Advertisement
நினைவலைகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2011
00:00

மாற்றிய மக்கள் புரட்சி
மக்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக துனிசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றம் அமைந்தது. 2011 ஜனவரியில் துனிசியாவில் ஒரு இளைஞர், ஆட்சியாளர்களின் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் . இதையடுத்து, அந்நாட்டில் 23 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்த அபிதின் பின் அலிக்கு எதிராக மக்களின் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிபர் பதவி விலகினார்.
மக்கள் புரட்சிக்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, எகிப்திலும் மக்கள் புரட்சி வெடித்தது.
அந்நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த ஹோசினி முபாரக் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்நாட்டில் வசித்த இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.
போராட்டத்தின் தீவிரத்தை தொடர்ந்து முபாரக் பிப்., 11ல் பதவி விலகினார். இருப்பினும் வேலையின்மை, காவல்துறையின் கொடுமைகள், நெருக்கடி நிலைமை, விலைவாசி உயர்வு, பேச்சுரிமை மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எகிப்தில் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
லிபியாவில், 43 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த கடாபியை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிபிய ராணுவத்துக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. போராட்டக்குழுவினருக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ படையினரும் கடாபியை எதிர்த்து தாக்குதல் நடத்தினர். முடிவில் அதிபர் கடாபி போராட்டக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து போராட்டக்குழுவினர் சார்பில் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டது.


"பீனிக்ஸ்' பறவை மம்தா
மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக திரிணாமுல் காங்., கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மே 20ல் பதவியேற்றார். இதையடுத்து அம்மாநிலத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீட்டுக்கு அனுப்பி சரித்திர சாதனை படைத்தார்.
மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்குதேர்தல் நடந்தது. காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் மம்தா. ஆனால் மம்தா போட்டியிடவில்லை. 227 தொகுதிகளில் போட்டியிட்ட திரிணாமுல் காங்., 184 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. காங்., 42 இடங்களில் வெற்றி பெற்றது. 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியால் 62 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. திரிணாமுல் காங்., ஆட்சியை பிடித்ததால், ரயில்வே அமைச்சர் பதவியை மம்தா ராஜினாமா செய்தார். முதல்வராக பதவியேற்கும் போது மம்தா எம்.எல்.ஏ., வாக இல்லாததால், பதவியேற்ற பின் பவானிப்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார்.
மம்தா, முதல்வராக பதவியேற்றதும், முதல் பணியாக சிங்கூரில் விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்கும் மசோதாவில் கையெழுத்திட்டார். ஏனெனில் 2006ல் சிங்கூரில் டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற்கு, ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை அப்போதைய அரசு வழங்கியது.
இதில் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி பெறப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார் மம்தா. முடிவில் டாடா தொழிற்சாலையை குஜராத்துக்கு கொண்டு சென்றது. நந்திகிராம் கலவரத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மம்தா போராட்டம் நடத்தினார். மம்தா ஆட்சியை பிடித்ததற்கு இவையும் ஒரு காரணம்.


ஜப்பானின் சோகம்
ஜப்பான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மார்ச் 11ல், ரிக்டர் அளவில் 9 என்ற அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. சீறி எழும்பிய கடல் அலையால் வீடுகள், மின் நிலையங்கள், ரயில் பாதைகள், சாலைகள், விமான நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்தன. சுனாமியால் 15 ஆயிரத்து 836 பேர் பலியாகினர். 5,948 பேர் காயமடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, பூகம்பம் மற்றும் சுனாமியால் புக்குஷிமா அணுமின் நிலையமும் பாதிப்புக்குள்ளானது. இது தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ளது. சுனாமியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இதன் வெளிப்புற சுவர் வரைக்கும் வந்தது. இருப்பினும் பூகம்பம், சுனாமி ஏற்பட்டால் அணுஉலை தானாகவே செயலிழக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் மின்சாரம் தடைபட்டதால் அணுஉலை செயல்பாட்டை நிறுத்தியது.
இந்நிலையில் அணுமின் நிலையத்தின் உலை, திடீரென வெடித்தது. தொடர்ந்து கதிர்வீச்சு அபாயம் இருக்கிறதா என சோதித்ததில், கதிர்வீச்சு வெளியானது உறுதி செய்யப்பட்டது. 10 கி.மீ., சுற்றளவில் இருந்து மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தபட்டனர். யுரேனியம் செறிவூட்டும் கொள்கலனில் நிரப்பப்பட்டிருக்கும் வெப்ப தணிப்பு திரவம் (கூலன்ட்) கசிந்து வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் வெப்பத் தணிப்பு திரவம் கசிந்தது தான் இந்த திறன் இழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. அணு உலையின் குளிரூட்டும் திரவம் கசிந்து வெளியேறியதால், அதற்கான திரவத்தை அமெரிக்கா வழங்கி அணு உலையை ஆபத்தில் இருந்து பாதுகாத்தது.


 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.