ஒருசமயம் துர்வாச முனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார்.
சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய தன் மகள் குந்தியைப் பணித்தான் குந்திபோஜன். இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை முறையாகச் செய்து அவரது ஆசியைப் பெற்றாள். முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும் "புத்திரலாபம்' என்னும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். குந்தி அம்மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பினாள். கண் கண்ட தெய்வமான சூரியதேவனை மனதில் எண்ணி அந்த மந்திரத்தை ஜெபித்தாள். அவள் முன் சூரியன் நேரில் தோன்றி, அவருடைய அம்சமாக ஆண்குழந்தையை அளித்துவிட்டுத் திரும்பினார். அப்பிள்ளையே கர்ணன். சூரியனின் மகனாகிய இப்பிள்ளையே, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதபடி தானம் செய்தவன். கொடைவள்ளல் என்று போற்றப்பட்டவன்.
குழந்தை இல்லாத தம்பதியர்,இந்த பொங்கல் முதல் அடுத்த பொங்கல் வரை தொடர்ந்து சூரியோதய வேளையில் வழிபாடு செய்தால், குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. இதற்காக விரத நியமங்கள் எதுவும் தேவையில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.