபர் அபிதின் பின் அலி ஜன.,14ல் பதவி விலகல்.
ஜன., 21: தேசியக்கொடிக்கு எதிர்ப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக காஷ்மீரின் லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றும் நோக்கத்தில், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் இவர்கள் ஜன., 25ல், லால்சவுக் பகுதியில் நுழைவதற்கு முன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜன., 24: விமானம் மீது தாக்குதல் ஜன., 24ல், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டொமொடிடோவோ விமான நிலையத்தில், ஒரு பயணிகள் விமானம் மீது பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 31 பேர் பலியாகினர். விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியது ஒரு பெண் பயங்கரவாதி என தெரிய வந்தது.


******
விளையாட்டு
******


ஜன., 4: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில், இந்திய வீரர் சச்சின் 51வது சதம் அடித்தார்.
* ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் கிரான்ட் பிளவர் ஓய்வு.
ஜன., 5: ஐ.சி.சி., கனவு அணியில் சச்சின், சேவக், கபில்தேவுக்கு இடம்.
ஜன., 6: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து வீரர் கோலிங்வுட் ஓய்வு.
ஜன., 7: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது.
ஜன., 9: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா சாம்பியன்.
* நான்காவது ஐ.பி.எல்., தொடரில், காம்பிர் அதிகபட்சமாக ரூ. 11.04 கோடிக்கு, கோல்கட்டா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஜன., 9: "சூப்பர்' ஜோடி: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஜன.,9ல், இந்தியாவின் பயஸ், பூபதி ஜோடி, நெதர்லாந்தின் ராபின், அமெரிக்காவின் மார்டின் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பயஸ்-பூபதி ஐந்தாவது முறையாக இப்பட்டத்தை வென்றது.
ஜன., 11: மெஸ்சி மந்திரம்: பிபா சார்பில் ஆண்டு தோறும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து
வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான விருது, (ஜன.,11ல்) பார்சிலோனா கிளப் அணி வீரர் லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதை வென்றார்.
ஜன., 15: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
ஜன., 26: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா, குரேஷி ஜோடி தோல்வியடைந்தது.
* ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கவுடாவுக்கு வெண்கலப் பதக்கம்.
ஜன., 29: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்றார் பெல்ஜியத்தின் கிளைஸ்டர்ஸ்.
* இரட்டையர் பைனலில் இந்தியாவின் பயஸ், பூபதி ஜோடி தோல்வி.
ஜன., 30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், சாம்பியன்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.