மே
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


மே 2: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் கைது.
மே 16: மூன்றாவது முறை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா மே 16ல் பதவியேற்றார். மூன்றாவது முறையாக ஜெ., முதல்வராகியுள்ளார்.
மே 16: சாதித்த ரங்கசாமி: காங்., கட்சியில் இருந்து விலகி "என்.ஆர்.., காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார் ரங்கசாமி. புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு நடந்த சட்டசபை தேர்தலில் இவரது கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து மே 16ல் ரங்கசாமி முதல்வரானார்.
மே 25: தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கப்படாது என முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
மே 27: தமிழக சட்டசபை சபாநாயகராக ஜெயக்குமார், துணை சபாநாயகராக தனபால் ஆகியோர் பதவியேற்பு.
* சட்டசபை எதிர்கட்சி தலைவராக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பொறுப்பேற்பு.
மே 28:மேல் சிகிச்சை: நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மே 28ம் தேதி சிங்கப்பூர் சென்றார். பின் குணமடைந்து திரும்பினார்.
மே 30: தமிழக தேர்தல் கமிஷனராக சோ.அய்யர் பொறுப்பேற்பு.


********
இந்தியா
********


மே 5: அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக, அம்மாநிலத்தின் மின் துறை அமைச்சராக இருந்த ஜர்போம் கேம்லின் பதவியேற்றார்.
மே 6: உ.பி.,யில் 2008ல் மனோஷ் குமார் குப்தா என்ற இன்ஜினியரை கடத்தி கொலை செய்த வழக்கில், பகுசன் சமாஜ் எம்.எல்.ஏ., ஷேகர் திவாரிக்கு மரண தண்டனை.
மே 8: மேற்குவங்க சபாநாயகராக ஹசிம் அப்துல் கலிம் என்பவர் 1982 - 2011 (29 ஆண்டுகள்) பதவி வகித்தார். உலகிலேயே அதிக ஆண்டுகள் சபாநாயகர் பதவி வகித்து சாதனை படைத்தார்.
மே 9: ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கு தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.
மே 10: கவுரவ கொலைகள் மிகப்பெரிய குற்றம் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு.
மே 11: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "லிசா ப்ளூ ஸ்விம்வேர்' நிறுவனம் தயாரித்த நீச்சல் உடையில் இந்து கடவுளின் உருவம் வெளியிடப்பட்டது. இதற்கு இந்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனம் மன்னிப்பு கோரியது.
மே 12: போபால் விஷவாயு தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மறு விசாரணை செய்வதில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
மே 13: அசாமில் நடந்த தேர்தலில் காங்., கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. தருண் கோகய் முதல்வரானார்.
* கேரளாவில் காங்., தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. உம்மன் சாண்டி முதல்வராக பொறுப்பேற்றார்.
* ஆந்திராவின் கடப்பா லோக்சபா தொகுதி, புலிவெந்துலா சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயலட்சுமி வெற்றி.
மே 14: போலி சான்றிதழ் மூலம் பைலட் வேலைக்கு சேர்ந்ததாக 19 பேர் உள்நாட்டு விமானத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
மே 18: செக்ஸ் புகார்: நியூயார்க் ஓட்டல் ஒன்றில் பெண் பணியாளரை கற்பழிக்க முயன்றதாக சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தனர். மே 18ல் பதவியை ராஜினாமா செய்தார். விசாரணையில் இவர் விடுவிக்கப்பட்டார்.
மே 19: "ஜி சாட் - 8' என்ற இந்தியாவின் அதிநவீன செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மே 20: 2010ம் ஆண்டு சினிமா துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
மே 20: 193 நாள் சிறைவாசம்: 2ஜி வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி மே 20ல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். "டிபி ரியாலிட்டி' நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதால், அந்நிறுவனம் கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளது என்பது தான் கனிமொழி மீதான புகார். பின் ஜாமீனில் வெளிவந்தார்.
மே 25: இந்தோ - ஆப்ரிக்கா மாநாட்டில் ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவ 22,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு.
மே 31: அசாமில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில், 36 பேர் பலி.


********
உலகம்
********


மே 1: லிபிய அதிபர் கடாபியின் இளைய மகன் சயீப் அல்-அராப், மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மே 7: இந்தோனேசிய விமான விபத்தில் 7 பேர் பலி.
மே 11: இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது, புலிகள் சரணடைவதை, இலங்கை ராணுவம் நிராகரித்தது என விக்கிலீக்ஸ் தகவல்.
மே 2: கனடாவில் நடந்த பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டீபன் ஹார்பர் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
மே 9: ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கல், 2009ம் ஆண்டுக்கான ஜவகர்லால் நேரு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மே 17: முதன் முதலாக...: இங்கிலாந்து ராணி எலிசபெத் நான்கு நாள் பயணமாக மே 17ம் தேதி அயர்லாந்து நாட்டுக்கு பயணம் சென்றார். 100 ஆண்டுகளுக்குப்பின் அயர்லாந்துக்கு சென்ற முதல் பிரிட்டன் ஆட்சியாளர் இவரே. கடந்த காலங்களில் பிரிட்டனுக்கும், அயர்லாந்துக்கும் கருத்து வேறுபாடுகளும், போர்களும் நடந்துள்ளன. இருநாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ராணியின் இப்பயணம் அமைந்தது.
மே 20: சிங்கப்பூரில் பதவியேற்ற புதிய அமைச்சரவையில் நான்கு தமிழர்கள் இடம்பெற்றனர்.
மே 30: ஜப்பானில் அணுஉலை விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, 2020ம் ஆண்டுக்குள், அணு உலைகளை முற்றிலுமாக மூடிவிட ஜெர்மனி முடிவு.


**************
விளையாட்டு
**************


மே 8: மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செய்னா நேவல், இரண்டாவது இடம்.
மே 9: சீனாவில் நடந்த ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் (48 கி.கி.,) தங்கம் வென்றார்.
மே 28: மீண்டும் சாம்பியன்: மே 28: நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
மே 30: கோலாலம்பூரில் நடந்த 54வது மலேசிய ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் விதர்வால் காடே மூன்று தங்கம் உட்பட 8 பதக்கம் வென்றார்.
மே 30: மகத்தான மணிப்பூர் அணி: மே 30: அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில், 65வது சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில், மேற்கு வங்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 43வது முறையாக பைனலுக்கு முன்னேறிய மேற்கு வங்க அணி, 31வது முறையாக சாம்பியன் கோப்பை வென்று சாதித்தது.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.