உப்பில் வரையப்பட்ட ஒப்பில்லா ஓவியம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜன
2012
00:00

ரங்கோலி கோலம் என்பது, மாவு, அரிசி, பூவிதழ்கள் என்று, கிடைத்த பொருட்களை கொண்டு வரைவது.
இந்த ரங்கோலி ஓவியத்தை, உலக வெப்பமயமாதலை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட,
2,040 கிலோ கல் உப்பை பயன்படுத்தி, பிரமாண்டமாக வரைந்து, உலக சாதனை படைத்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சரிதா சதீஷ் என்பவர்.
ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான சரிதாவிற்கு, ரங்கோலி வரைவதில் ஆர்வம் அதிகம். திருமணமாகி வேலூர் வந்த பிறகு, கணவர் சதீஷ், மனைவியின் ரங்கோலி ஓவியத்திற்கு ஊக்கமளிக்க, ஒரு சாதனை ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
உலக சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தும், கோவையை சேர்ந்த, "எலைட்' நிறுவனம், சரிதாவின் ரங்கோலி ஓவிய சாதனைக்கு பச்சைக்கொடி காட்டியது. எடுத்துக் கொண்ட பயிற்சிகளுடன் கடந்த வாரம் வேலூர் காந்தி நகரில் உள்ள, ரங்கலாயா திருமண மண்டபத்தில் நடுவர்கள், பார்வையாளர்கள் மத்தியில், தன் சாதனை ஓவியத்தை வரைய துவங்கினார் சரிதா.
வரையப்படும் படம், மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலே, சாதனையாக ஏற்கப்படும் என்பது முக்கிய விதி என்பதால், என்ன மாதிரி வரைய போகிறார் என்பதில் அனைவருக்குமே ஆர்வம் இருந்தது.
ஏழு மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், ஒன்றரை இன்ச் உயரத்தில், 84 சதுர மீட்டரில், 2,040 கிலோ உப்பைக் கொண்டு ஓவியம் வரைந்து முடித்தார். நாற்பது கிலோ உப்பை, ஏழு வண்ணத்தில் முக்கியெடுத்து, அந்த வண்ண உப்பையும் ஓவியத்தின் பிரதான பகுதிக்கு பயன்படுத்திக் கொண்டார்.
காலை, 7:30 மணிக்கு ஆரம்பித்து, மாலை, 5:30 மணி வரை, தனி ஒருவராக வரைந்து முடித்தார். இடையில் விதிகளுக்கு உட்பட்டு, 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
வரைந்து முடித்து எழுந்த போது, பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரும், உடன் எழுந்து, ஒரு சேர கைதட்டி, சரிதா சதீஷை வாழ்த்தினர்.
காரணம், பிரமாண்டமான வெள்ளை துணியின் மீது, உலக உருண்டை பற்றி எரிவது போன்ற படத்தை வரைந்து, "நேச்சர் பார் பியூச்சர்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். "அருமையான இந்த உலகம், வெப்பமயமாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதே, இந்த ஓவியத்தின் நோக்கம்...' என்று சரிதா கூறிய போது, மொத்த கூட்டமும் ஆமோதித்தது. கூடவே, "எலைட்' நிறுவனம் அவரை உலக சாதனையாளராக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியது.
***


கலைச்செல்வி


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரனித்.ஞா - கோயம்புத்தூர்,இந்தியா
06-ஜன-201213:12:13 IST Report Abuse
ரனித்.ஞா   எங்களுக்கும் கவிதை எழுத உங்களிடம் அனுமதி கிடைக்குமா அன்பரே
Rate this:
Share this comment
Cancel
தரணி - மதுரை,இந்தியா
05-ஜன-201213:01:45 IST Report Abuse
தரணி புது முயற்சி வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
sharif - dohaqatar,இந்தியா
04-ஜன-201217:11:52 IST Report Abuse
sharif கிரேட் சரீதா, இந்த புகழ் உங்க கணவர் சதீஷ் க்கு ..........................
Rate this:
Share this comment
Cancel
லாவண்யா ராமன் ரமேஷ் kumar - jubail,சவுதி அரேபியா
03-ஜன-201223:22:56 IST Report Abuse
லாவண்யா ராமன் ரமேஷ் kumar சபாஷ்!!!!!!!!!!!!!!!!! மீண்டும் மீண்டும் சாதனை முயற்சி செய்ய valthukkal
Rate this:
Share this comment
Cancel
satheesh - sayal,இந்தியா
03-ஜன-201222:31:09 IST Report Abuse
satheesh good. she is really great
Rate this:
Share this comment
Cancel
முருகதாஸ்.k - Pondicherry,இந்தியா
02-ஜன-201217:06:54 IST Report Abuse
முருகதாஸ்.k உப்பில் வரையப்பட்ட ஒப்பில்லா ஓவியம்! உப்பு சப்பு இல்லாத வேசியம் என்றுதான் படித்தேன். படித்த பிறகுதான் தெறிந்தது உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பது போல உலக வெப்பமயமாதலை தடுக்கும் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த சரிதாவின் செயல் பாராட்டுக்குரியது .
Rate this:
Share this comment
Cancel
மீனாக்ஷி chennai - chennai,இந்தியா
01-ஜன-201206:46:03 IST Report Abuse
மீனாக்ஷி  chennai புது முயற்சி!!!!!! வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.