அக்டோபர்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


அக்., 10: ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன் "டிவி' நிறுவனம் ஆகியவற்றில் சி.பி.ஐ., சோதனை.
* சென்னை ஐகோர்ட்டில் பெண்கள் உட்பட, 430 போலீசாரை கொண்ட பாதுகாப்பு படை நடைமுறைக்கு வந்தது.
அக்., 11: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெ., பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் இரண்டு நாட்கள் நேரில் ஆஜர்.
அக்., 14: இதிலும் ஊழலா: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் மற்றும் அதன் தலைவர் செல்லமுத்து மற்றும் அதிகாரிகள் வீடுகளில் அக்., 14ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
அக்., 21: உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 10 மேயர் பதவிகளையும் அ.தி.மு.க., கைப்பற்றியது. இதில் சென்னை மேயர் பதவியை முதன்முறையாக அ.தி.மு.க., பிடித்தது.
அக்., 24: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி எம்.எல்.ஏ., வாக பதவியேற்பு.
அக்., 28: தாக்குதல் முறியடிப்பு: அத்வானியின் ஊழல் விழிப்புணர்வு யாத்திரை அக்., 28ல் மதுரை வந்தது. தொடர்ந்து அவர் கேரளா செல்லும் வழியில் திருமங்கலம் அருகே பாலத்தில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அக்., 31: நாட்டில் முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள, தேசிய தலைமை எய்ட்ஸ் பரிசோதனை ஆய்வுக் கூடத்துக்கு,தேசிய அங்கீகாரம் கிடைத்தது.


********
இந்தியா
********


அக்., 1: "ஐ.என்.எஸ்., சக்தி' என்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய போர்க்கப்பல், கப்பற்படையில் சேர்க்கப்பட்டது.
அக்., 10: லோக்பால் மசோதா தொடர் பாக, கூட்டுக்குழுவினர் நடத்திய ஆலோசனை குறித்த விவரங்களை ஆடியோ சி.டி.,யாக மத்திய அரசு வெளியிட்டது.
அக்., 11: ஊழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 36 நாள் யாத்திரையை தொடங்கினார்.
அக்., 12: "மெகா ட்ராபிக்ஸ்' உள்ளிட்ட நான்கு செயற்கைக்கோள்களுடன், "பி.எஸ்.எல்.வி., சி18' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அக்., 12: பிரசாந்த் பூஷனுக்கு அடி: அக்., 12ல் சுப்ரீம் கோர்ட் வளாக அலுவலகத்தில் இருந்த ஹசாரே குழு உறுப்பினரும், வழக் கறிஞருமான பிரசாந்த் பூஷனை இருவர் கடுமையாக தாக்கினர். இது காமிராவில் பதிவானதால் "டிவி' யில் ஒளிபரப்பானது. காஷ்மீர் பற்றிய இவரது சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக இந்த தாக்குதல் நடந்தது.
அக்., 15: அரசு நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவுப்படி கைது.
அக்.,17: அரியானாவின் ஹிசார் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஹரியானா ஜன்ஹித் காங்., கட்சியை சேர்ந்த குல்தீப் பிஷ்னோய் வெற்றி பெற்றார்.
அக்., 20: பெங்களூருவில் "நம்ம மெட்ரோ' ரயில் சேவை தொடக்கம்.
அக்., 29: அருணாச்சலப் பிரதேசத்தின், காமங்க் ஆற்றின் மீது அமைக்கப் பட்டிருந்த தொங்கு பாலம் உடைந்ததில் 50 பேர் பலியாகினர்.
* நாட்டில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய அரசு தகவல்.


********
உலகம்
********


அக்., 3: மருத்துவதுறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ப்ரூஸ் பட்லர், பிரான்சின் ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடாவின் ரால்ப் ஸ்டெயின்மென் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டது.
அக்., 6: இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, சுவீடன் கவிஞர் டோமஸ் டிரான்ஸ்ட்ருமர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அக்., 10: சவுதியில் எட்டு வங்கதேச தொழிலாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்.
* அமெரிக்காவில் வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து "வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு' எனும் போரட்டம் நடந்தது. இது கிரீஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் பரவியது.
அக்., 11: பிரிட்டன் ஐகோர்ட்டில், முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான ரபீந்தர் சிங் என்ற சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
அக்., 12: "சி' எனும் கம்ப்யூட்டர் மொழியை கண்டுபிடித்த டென்னிஸ் ரிட்சி மரணம்.
அக்., 13: மன்னர் திருமணம்: பூடானின் ஐந்தாவது மன்னரான ஜிக்மே கசர் நாம்கியல் வாங்சுக் - ஜெட்சுன் பெமா ஆகியோரது திருமணம் அக்., 13ல் பூடானில் உள்ள பாரம்பரியம் மிக்க புனாகா கோட்டையில் நடந்தது. திருமண நிகழ்ச்சி பூடான் மீடியாக்களில் நேரடியாக ஒளிபரப்பானது.
அக்., 20: சர்வாதிகாரியின் மரணம்: லிபிய அதிபராக 42 ஆண்டுகாலம் பதவி வகித்த கடாபி, பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்குழு மீது கடாபியின் ராணுவவீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து போராட்டக்குழுவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நேட்டோ படை, லிபியா மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. போராட்டக்குழுவினரால் அக்., 20ல் கடாபி கொல்லப்பட்டார்.
அக்., 22: விடுதலைபுலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்து கோர்ட் தீர்ப்பு.
அக்., 23: துருக்கியில் ரிக்டர் அளவில் 7.2 என்ற அளவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 276 பேர் பலி.
அக்., 30: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் ஆளில்லா விண்கலத்தை, ரஷ்யா முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
* சீனாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 95 கோடியை எட்டியது.
அக்., 31: உலகம் தாங்குமா!: உலக மக்கள்தொகை அக்., 31ல் 700 கோடியை எட்டியது. உத்தரபிரதேசத்தில் அஜய், வினீதா தம்பதியினருக்கு பிறந்த நர்கீஸ் என்ற குழந்தை உலகின் 700வது கோடி குழந்தை என்ற பெயர் பெற்றது. அதே நேரம் பிலிப்பைன்சும் தங்கள் நாட்டில் தான் 700வது கோடி குழந்தை பிறந்தது என அறிவித்தது.


**************
விளையாட்டு
**************


அக்., 7: உலக குத்துச்சண்டை தொடரில், இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் , வெள்ளி வென்றார்.
அக்., 9: முதல் சாம்பியன்: சென்னையில் அக்.,9ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
அக்., 13: இந்தியா "ரெட்', "கிரீன்' அணிகள் இடையிலான சாலஞ்சர் டிராபி தொடரின் பைனல் "டை' ஆனது.
அக்., 14: தெற்காசிய பீச் விளையாட்டில், 11 தங்கம் உட்பட 27 பதக்கம் வென்ற இந்தியா முதலிடம்.
அக்., 23: சுவிஸ் சாலஞ்ச் பாட்மின்டன் தொடரில், இந்தியாவின் சிந்து கோப்பை கைப்பற்றினார்.
அக்., 25: சரியான பதிலடி: அக்., 25: சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' தொடர்களில் ஒரு வெற்றியும் பெறாமல் திரும்பியது. பின் இங்கு வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்தியா முழுமையாக (5-0) வென்றது சரியான பதிலடியாக அமைந்தது.
அக்., 30: "சூப்பர்' சாம்பியன்: அக்., 30: இந்தியாவில் நடந்த முதல் "பார்முலா-1' கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் பட்டம் வென்றார்.
இந்த ஆண்டு 11 முறை முதலிடம் பெற்ற இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றார்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.