செப்டம்பர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


செப். 2: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
* "தமிழக அரசின் இலவச திட்டங்களை நிறுத்த முடியாது' என, பொதுநல வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு.
செப்., 8: ""சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகில், 311 ஏக்கரில், அனைத்து வசதிகளும் கொண்ட ("சேட்டிலைட் டவுன்ஷிப்') அமைக்கப்படும்.
* இந்து முன்னணி மாநில தலைவராக இருந்த ராஜகோபாலன் கொலை வழக்கில், 17 ஆண்டுகளுக்கு பின் ஆறு பேருக்கு, நெல்லை கோர்ட்டில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
செப்., 9: இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை, இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
செப்., 11: சதியா! கலவரமா!: செப்., 11ல் பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் நடத்திய, இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகினர். போலீசார் சிலர் காயமடைந்தனர்.
செப்., 11: மின்சாரமா! பாதுகாப்பா!: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அதனை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செப்., 11 முதல் போராடுகின்றனர்.
செப்., 12: 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் , தொழிலாளர் களுக்கு மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
செப்., 13: தொடரும் ரயில் விபத்துகள்: செப்., 13ம் தேதி, சித்தேரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரக்கோணம் - காட்பாடி பயணிகள் ரயில் மீது, சென்னை கடற்கரை - வேலூர் சென்ற மின்சார ரயில் பின்புறமாக மோதியதில் 10 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
செப்., 29: தர்மபுரி அருகே வாச்சாத்தி பழங்குடியின கிராம மக்கள் பாலியல் துண்பத்துக்கு ஆளான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, 215 வன அதிகாரிகளுக்கும் தண்டனை.
செப்., 30: முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், மீதான நிலுவையில் இருந்த பிறந்த நாள் பரிசு வழக்கை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.


********
இந்தியா
********


செப். 1: ராஜ்யசபாவில் கண்டன தீர்மானத்துக்கு உள்ளான கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
* டில்லி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூன்று நாள் சஸ்பெண்ட்.
செப்., 2: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமது குடும்பத்துக்கு 38 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக வெளியிட்டார்.
* சீனாவின் பழங்காலத்து செய்யுட்களை இந்தியில் மொழி பெயர்த்ததற்காக, சீனாவின் உயரிய விருது, பேராசிரியர் பி.ஆர்.தீபக் என்ற இந்தியர்க்கு முதன்முதலாக வழங்கப்பட்டது.
செப். 5: சட்டவிரோதமாக சுரங்க தொழிலில் ஈடுபட்ட கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சி.பி.ஐ., போலீசாரால் கைது.
செப்., 7: 15 ஆண்டுகள்... 19 குண்டுவெடிப்புகள்: டில்லியில் செப். 7ல் ஐகோர்ட் வளாகத்தில் கேட் நம்பர் ஐந்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர். 76 பேர் படுகாய மடைந்தனர். இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. நாட்டின் தலைநகரான டில்லி, தொடர்ந்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 19 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
செப்., 17: நாட்டில் சமூக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
* மோடிக்கு போட்டியாக காங்., கட்சியின் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
* மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு, கடந்த 2 ஆண்டுகளில் சரா சரியாக 30 சதவீதம் அதிகரித்துள்ளது என அரசு சார்பற்ற நிறுவன ஆய்வில் தகவல்.
செப்., 18: நிலநடுக்கம்: செப்., 18ம் தேதி, இந்திய வடகிழக்கு மாநிலம் சிக்கிம் - நேபாளம் எல்லையில் ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார், உத்திர பிரதேசம், டில்லி, மேகாலயா, அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்டோர் பலி.
செப்., 26: டில்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது, போலீசாரின் நடவடிக்கையால் காயமடைந்த , ராஜ்பாலா என்ற பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
செப்., 30: குஜராத் மாநிலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது. முன்னதாக மோடிக்கு எதிராக குற்றம் சாட்டியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.


********
உலகம்
********


செப். 7: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 36 பேர் பலி.
செப்., 11: ஆப்கானிஸ்தானின் வார்டாக் மாகாணத்தில் அமெரிக்கப் படை முகாம் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 77 அமெரிக்க வீரர்கள் பலி.
* அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதன் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு "நினைவு சின்னம்' திறக்கப்பட்டது.
செப்., 13: பிரேசிலில் நடந்த "மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் அங்கோலாவின் லைலா லோப்ஸ் அழகிப்பட்டம் வென்றார். இந்தியாவின் வாசுகி இறுதிக்கட்டத்தையே எட்டவில்லை.
* 2011ம் ஆண்டுக்கான ஐ.நா., பொது சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
செப்., 25: சுற்றுலா பரிதாபம்: செப்., 25ம் தேதி நேபாளாத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அழகை காண சுற்றுலா சென்ற புத்தா விமானம், கோட்டாண்டா வனப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகினர். இதில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். இந்த 8 பேரும் இந்திய கட்டுமான சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
செப்., 26: அமெரிக்கா 1991ம் அனுப்பிய செயற்கைக்கோள் 20 ஆண்டுகள் கழித்து பூமியில் விழுந்தது.


**************
விளையாட்டு
**************


செப்., 4: டேகு, உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர், 4*100 மீ., ஓட்டத்தில் ஜமைக்கா அணி உலக சாதனை (37.04 வினாடி).
செப்., 5: ஆசிய இளைஞர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர், இந்தியாவின் பூர்ணிமாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்.
செப்., 11: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்தியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, சாம்பியன்.
செப்., 12: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர், பெண்கள் ஒற்றையரில், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் முதன்முறையாக பட்டம் வென்றார்.
செப்., 13: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர், ஆண்கள் ஒற்றையரில், செர்பியாவின் டோகோவிச் முதன் முறையாக சாம்பியன் ஆனார்.
செப்., 16: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரின் மகன் அயாஜுதீன்(19), பைக் விபத்தில் மரணம்.
செப்., 16: ஒரு நாள் போட்டிக்கு "குட்பை': செப்., 16: இந்திய அணியின் "பெருஞ்சுவர்' என்றழைக்கப்படுபவர் டிராவிட், 38. சிறந்த "மிடில் ஆர்டர்' வீரரான இவர், 2007 <உலக கோப்பை தொடரின் போது கேப்டனாக இருந்தார். இதில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேற, பதவி விலகினார். பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்கு வருகிறார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான கார்டிப் போட்டியுடன், சர்வதேச ஒருநாள் அரங்கில் இருந்து டிராவிட் விடை பெற்றார்.
செப்., 17: பிரசல்ஸ், "டயமண்ட் லீக்' தடகள போட்டி, 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கம் கைப்பற்றினார்.
செப்., 18: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர், உலக சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி (1-3) ஜப்பானிடம் தோல்வி.
செப்., 19: இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவரானார் சீனிவாசன்.
செப்., 22: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மன்சூர் அலி கான் பட்டோடி, 70, மரணம்.
செப்., 27: ஈரானில் நடந்த பாரம்பரிய கபடி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, சாம்பியன்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.