ஜூன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


ஜூன் 2: ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகிறது என சட்டசபையில் தீர்மானம்.
ஜூன் 4: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, சிறந்த நிர்வாக நடைமுறை, சுகாதாரத்தை பேணிக்காத்தது உள்ளிட்டவற்றிக்காக, ஐ.எஸ்.ஓ., 9001:2008 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜூன் 7: தடுக்க முடியுமா!: வேலூர் மாவட்டத்தில் ஜூன் 7ல், தனியார் "ஏசி' சொகுசு பஸ், எதிர்பாராதவிதமாக கால்வாயில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், பயணம் செய்தவர்களில் ஒருவரை தவிர 21 பேர், உடல் கருகி பலி. இதில் 5 பெண்களும் அடங்குவர்.
ஜூன் 7: யானைகள் அட்டகாசம்: ஜூன்., 7ல் மைசூரு நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள், நகரில் தாறுமாறாக ஒடியதால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஏராளமான கார்களை யானை உடைத்தது. மேலும் யானை தாக்கியதில் ஒரு வங்கி காவலாளி பலியானார். இருவர் காயமடைந்தனர். இறுதியில் வனத்துறையினர் யானையை பிடித்தனர்.
ஜூன் 8: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்.
ஜூன் 12: தே.மு.தி.க., மாநில அரசியல் கட்சியாகவும், முரசு நிரந்தர சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
ஜூன் 13: கோழைத்தனம்: மும்பையில் புலனாய்வு நாளிதழான "மிட் டே' நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேய் ஜூன் 13ல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எண்ணெய் மாபியா கும்பல்கள் மற்றும் நிழல் உலக தாதாக்களை பற்றியும் பத்திரிகையில் எழுதி வந்தார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 14: தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, முதன்முதலாக டில்லிக்கு சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
ஜூன் 15: மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக பள்ளிகள் 15 நாள் தாமதாமாக திறக்கப்பட்டன.
ஜூன் 27: ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் அருங்காட்சியகத்தை, அவரே திறந்து வைத்தார்.
ஜூன் 30: டி.சி.எஸ்., பங்களிப்புடன், மத்திய அரசின் "பாஸ்போர்ட் சேவை மையம்' மதுரையில் திறக்கப்பட்டது.


********
இந்தியா
********


ஜூன் 3: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிடும்படி சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
ஜூன் 4: ஊழல் எதிர்ப்பு ஆரம்பம்: வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ், தனது ஆதரவாளர்களுடன் ஜூன் 4ல் டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் அன்றைய நள்ளிரவிலேயே உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உண்ணாவிரதத்தை கலைத்தனர்.
ஜூன் 10: பார்லிமென்ட் விவகாரத்துறை செயலராக சந்திரசேகரன் நியமனம். இதற்கு முன் உஷா மாத்தூர் இப்பதவியில் இருந்தார்.
ஜூன் 12: உ.பி., யில் கொலை மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக, 27 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.
ஜூன் 13: இனி இலங்கைக்கு கப்பலில்...: தூத்துக்குடி- கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஜூன் 13ம் தேதி மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் வாசன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியா - இலங்கை இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 14: கேரளாவில் நக்சல்பாரிஇயக்கத்தைச் சேர்ந்த வர்கீஸ், 40 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு, ஐகோர்ட், ஆயுள் தண்டனை.
ஜூன் 18: இந்தியாவிலேயே மிக அதிக வயதான சிறைக் கைதியாக கருதப்படும், 108 வயதான பிராஜ் பிகாரி, ஜாமினில் விடுவிப்பு.
ஜூன் 23: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிபட்டு, மீட்கப்பட்ட, இந்தியாவைச் சேர்ந்த ஆறு கப்பல் மாலுமிகள் டில்லி திரும்பினர்.
ஜூன் 29: சிங்கூரில், டாடாவுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங் களை, விவசாயிகளுக்கு மீண்டும் திருப்பி அளிக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை.
ஜூன் 30: அமெரிக்காவின், "டைம்ஸ்' பத்திரிகை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய, 10 போராட்டங்கள் பட்டியலில் "உப்பு சத்தியாகிரகம்' இடம் பெற்றது.


********
உலகம்
********


ஜூன் 1: ஏமன் தலைநகர் சனாவில் அதிபர் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. இதில், 41 பேர் பலி.
ஜூன் 4: துனிசியா நாட்டின் கடல் பகுதியில் லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 200 பேர் பலி.
* மும்பை தாக்குதலுக்கு காரணமானஹர்கர்-உல்-ஜிகாத்-அல் இஸ்லாமி அமைப்பின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க ராணுவ குண்டுவீச்சில் பலி.
ஜூன் 6: ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜூன் 12: உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற பெருமையை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜன்ரி பலாவிங்(உயரம் 59.93 செ.மீ.,) பெற்றுள்ளார். கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.
ஜூன் 21: மீண்டும் பதவி: ஐ.நா., சபையின் பொதுச்செயலராக இருந்த தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன், ஜூன் 21ல், இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.
ஜூன் 23: லபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
ஜூன் 24: ஆப்கனில் இருந்து வரும் 2012ம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்பப்பெறுவர் என அதிபர் ஒபமா அறிவிப்பு.
ஜூன் 25: காபூல் அருகில், மருத்துவமனை ஒன்றில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் பலி.
ஜூன் 27: லிபிய அதிபர் கடாபி மீது சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.


**************
விளையாட்டு
**************


ஜூன் 3: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடிக்கு இரண்டாவது இடம்.
ஜூன் 4: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டிரினிடாட் நகரில் நடந்த "டுவென்டி-20' போட்டியில் இந்தியா வெற்றி.
* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர் பிரிவில், சீனாவின் நா லீ சாம்பியன்.
ஜூன் 5: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன்.
ஜூன் 16: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஜூன் 18: முனீச் நகரில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் அசத்திய இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஜூன் 22: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஜூன் 26: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் பைனலில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை செய்னா நேவல் இரண்டாவது இடம்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.