Advertisement
ஜூலை
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


ஜூலை 3: அரசு கேபிள் "டிவி' நிர்வாக இயக்குனராக ஜெயராமன், ஐ.ஏ.எஸ்., மற்றும் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்.
ஜூலை 3: சக்சேனா கைது: டி.எஸ்.செல்வராஜ் என்ற சினிமா அதிபரிடம் 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், சன் "டிவி' நிர்வாக இயக்குநர் ஹன்ராஜ் சக்சேனா ஜூலை 3ல், கைது செய்யப்பட்டார். இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படங்களை தயாரிப்பது மற்றும் மற்ற தயாரிப்பு படங்களை வாங்குவது போன்ற பணிகளை செய்தவர்.
ஜூலை 3: பதவி நீக்கம்: ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர்
தயாநிதி மாறன், ஜூலை 3ல் பிரதமர் உத்தரவின் படி பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த முறையும் பாதியிலேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
ஜூலை 3: ராணுவத்தின் தவறு ஜூலை 3ல், சென்னை ராணுவ குடியிருப்புக்குள் பாதாம் கொட்டை பறிக்க சென்ற தில்சான் என்ற சிறுவன் ராணுவ வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த கொடூர செயலை செய்த முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 7: தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள், பிரதமரின் கவுரவ விருதான, "சரம் விருது' க்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜூலை 11: கோவையில் ஏ.ஆர்.சி., சிக்னலில் வாலிபர் ஒருவரை, நான்கு பேர் பைக் ஏற்றி கொலை செய்தனர். இது சிக்னலில் கேமராவில் பதிவானது. இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தது துரதிர்ஷ்டவசமானது.
ஜூலை 13: மீண்டும்... மீண்டும்...: ஜூலை 13ல், மும்பையின் ஒபேரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் வெடுகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். கடந்த 2008ல் பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது, பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
ஜூலை 16: ஐகோர்ட் வளாகத்தில் நடந்த மாற்றுமுறை தீர்வு மையம் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், கடைசி நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.
ஜூலை 27: உளவுத்துறை போலீஸ் ஜாபர்சேட் மற்றும்கருணாநிதி உதவியாளராக இருந்த ராஜமாணிக்கம் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு.
ஜூலை 30: கைது படலம்: சேலம் அங்கம்மாள் காலணி நிலம், ப்ரீமியர் ரோலர் மில், ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூலை 30ம் தேதி, தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பால்மோகன் ராஜ் என்பவரின் நிலத்தை, மிரட்டி வாங்கியதாக கைதானார்.


********
இந்தியா
********


ஜூலை 1: கேரள முதல்வர் அலுவலகத்தில் நடக்கும் அனைத்தையும், 24 மணிநேரமும் மக்கள் காண வசதியாக, "லைவ் வெப்காஸ்ட்' எனும், இணைய நேரலை வசதி துவக்கம்.
ஜூலை 2: "டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கன்னட நடிகை மரியா 3 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை.
ஜூலை 4: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் 93 பேர் ராஜினாமா. பின் நிராகரிப்பு.
ஜூலை 7: உ.பி., மாநிலம், கன்ஷிராம்நகர் மாவட்டத்தில், ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பஸ் மீது, விரைவு ரயில் மோதியதில் 38 பேர் பலி.
ஜூலை 10: ஹவுராவில் இருந்து டில்லி சென்ற கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் உ.பி.,யில் தடம் புரண்டது. இதில் 85 பேர் பலி.
* மேற்கு வங்கத்தில் 2 அரசு மருத்துவ மனைகளில் மூச்சு திணறல், ஊட்டச் சத்து குறைவு, நோய்கிருமி ஆகிய காரணங்களால் 26 குழந்தைகள் பலி.
ஜூலை 13: மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 21 பேர் பலி.
ஜூலை 14: புதிய ஊழல் கண்காணிப்புக் குழு தலைவராக, பாதுகாப்பு துறை செயலராக இருந்த பிரதீப்குமார் பொறுப்பேற்பு.
ஜூலை 21: ஒடிசாவின் சண்டிப்பூர் பகுதியிலிருந்து, "பிரகார்' என்ற ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஜூலை 23: மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் ரெய்டு.
ஜூலை 27: இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெற்றது.
ஜூலை 31: புதிய வெளியுறவுத்துறை செயலராக ரஞ்சன் மேத்தா பொறுப்பேற்பு. அப்பதவியில் இருந்த நிருபமா ராவ், அமெரிக்காவின் இந்திய தூதராக நியமனம்.
ஜூலை 31: "சரண்டர்': கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, மகன்களுக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியதாக ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. ஜூலை 31ல், ராஜினாமா செய்தார்.


********
உலகம்
********


ஜூலை 3: தாய்லாந்தில் எதிர்க்கட்சியான பியூதாய் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு.
ஜூலை 5: வாஷிங்டனில் உள்ள, சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) முதல் பெண் தலைவராக, பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்ட் பதவியேற்பு.
ஜூலை 10: பிரிட்டனில் 160 ஆண்டு காலமாக செயல்பட்ட "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' எனும் பத்திரிகை அலுவலகம் மூடப்பட்டது.
ஜூலை 20: கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக தெற்கு சோமாலி யாவை பஞ்சத்துக்கு உள்ளான பகுதி என ஐ.நா., சபை அறிவிப்பு.
ஜூலை 21: நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம் தனது இறுதி பயணத்தை முடித்துக்கொண்டது. இதன் மூலம் அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்கல பயணம் நிறைவடைந்தது.
ஜூலை 22: நார்வேயில் பிரதமர் அலுவல கத்துக்கு வெளியே , பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலி.
ஜூலை 26: ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தென்பகுதியில் நடந்த விமான விபத்தில் 78 பேர் பலி.


**************
விளையாட்டு
**************


ஜூலை 2: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசின் கிவிட்டோவா கைப்பற்றினார்.
ஜூலை 3: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.
* விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, எலினா வெஸ்னினா(ரஷ்யா)ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது.
* பிரிட்ஜ்டவுன் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.
ஜூலை 17: 400 விக்கெட்: ஜூலை 7: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டொமினிகாவில் நடந்த 3வது டெஸ்டில், கார்ல்டன் பாக்கை போல்டாக்கிய இந்தியாவின் ஹர்பஜன் சிங், டெஸ்ட் அரங்கில் 400வது விக்கெட்டை பெற்றார். இதன்மூலம் கபில்தேவ், கும்ளேவுக்கு பின் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஜூலை 11: இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
ஜூலை 17: ஜெர்மனியில் நடந்த பெண்களுக்கான "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவை வீழ்த்திய ஜப்பான் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
ஜூலை 22: அனுபவம்: ஜூலை 22: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற டங்கன் பிளட்சர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி புதிய சாதனை படைத்தார்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.