Advertisement
நவம்பர்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
****‌****


நவ., 1: பா.ம.க., வில் இருந்து எம்.எல்.ஏ., வேல்முருகன் நீக்கம்.
நவ., 2: மாற்றம் ஏன்!: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படுவதாக நவ., 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
நவ., 6: தமிழக அமைச்சரவையில் 6 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 6 பேர் அமைச்சர்களாக நியமனம். இது 3வது அமைச்சரவை மாற்றமாகும்.
நவ., 6: ஏற்றுக்கொள்வார்களா!: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் நவ., 6ல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அங்கு நேரில் ஆய்வு நடத்தி, அணுமின் நிலைய பாதுகாப்பு திருப்தி என தெரிவித்தார்.
நவ., 7: தமிழகம் முழுவதும் பெய்த தொடர் மழையால் 34 பேர் பலி.
நவ., 8: மக்கள் நலப்பணியாளர்கள் 12 ஆயிரம் பேர் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
நவ., 11: தமிழக காங்., கட்சியின் புதிய தலைவராக ஞானதேசிகன் நியமனம்.
நவ., 15: நில அபகரிப்பு புகாரில் தி.மு.க., வைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி., ரித்திஷ் கைது.
நவ., 17: தமிழகத்தில் பஸ், பால் விலை உயர்த்தப்பட்டது.
நவ., 20: முன்னாள் அமைச்சர் பொன்முடி கல்லூரியில், ஆக்கிரமிக்கப்பட்ட 9.64 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
நவ., 24: தமிழகத்தில் பால் மற்றும் பஸ் கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஒருநாள் உண்ணாவிரதம்.
நவ., 24: பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவடைந்தது.
நவ., 25: முல்லை பெரியாறு பிரச்னையை மையமாக வைத்து, கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட, "டேம் 999' திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை.
நவ., 26: மெட்ராஸ் ஐகோர்ட்டின் 150வது ஆண்டு துவக்க விழா நடந்தது.
நவ., 30: மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தை பறிமுதல் செய்ய, மதுரை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.


********
இந்தியா
********


நவ., 3: சத்யம் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., ராமலிங்க ராஜூவுக்கு 32 மாதங்களுக்கு பின் ஜாமின் கிடைத்தது.
நவ., 17: இந்தோனேசியாவில் நடந்த கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியோபோ சந்திப்பு.
நவ., 18: தண்டனை: தொலைத்தொடர்பு துறையில் ஊழல் செய்த முன்னாள் மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சர் சுக்ராமுக்கு, நவ., 18ம் தேதி சி.பி.ஐ., கோர்ட் 5 ஆண்டு சிறை தண்டனை.
நவ., 24: பயங்கரவாதத்தின் பலன்: ஆந்திராவை சேர்ந்த கிஷன்ஜி, மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தியுள்ளார். இந்நிலையில் நவ., 24ம் தேதி மேற்கு வங்கத்தில், கூட்டு அதிரடி படை நடத்திய தாக்குதலில் கிஷன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
நவ., 24: பளார்!: டில்லியில் நவ., 24ல் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரை, ஹர்விந்தர் சிங் என்ற சீக்கிய இளைஞர் கன்னத்தில் அறைந்தார். இதனால் பவார் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில் "விலைவாசி, ஊழல் போன்ற பிரச்னைகளால் தான் தாக்கினேன்' என இளைஞர் தெரிவித்தார்.
நவ., 25: சில்லரை வணிகத்தில் 51 சதவீதம், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற, மத்திய அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு. பார்லிமென்ட் முடக்கம்.
நவ., 26: சர்வதேச திரைப்பட விழா கோவாவில் ஐந்து நாட்கள் நடைபெற்றன.


********
உலகம்
********


நவ., 2: "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீதான பாலியல் வழக்கில், அவர் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என, லண்டன் ஐகோர்ட் தீர்ப்பு.
நவ., 3: பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக ஆக்குவதற்கு யுனெஸ்கோ அமைப்பு கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்.
நவ., 4: பிரான்ஸ் நாட்டில் நடந்த "ஜி-20' நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.
நவ., 10: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொண்ட "சார்க்' மாநாடு மாலத்தீவில் நடைபெற்றது.
நவ., 13: வீட்டுக்கு போ: இத்தாலி அரசியலில் 20 ஆண்டுகள் செல்வாக்குடன் இருந்தவர் பெர்லுஸ்கோனி. மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். இவர் செக்ஸ் மற்றும் ஊழல் புகாருக்கு உள்ளானார். மேலும் இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்தக் கடன் 120 சதவீதமானதை தொடர்ந்து, மக்கள் இவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து நவ., 13ல் பெர்லுஸ்கோனி நீக்கப்பட்டார்.
நவ., 19: கடாபியின் 2வது மகன் சயீப் அல் இஸ்லாம், லிபிய போராட்டக் குழுவினரிடம் பிடிபட்டார்.
நவ., 20: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு ஆதரவளிப்பதாக, சிங்கப்பூர் பிரதமர், மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்தார்.
நவ., 23: அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தூதராக பெனசிர் புட்டோவின் தோழி ஷெரி ரஹ்மான் நியமனம்.
நவ., 24: ஏமனில் 33 ஆண்டுகளாக அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே, பதவி விலக ஒப்புக் கொண்டதையடுத்து, அங்கு 2012 பிப்., 21ல், தேர்தல் நடைபெறுகிறது.
நவ., 25: எகிப்து நாட்டின் புதிய பிரதமராக கமால் கன்சோரி நியமனம்.
நவ.,26: பாகிஸ்தானில் பழங்குடியின பகுதியில், நேட்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தாக்குதலில், பாக்., ராணுவ வீரர்கள் 28 பேர் பலி.
நவ., 27: இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையே, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.


**************
விளையாட்டு
**************


நவ., 1: உயரிய கவுரவம்: இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்குப் பின் உலக கோப்பை வென்று தந்த கேப்டன் தோனி, ஒலிம்பிக்கில் (2008) தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு, ராணுவம் சார்பில் நவ.,1ல் கவுரவ "லெப்டினென்ட்' விருது வழங்கப்பட்டது.
நவ., 5: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான் பட், முகமது ஆசிப்புக்கு ஜெயில். முகமது ஆமிர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
நவ., 10: சுல்தான் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில், இந்தியா (5-1), பாகிஸ்தானை வீழ்த்தியது.
நவ., 13: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்-பிரீத்தி திருமணம்.
நவ., 13: உறவு பாலம்: நவ., 13: பாரிசில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி சாம்பியன் ஆனது. இந்த ஆண்டு ஜெர்ரி வெப்பர் ஓபன் (ஜெர்மனி), ஸ்டாக்ஹோம் ஓபன் (சுவீடன்) தொடர்களிலும் பட்டம் வென்ற இவர்கள், இரு நாட்டு உறவுக்கு பாலமாக விளங்கினர்.
நவ., 17: மலேசியாவுக்கு எதிரான "நட்பு' கால்பந்து தொடரை (1-0) இந்தியா வென்றது.
நவ., 20: உலக கோப்பை கபடி தொடரில், இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்.
நவ., 26: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா (2-0) வென்றது.
* யுவராஜ் சிங் நுரையீரலில் கட்டி இருப்பது தெரியவந்தது.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.