Advertisement
ஏப்ரல்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


ஏப்., 13: கட்டுகோப்பான தேர்தல்: தமிழகத்தில் ஏப்., 13ல் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் பணபட்டுவாடா, போஸ்டர் கலாச்சாரம் ஆகியவை தடுக்கப்பட்டு அமைதியான தேர்தல் நடந்தது.
ஏப்., 19: இலங்கை தமிழர்களை மறுகுடியமர்த்த வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை.
ஏப். 20: நாவரசு கொலை வழக்கில், குற்றவாளியான ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.


********
இந்தியா
********


ஏப்., 1: அமெரிக்காவில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களில் கிரீன் கார்டு (நிரந்தர உரிமை) பெற்றவர்களின் வரிசையில் இந்தியா (69,169 பேர்) 3வது இடம்.
* இந்தியாவில் "புலிகள் மாநிலம்' என்ற பெயரை கர்நாடக மாநிலம் (300 புலிகள்) பெற்றது. முன்பு மகாராஷ்டிரா (257 புலிகள்), அப்பெயரை பெற்றிருந்தது.
ஏப். 2: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., துணை குற்றப் பத்திரிகை தாக்கல்.
ஏப். 5: ஊழலை ஒழிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரி, காந்தியவாதி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம். 9ம் தேதி உண்ணா விரதத்தை முடித்தார்.
ஏப்., 7: உளவு பார்த்ததாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட கோபால் தாஸ் என்ற இந்தியர் , 27 ஆண்டுகளுக்கு பின் விடுதலை.
ஏப்., 11: பாகிஸ்தானை சேர்ந்த 39 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் இந்தியா விடுதலை செய்தது.
ஏப்., 15: தாமதமான ஜாமின்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த டாக்டரும், சமூக ஆர்வலருமான பினாயக் சென், 2007ல் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மாநில அரசால் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனு பலமுறை தள்ளுபடி ஆனது. இந்நிலையில் இவருக்கு ஏப்., 15ல், சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
ஏப். 16: மகாராஷ்டிராவில், கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலின் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2,000 ஆண்டுகளாக நீடித்த தடை நீக்கப்பட்டது.


ஏப்., 17: அருணாசலப்பிரதேசத்தில் நிகழந்த் ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி.


ஏப்., 18: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கடைசி மன்னராக (40வது) இருந்த பவானி சிங் காலமானார்.


ஏப்., 20: கவுரவம்: புற்றுநோய் பற்றிய புத்தகம் எழுதிய அமெரிக்க இந்திய டாக்டர் சித்தார்த்தா முகர்ஜிக்கு, ஏப்., 20ல், எழுத்து உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
ஏப்., 25: விளையாட்டிலும் ஊழல்: இந்தியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், கட்டுமானம், ஜோதி ஓட்டம் முதல் போட்டி துவங்கும் வரை ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஏப்., 25ல், இதன் ஒருங்கிணைப்பு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி எம்.பி., சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஏப்., 27: ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாள் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டன.


********
உலகம்
********


ஏப்., 3: ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் அதிபர் தேர்தல் வெற்றி தொடர்பாக நடந்த கலவரத்தில் 800க்கும் மேற்பட்டோர் பலி.
ஏப். 7: நைஜர் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, மகமது இசோபு புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
ஏப்., 8: பிரேசிலில் ஒரு கல்லூரியில், ஆசிரியர் போல வந்த ஒருவர் மாணவர்களை கண்மூடித்தனமாக சுட்டத்தில் 12 மாணவர்கள் பலி.
ஏப்., 11: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடிய படி பர்தா அணிய பிரான்சில் தடை.
ஏப்., 12: உலகில் முதன் முதலாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் 50 ஆண்டு தினம் ரஷ்யாவில் கொண்டாடப்பட்டது.
ஏப்., 13: இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.,வின் மூன்று பேர் குழு தனது அறிக்கையை ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அளித்தனர்.
* சீனாவின் சான்யா நகரில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய "பிரிக்' நாடுகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது.
ஏப். 15: உலகின் மிக வயதானவர் என்று அறிவிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 114 வயது தாத்தா மரணமடைந்தார்.
ஏப். 16: இந்தியா - கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே, அணுசக்தி ஒப்பந்தம் மன்மோகன் சிங் - நுர்சுல்தான் நஜர்பயே ஆகியோர் சார்பில் கையெழுத்தானது.
ஏப்., 17: இந்திய மீனவர்கள் 22 பேர் பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
ஏப்., 20: தொடர் வெற்றி: இஸ்ரோ ஏப்., 20ம் தேதி, பி.எஸ்.எல்.வி., - சி16 என்ற ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இதில் ரிசோர்ஸ்சாட்-2, இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான யூத்சாட் மற்றும் சிங்கப்பூரின் எக்ஸ்சாட் ஆகிய மூன்று செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. இது 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.
ஏப். 26: இலங்கையின் இறுதிக்கட்டப் போர் குறித்த விசாரித்த ஐ.நா., நிபுணர் குழு, மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடந்துள்ளன என குற்றம் சாட்டியது.
ஏப். 27: திபெத்தின் புதிய பிரதமராக லாப்சேங் சாங்கே தேர்வு செய்யப்பட்டார்.
* அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஒரிஜினல் பிறந்த சான்றிதழை வெளியிட்டார்.
ஏப்., 30: மாயமாகி மரணம்: அருணாசலப்பிரதேச முதல்வராக இருந்த டோர்ஜி காண்டு மற்றும் 4 அதிகாரிகள் ஏப்., 30ல் ஹெலிகாப்டரில் தவாங்கிலிருந்து இடாநகருக்கு சென்றனர். செலபாஸ் என்ற இடம் அருகே ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியில் ஹெலிகாப்டர் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. டோர்ஜி காண்டு உள்பட அனைவரும் பலியாகினர்.


**************
விளையாட்டு
**************


ஏப்., 5: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிந்து, விலகினார் கிறிஸ்டன்.
ஏப்., 8: நான்காவது ஐ.பி.எல்., போட்டிக்கான துவக்க விழா, சென்னையில் நடந்தது.
ஏப்., 11: "பேமிலி சர்க்கிள் கப்' டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, சாம்பியன்.
ஏப்., 15: தொடர் நாயகன்: ஏப்., 15: பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவின் யுவராஜ் சிங் "ஆல்-ரவுண்டராக' அசத்தினார். 362 ரன்கள், 15 விக்கெட் வீழ்த்திய இவர் தொடர் நாயகன் விருதை வென்றார். இதற்காக ஜெர்மனியின் ஆடி கார் பரிசாக வழங்கப்பட்டது.
ஏப்., 13: ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையர்களால் வெளியே தள்ளி விடப்பட்ட இந்திய கால்பந்து வீராங்கனை சோனு சின்கா, இரு கால்களையும் இழந்தார்.
ஏப்., 27: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கான பரிசுத் தொகை தலா ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 2 கோடி ரூபாயாக உயர்வு.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.