மார்ச்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


மார்ச் 1: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு. தேர்தல் நடைமுறை அமல்.
மார்ச் 6: மத்திய அரசில் இருந்து தி.மு.க., வெளியேறுவதாக அறிவித்தது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களிலேயே இம்முடிவு விலக்கிக்கொண்டது.
மார்ச் 12: தமிழகத்தில் புலிகள் முகாம்கள் எதுவும் இல்லை என இலங்கை அரசின் புகாருக்கு தமிழக காவல் துறை அறிவிப்பு.
மார்ச் 14: மத்திய கலால் வரி விதிப்பை திரும்பப் பெறக்கோரி, திருப்பூர் "சைமா' சங்கம் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தம்.
மார்ச் 16: கொலையா! தற்கொலையா!: ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடையவரும், ராஜாவின் நண்பருமான சாதிக்பாட்சா மார்ச் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
மார்ச் 21: தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது என வைகோ அறிவிப்பு.


********
இந்தியா
********


மார்ச் 1: குஜராத்தில் 2002ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பு.
மார்ச் 1: ஜார்க்கண்ட் முதல்வராக 2010, செப்டம்பரில் பதவியேற்ற அர்ஜுன் முண்டோ, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
* நாட்டில் புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் ரூபாய்க்கான குறியீடு இடம் பெறும் என பட்ஜெட்டில் பிரணாப் அறிவிப்பு.
மார்ச் 3: கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக ஹேமமாலினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்ச் 4: போபர்ஸ் வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி மீதான வழக்கை சி.பி.ஐ., வாபஸ் பெறுவதற்கு டில்லி நகர கோர்ட் அனுமதி வழங்கியது.
மார்ச் 4: மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆணையராக இருந்த பி.ஜே.தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு இழந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி பதவி விலகினார்.
மார்ச் 5: டில்லியில் இந்திய சுற்றுலாத் துறைக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் தவறி விழுந்து காயமடைந்த ஆஸ்திரேலிய பெண்ணுக்கு, 33 ஆண்டுகளுக்கு பின், கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு.
மார்ச் 6: எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகராமாக நடந்தது.
மார்ச் 6: இந்திரா பேரன் திருமணம்: மறைந்த பிரதமர் இந்திராவின் பேரனும், சஞ்சய் - மேனகா ஆகியோரின் மகனுமான வருண் - யாமினி திருமணம் வாரணாசியில் மார்ச் 6ல் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். ஆனால் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் திருமணத்துக்கு வரவில்லை.
மார்ச் 7: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்த புனே வர்த்தகர் ஹசன் அலியை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மார்ச் 12: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, "ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
மார்ச் 14: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய இளம் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
மார்ச் 15: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, காங்., கட்சியில் இணைந்தார்.
மார்ச் 25: ஒரிசா மாநிலம் "ஒடிசா' என்றும், ஒரியா மொழி "ஒடியா' என்றும் மாறுவதற்கு ராஜ்யசபா ஒப்புதல் வழங்கியது.
மார்ச் 31: இன்று 121 கோடி! நாளை...: இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் மார்ச் 31ல் வெளியிடப்பட்டது. இதன்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடியே 19 லட்சத்து 3 ஆயிரத்து 422 பேராக உயர்ந்தது. ஆண்கள் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 பேர். பெண்கள் 58 கோடியே 64 லட்சத்து 69 ஆயிரத்து 174 பேர். நாட்டின் எழுத்தறிவு 74 சதவீதம். தற்போது உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.


********
உலகம்
********


மார்ச் 2: அமெரிக்காவில் மருத்துவ வாரிய தலைவரை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளி டாக்டர் ரந்தீப் மான் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
* பாகிஸ்தான் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, பயங்கரவாதகளால் கொல்லப்பட்டார்.
மார்ச் 9: கிர்கிஸ்தான் அதிபர் ரோசா ஒட்டுன்பாயெவாவுக்கு, அமெரிக்க அரசு உலகின் துணிச்சலான பெண் என்ற விருதினை வழங்கியது.
மார்ச் 11: மீண்டும் சுனாமி: 2004ல் இந்திய துணைக்கண்டத்தில் சுனாமி ஏற்பட்டது. அடுத்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஒரு சுனாமி ஜப்பானில் மார்ச் 11ல், ஏற்பட்டது. அந்நாட்டில் சமீபத்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு இதன் பாதிப்பு இருந்தது.
மார்ச் 12: பதவி விலகல்: சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தனி நாடாக விடுதலை பெற பல ஆண்டுகளாக திபெத் போராடி வருகிறது. இந்நிலையில் இதன் ஆன்மிக தலைவரான பதினான்காவது தலாய்லாமா, திபெத் அரசின் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்து மார்ச் 12ம் தேதி, பதவியை ராஜினாமா செய்தார்.
மார்ச் 18: நாசாவின் மெசஞ்சர் விண்கலம், புதன் கோளின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்ற முதல் விண்கலம்.
மார்ச் 19: லிபியா மீது போர்: லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்திய அந்நாட்டு மக்கள் மீது லிபிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. லிபிய மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படையினர் மார்ச் 19ல் கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். நேட்டோ படை விமானங்கள் லிபியா மீது குண்டு மழை பொழிந்தன.
மார்ச் 20: லிபியாவில் அதிபர் கடாபி அரசுக்கு எதிராக, மேற்கத்திய நாடுகள் வான்வழித் தாக்குதலை தொடங்கின.
மார்ச் 25: மியான்மரின் வடக்கு பகுதியில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலி.
மார்ச் 30: மியான்மரின் புதிய அதிபராக தெய்ன் செய்ன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.


**************
விளையாட்டு
**************


மார்ச் 12: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியாவின் சச்சின் சதம் அடித்தார். இது சர்வதேச அரங்கில் இவரது 99வது சதம்.
மார்ச் 18: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இந்தியாவின் செய்னா நேவல், சாம்பியன்.
மார்ச் 24: ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில், ஒரு நாள் அரங்கில் 18 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.
மார்ச் 28: ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஷான் டெய்ட் ஓய்வு.
மார்ச் 30: உலககோப்பை அரையிறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.