ஆகஸ்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


ஆக., 2: "அலோபதி டாக்டர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவு.
ஆக., 3: தலைமைச் செயலகத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அறையை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஆக., 09: நீண்ட இழுபறி: தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆக., 9ல், உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சமச்சீர் கல்வி அமலானது.
ஆக., 10: கொலை முயற்சி வழக்கில் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதா கிருஷ்ணன் கைது.
ஆக. 12: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
செப். 9ம் தேதி தூக்கு என அறிவிப்பு.
ஆக., 15: பாரம்பரியமிக்க, 156 ஆண்டுகால பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து கிண்டி வரை இயக்கப்பட்டது.
* சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக போலீசார் 18 பேருக்கு, ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
* தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்த, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
ஆக. 17: இந்தாண்டு "பி.இ., கவுன்சிலிங் முடிவில், 44 ஆயிரத்து 139 இடங்கள் காலியாக இருந்தன.
ஆக. 18: தி.மு.க., ஆட்சியில் தலைமைச் செயலராக இருந்த மாலதி, விருப்ப ஓய்வு பெற்றார்.
* கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அமல்படுத்தப் படுவதாக முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஆக. 23: தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்ற சட்டம் நீக்கப்பட்டு, மீண்டும் சித்திரை முதல் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என தமிழக அரசு சட்டம் நிறைவேற்றம்.
ஆக., 25: ஜெயிலில் மாஜிக்கள்: கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த நேரு, அவரது தம்பி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி ஆகிய மூவர் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு, ஆக., 25ல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சீனிவாசன் என்பவரின் புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆக.30: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் மூன்று பேர் மீதான தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட் 8 வார கால இடைக்கால தடை.
ஆக., 31: தமிழகத்துக்கு புது கவர்னர்: தமிழக கவர்னராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா ஆக., 31ம் தேதி பதவியேற்றார். நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்றார். ரோசைய்யா ஆந்திர சட்டசபையில் தொடர்ந்து 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர். ராஜசேகர ரெட்டி மறைவுக்குப்பின், ஆந்திர முதல்வராக பதவி வகித்தார்.


********
இந்தியா
********


ஆக. 1: ரயில்களில் தொலைத்த பொருட்களை, உரியவர்கள் பெற, தெற்கு ரயில்வே பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கியது.
ஆக. 3: ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டி எம்.பி.,யாக பொறுப்பேற்பு.
ஆக., 3: புதிய முதல்வர்: கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை யடுத்து சதானந்த கவுடா ஆக., 3ல் முதல்வராக பொறுப்பேற்றார். இவர் எடியூரப்பாவின் ஆதரவாளர். பதவி ஏற்கும்போது எம்.பி.,யாக இருந்தார். இதையடுத்து டிசம்பரில் சட்ட மேலவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.சி., ஆனார்.
ஆக., 9: "தேர்வு எழுதியவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருத்தப்பட்ட தங்களது விடைத்தாள் களைப் பார்ப்பதற்கு உரிமை உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
ஆக. 18: புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா எழுதிய நூல், சாகித்ய அகடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
ஆக., 18: ராஜினாமா: ஊழல் குற்றச்சாட்டப்பட்ட கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் மீது, ஆக., 18ல், கண்டன தீர்மானம் நிறைவேறியது. பின் நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.
ஆக. 21: உத்தர பிரதேசத்தின் காசிப்பூரில் உள்ள சதிமாதா கோவில் திருவிழாவுக்கு சென்ற பாலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 45 பேர் விபத்தில் சிக்கி பலி.
ஆக. 24: பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் தலைவராக வீரேந்திரகுமார், துணைத் தலைவராக தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்.


********
உலகம்
********


ஆக. 5: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் 31 பேரை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
* சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கொண்ட "செயற்கைக்கோள்' படத்தை நாசா வெளியிட்டது.
ஆக. 6: லண்டனில் கலவரம்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆக. 6ம் தேதி, கருப்பர் இனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது மான் செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களுக்கும் பரவியது. பொதுச்சொத்துகள் சேதபடுத்தப்பட்டன.
ஆக. 7: அமெரிக்காவுக்கான கடன் மதிப்பீடு "ஏஏஏ' என்ற மதிப்பில் இருந்து "ஏஏ+' என்ற மதிப்பாக குறைக்கப்பட்டது.
ஆக. 22: லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலகக்கோரி ஆறு மாதமாக போரட்டம் நடத்திய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டிரிபோலியை கைப்பற்றினர்.
ஆக. 24: அமெரிக்காவில், நூறு ஆண்டுகளுக்குப் பின், கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆக. 28: நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாபுராம் பட்டாராய் பதவியேற்றார்.
ஆக. 29: ஜப்பான் பிரதமர் நவோட்டோ கான் பதவி விலகினார். அந்நாட்டு நிதியமைச்சர் யோஷிஹிக்கோ நோடா புதிய பிரதமரானார்.


**************
விளையாட்டு
**************


ஆக., 1: அமெரிக்காவில் நடந்த சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா, கஜகஸ்தானின் ஷிவ்தோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
* சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய வீரர் ரஞ்சன் சோதி "நம்பர்-1' இடம் பிடித்தார்.
ஆக., 13: இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடந்த மூன்றாவது டெஸ்டில், தோல்வி அடைந்த இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது.
ஆக., 14: லண்டனில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
* அமெரிக்காவில் நடந்த தடகளப் போட்டியில், இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா தங்கம் வென்றார்.
ஆக., 22: அமெரிக்காவில் நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், பூபதி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
* இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த நான்காவது டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
ஆக., 24: கால்பந்து "கடவுள்': ஆக., 24: இந்திய கால்பந்து ரசிகர்களின் "கடவுளாக' போற்றப்பட்ட முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா ஓய்வு பெற்றார். இதுவரை 109 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பூட்டியா, 43 கோல் அடித்துள்ளார். இதன்மூலம் 100 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
ஆக., 29: முதல் இந்தியர்: ஆக., 29: விளையாட்டு அரங்கில் மிக உயர்ந்த "ராஜிவ் கேல் ரத்னா' விருதை, துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் பெற்றார். உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இவர், லண்டன் ஒலிம்பிக் (2012) போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.