தர்மதேவதையின் வடிவமாகத் திகழும் பசுவைப் பாதுகாத்தால் உலகில் தர்மம் நிலைத்திருக்கும். தவம், தூய்மை, கருணை, சத்தியம் என்னும் நான்கும் நான்கு கால்களாக தர்மத்தை தாங்குகின்றன. கலியுகத்தில் கலியின் கொடுமை தீர கோபாலகிருஷ்ணரை வழிபட்டு பசுக்களைப் பாதுகாக்கவேண்டும். மகாபாரதத்தில், பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது, கோசம்ரக்ஷணம் என்னும் பசுபாதுகாப்பு பற்றி விளக்குகிறார்.
பசுவைத் தானம் அளித்தால் பெரும் பாவம் கூட நீங்கும். ""எந்த நாட்டில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டில் பாவம் என்பதே இருக்காது. அந்நாடே ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்றுசியவன மகரிஷி கூறியுள்ளார். இதற்காக, பெரிய கோயில்களில் கோமடம் நிறுவி பசுக்களைப் பாதுகாத்தனர். ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தினக்கடமைகளில் ஒன்றாக, "கோகிராஸம்' என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருகைபிடி புல்லையாவது பசுவுக்கு கொடுப்பதே கோகிராஸம் எனப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.