இந்த வார டவுண்லோட் வண்ணம் மாற்றும் பிளாக் மேஜிக்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
00:00

எழுமலை என்ற ஊரிலிருந்து ஒரு வாசகர், கருப்பு வெள்ளை போட்டோக் களுக்கு எளிதாக வண்ணம் தீட்டும் சாப்ட்வேர் புரோகிராம் உள்ளதா? என்னால் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம் களில் பொறுமையாகப் பணியாற்ற முடியவில்லை. தொழில் ரீதியாகவும் பழகுவதற்கும் எளிதான சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று தேவை என கம்ப்யூட்டர் மலர் வட்டத்தைத் தொடர்பு கொண்டார். இந்த சிந்தனையுடன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது தான் "பிளாக் மேஜிக்' என்ற சாப்ட்வேர் தொகுப்பு.
"பிளாக் மேஜிக்' சாப்ட்வேர் விண்டோஸ் இயக்கத்தில் வண்ணம் மாற்றும் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டது. கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் கொண்டு செல்வது மட்டுமின்றி, வண்ணப் படங்களையும் கருப்பு வெள்ளையில் மாற்றித் தருகிறது. போட்டோ எடிட் செய்வதற்கு நிறைய பாடங்களை எல்லாம் இதில் படிக்க வேண்டியதில்லை. இந்த சாப்ட்வேர் தொகுப்பில் “Timebrush” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பெற http://www.blackandwhitetocolor.com/html/blackmagic.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத் திற்குச் செல்லவும். Download BlackMagic என்ற லிங்க்கில் கிளிக் செய்து இதனை தரவிறக்கம் செய்திடலாம். இதன் இயக்க பைல் இறங்கியவுடன், இதனை இன்ஸ்டால் செய்திட ஒரு ஐகான் கிடைக்கும். blackmagic.exe என்ற இதன் பைலில் கிளிக் செய்தால், புரோகிராம் பதியப்படும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துவதாக இருந்தால், இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Run as administrator என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டால் செய்த பின்னர், புரோகிராமினை இயக்கவும். கிடைக்கும் மெனுவில், Load Image என்ற பட்டனில் கிளிக் செய்தால், வண்ணம் மாற்ற வேண்டிய படத்தை இமேஜ் எடிட்டரில் திறந்து வண்ணம் மாற்றும் வேலையைத் தொடங்கலாம். எந்த எந்த பகுதியில், என்ன வண்ணம் அமைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்க எளிதான மெனு தரப்படும். படத்திற்கான வண்ணம் மட்டுமின்றி, பின்புலத்தில் இருக்க வேண்டிய வண்ணத்தினையும் அமைக்கலாம். நீங்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், பிளாக் மேஜிக், என்ன மாதிரியான படத்தில் வண்ணங்கள் மாற்றப்படுகின்றன என்பதனை உணர்ந்து, உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கும். இறுதியாக அனைத்து வண்ணங்களும் உங்களுக்கு நிறைவாகத் தோன்றினால், அந்த படத்தினை புதிய பெயரில் சேவ் செய்துவிடலாம். இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒரு சில நிமிடங்களே ஆகின்றன என்பது இதன் சிறப்பு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - கள்,மலேஷியா
22-பிப்-201218:53:48 IST Report Abuse
பாலா VERY NICE SOFTWARE CAN DO EVERYBODY THANKS DINAMALAR. I LIKE YOU , ALWAYS VERY MUCH.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.