Advertisement
டிசம்பர்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

********
தமிழகம்
********


டிச., 1: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
* ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்துக்கு நுழைந்து போட்டோகிராபரை தாக்கினார். இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்.
டிச., 2: தமிழகத்தில் டேம் 999 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, அதன் இயக்குநர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.
டிச., 3: நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு.
டிச., 4: அமைச்சரே இப்படியா!: 10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி அமைச்சர் கல்யாண சுந்தரம், 4ம் தேதி திண்டிவனம் கோர்ட்டில் நேரில் ஆஜர்.
டிச., 5: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி 192 நாள் சிறைவாசத்துக்கு பின் சென்னை வருகை.
டிச., 9: தமிழகத்தில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம். ராமஜெயம், பரஞ்சோதி ஆகியோர் விடுவிப்பு. வளர்மதி, ஆனந்தன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு.
டிச., 9: உரிமை போராட்டம்: முல்லை பெரியாறு பிரச்னையில், கேரளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிச., 9ல், தேனி மாவட்டத்தை சேர்ந்த 50 ஆயிரம் பேர், கேரள எல்லையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இவர்களை குமுளியில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
டிச., 13: யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு நல முகாம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே தெப்பக் காட்டில் தொடங்கியது. மொத்தம் 37 யானைகள் கலந்து கொண்டன.
* முல்லை பெரியாறு அணையின நீர்தேக்கத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
டிச., 19: சசிகலா நீக்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால தோழியும், அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், ஜெ.,யின் வளர்ப்பு மகன் சுதாகாரன், தினகரன், திவாகர், பாஸ்கரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 16 பேர், அ.தி.மு.க., வில் இருந்து டிச., 19ல் நீக்கப்பட்டனர்.
டிச., 25: கிருஸ்துமஸ் பண்டிகையொட்டி பழவேற்காடு ஏரிக்கு படகில் சுற்றுலா சென்ற 25 பயணிகளில் படகு கவிழந்ததில் 22 பேர் பலி. 3 பேர் உயர் பிழைத்தனர்.
டிச., 26: சென்னை பல்கலையில் நடந்த கணிதமேதை ராமானுஜத்தின் 125வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு. டிச., 22 தேசிய கணிதநாள் எனவும் அறிவிப்பு.


********
இந்தியா
********


டிச., 5: கர்நாடக பா.ஜ.,வில் இருந்து விலகி, பெல்லாரி இடைத்தேர்தலில் பா.ஜ.,வை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ஸ்ரீ ராமுலு வெற்றி பெற்றார்.
டிச., 12: டில்லி தலைநகரமாகி, நூறாண்டுகள் நிறைவடைந்தது.
டிச., 13: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள செஷல்ஸ் தீவில், சீனா தனது ராணுவ தளத்தை அமைக்க உள்ளதாக அறிவிப்பு.
டிச., 15: பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். வர்த்தகம், அணுசக்தி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
டிச., 18: ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜீத் சிங் மத்திய விமானத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார்.
டிச., 20: இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு எதிராக ரஷ்யாவில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
டிச., 27: ராஜஸ்தானில் தொடர் போராட்டம் நடத்திய அரசு டாக்டர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வேலைநிறுத்தத்தால் 50 நோயாளிகள் உயிரிழந்தனர்.


********
உலகம்
********


டிச., 1: மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட அவரது டாக்டர் கொன்ராட் மறீக்கு 4 ஆண்டு சிறை தண்டனை.
டிச., 5: ஜெர்மனியின் பான் நகரில் நடந்த ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நூறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.
டிச., 6: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நடந்த ஷியா முஸ்லிம்கள் ஊர்வலத்தில், மனித வெடிகுண்டு வெடித்ததில், குழந்தைகள் உட்பட, 58 பேர் பலி.
டிச., 7: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இஸ்ரேல் முன்னாள் அதிபர் முசே கட்சவ் சிறையில் அடைப்பு.
டிச., 9: பரிதாபம்: டிச., 9ம் தேதி, மேற்குவங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ., மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 93 பேர் பரிதாபமாக பலியாகினர். முறையான தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் இவ்விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
டிச., 11: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே பரோனேக் என்ற இடத்தில் பள்ளி மீது சிறிய ரக விமானம் விழுந்ததில் 13 பேர் பலி.
டிச., 14: பசிபிக் பெருங்கடலில், இந்தோனேசியாவையொட்டி அமைந்துள்ள, பப்புவா நியூகினியாவில் 7.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
* நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஈகிள் தீவிலிருந்து மெக்புடோகியா என்ற இடத்திற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி.
டிச., 15: "மது'வால் பலியான சோகம்: மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் டிச.,15ம் தேதி 500க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் பலர் வாந்தி, வயிற்று வலி காரணமாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 145 பேர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மம்தா உத்தரவிட்டார். இந்தியாவில் போதைக்கு அடிமையாகி உயிரை விடுவது தொடர்கிறது.
டிச., 18: ஈராக் போர் நிறைவு: சதாம் உசேனை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்காக ஈராக்கில் நுழைந்த அமெரிக்கப் படையின் கடைசிப் பிரிவு (8 ஆண்டுகள், 270 நாட்கள்)க்கு பிறகு, டிச., 18ம் தேதி அங்கிருந்து வெளியேறியது. போரில் 4,500 அமெரிக்க வீரர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்களும் பலியாகினர்.


**************
விளையாட்டு
**************


டிச., 5: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் சாம்பியன்.
டிச., 8: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் 219 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் இந்தியாவின் சேவக்.
டிச., 9: பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில், தமிழக அணி வெற்றி.
டிச., 11: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்தியா வென்றது (4-1).
டிச., 17: உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன், பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் செய்னா நேவல்.
டிச., 18: ஹாங்காங் ஸ்குவாஷ் தொடல் இந்தியாவின் தீபிகா பல்லீகல் சாம்பியன்.
டிச., 23: ஊக்கமருந்து பயன்படுத்திய அஷ்வினி, சினி ஜோஸ் உள்ளிட்ட 6 பேருக்கு ஒரு ஆண்டு தடை. ஹரிகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு தடை.


 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.