பிப்ரவரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

*****
தமிழகம்
*****


பிப்., 9: தமிழக வீட்டுவசதி வாரியத்தில் முறைகேடு தொடர்பாக கருணாநிதி மீது வழக்கு தொடர ஆளுநர் பர்னாலாவிடம் அனுமதி கோரிய சுப்ரமணிய சுவாமி மனுவால் பரபரப்பு.
பிப்., 16: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
பிப்., 18: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 136 பேர், 14 நாட்களுக்குப்பின் விடுதலை.
* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், "கலைஞர் டிவி' நிறுவனத்தில் சி.பி.ஐ., சோதனை


****
இந்தியா
****


பிப்., 2: திகாரில் ராஜா: பிப்., 2ல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா சி.பி.ஐ., போலீசாரால் கைது. அவருடன் டெலிகாம் உயர் அதிகாரி சித்தார்த் பெகுரா (இடது), உதவியாளர் சந்தோலியா (வலது) ஆகியோரும் கைது.
பிப்., 4: நேபாளத்தின் புதிய பிரதமராக ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கானல் தேர்வு செய்யப்பட்டார்.
பிப்., 6: சார்க் அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலராக மாலத்தீவை சேர்ந்த பாத்திமாதியானா சயித் பதவியேற்றார்.
* இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் பூடான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
* புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, "அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை துவக்கினார்.
பிப்., 9: ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஸ்வான் டெலிகாம் நிறுவன மேலாளர் ஷாகித் பல்வா சி.பி.ஐ., போலீசாரால் கைது.
பிப்., 10: ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை பணிப்பெண் என விமர்சித்தது தொடர்பான சர்ச்சையை அடுத்து ராஜஸ்தான் அமைச்சர் அமீன் கான் ராஜினாமா செய்தார்.
பிப்., 14: அமைச்சரின் தவறு: நியூயார்க்கில் பிப்., 12ல் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, இந்தியாவின் அறிக்கைக்கு பதிலாக, போர்ச்சுகல் அறிக்கையை வாசிக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் சுதாரித்துக்கொண்டு இந்திய அறிக்கையை படித்தார்.
பிப்., 16: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி சி.பி.ஐ., முன் ஆஜர்.
* மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது.
பிப்., 21: இந்தியாவுக்கான லிபிய தூதர் அலி அல் இசாவி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்., 24: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக "பார்லி கூட்டுக்குழு' அமைக்க மத்திய அரசு அனுமதி. எதிர்க்கட்சிகளின் நீண்ட கோரிக்கைக்கு பின் இக்குழு அமைக்கப்பட்டது. தலைவராக சாக்கோ நியமனம்.
பிப்., 26: வருமானத்துறையின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த விழாவில் புதிய 150 ரூபாய்
நாணயத்தை நிதியமைச்சர் பிரணாப் வெளியிட்டார்.
* அமெரிக்காவில் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் டாக்டருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை.
பிப்., 27: உலகிலேயே அதிகமான மனைவிகளுடன் (39) வாழ்பவர் என்ற பெருமையை மிசோராமின் ஜியோனா சான என்பவர் பெற்றார்.
* அமெரிக்காவின் சிகாகோ மாநகராட்சியின் கவுன்சிலராக அமெரிக்க வாழ் இந்தியர் தேர்வு செய்யப்பட்டார்.


****
உலகம்
****


பிப்., 7: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு குற்றபத்திரிகையில் முன்னாள் அதிபர் முஷாரப் பெயரும் சேர்ப்பு.
பிப்., 11: பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குரோஷி பதவி நீக்கம்.
பிப்., 11: மக்கள் புரட்சிக்கு வெற்றி: எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருந்த ஹோசினி முபாரக் பதவி விலக வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் போரட்டத்தில் குதித்தனர். இதில் 846 பேர் பலியாகினர். 6,000 பேர் காயமடைந்தனர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிப்., 11ல் பதவி விலகினார்.
பிப்., 19: எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து லிபியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது. 84 பேர் பலி.
பிப்., 22: எகிப்தில் நடந்த போரட்டத்துக்கு உதவிய பேஸ்புக் நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக ஒரு தம்பதியனர் குழந்தைக்கு "பேஸ்புக்' என பெயரிட்டனர்.
பிப்., 23: பூகம்பத்தின் பாதிப்பு: பிப்., 23ல், நியூசிலாந்தில் ரிக்டர் அளவில் 6.3 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் தென்பகுதியில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. வீடுகள் தடைமட்டமாகின. பூகம்பத்தில் 400 பேர் பலியாகினர். இது அந்நாட்டின் முக்கிய இயற்கை பேரழிவு சம்பவங்களில் ஒன்றானது.
பிப்., 24: கடைசி பயணம்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, ஆறு விண்வெளி வீரர்களுடன் பிப்., 24ல் டிஸ்கவரி விண்கலம் புறப்பட்டது. இதுவே இதன் கடைசி பயணம். நாசா இதற்கு முன் இந்த விண்கலத்தை 38 முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் மொத்தம் 352 நாட்கள் விண்வெளியில் வலம் வந்தது. 246 வீரர்கள் இதில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிப்., 25: பாலியல் வழக்கில் சிக்கிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சுவீடனுக்கு நாடு கடத்த பிரிட்டன் கோர்ட் உத்தரவு.
பிப்., 25: கடத்தல் டூ விடுதலை: ஒடிசாவில் மால்காங்ரி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா, இன்ஜினியர் பபித்ரா மஜி ஆகியோரை நக்சலைட்டுகள் கடத்தினர்.பிப்., 25ல் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
பிப். 26: அல்ஜீரியாவில் 19 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அவசர நிலை சட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்தது.


************
விளையாட்டு
************


பிப்., 5: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் சீன தைபே அணியிடம் தோல்வியடைந்தது.
பிப்., 9: சிகாகோ ஓபன் ஸ்குவாஷ் தொடரில், தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
பிப்., 9: "லாரஸ்' நட்சத்திரம் : பிப்., 9: உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான "லாரஸ்' விருதை ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் வென்றார்.
பிப்., 17: தேசிய விளையாட்டு, வாலிபால் போட்டியில் தமிழக அணி தங்கம் வென்றது.
பிப்., 17: கோலாகல துவக்கம்: பிப்., 17: : பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தின. துவக்க விழா வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்தது. இதில் இந்தியாவின் தோனி, உள்ளிட்ட 14 அணிகளின் கேப்டன்கள், வங்கதேசத்தின் தேசிய வாகனமான "ரிக்ஷாவில்' மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்டனர்.
பிப்., 19: உலக கோப்பை கிரிக்கெட், முதல் லீக் போட்டியில், இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது.
* பெண்கள் டென்னிஸ் ரேங்கிங், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி முதல் இடம்.
பிப்., 19: பதக்க வேட்டை: ராஞ்சியில் 34வது தேசிய விளையாட்டு போட்டி பிப்.,19ல் நடந்தது. இதன் நீச்சல் பிரிவில் டில்லியின் ரிச்சா மிஸ்ரா, 11 தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றார். தவிர, சிறந்த தடகள வீராங்கனைக்கான விருதினையும் பெற்றார்.
பிப்., 27: இந்தியா, இங்கிலாந்து இடையிலான உலககோப்பை லீக் போட்டி "டை'(தலா 338 ரன்கள்) ஆனது.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.