Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தங்கள் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்; பெரும்பாலான மக்களை எளிதில் சென்றடைய வேண்டும் என, செயல்படுகின்றனர். பிஸ்கட், பேக்கரி பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் பெரும்பாலும், 'ஹைட்ரோஜெனேடட்' எண்ணெய் உள்ளது. இது, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. தொடர்ந்து, இது போன்ற உணவுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
சம்பவம் - 1மாரடைப்பு ஏற்பட்ட நடுத்தர வயது பெண்ணை, எங்கள் மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். நினைவு திரும்பிய நேரம் எல்லாம், 'என் பையன், என் பையன்' என்றார். என்ன விஷயம் என, விசாரித்த போது, அவரின், பிளஸ் 1 படிக்கும், 16 வயது மகனுக்கு, பக்கத்தில் வசிக்கும் ஒரு பள்ளி மாணவியுடன் காதல். இருவரும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றிய நிலையில், அந்தப் பெண், இவனை விட்டு விட்டு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
சமீப நாட்களாக, குழந்தைகளுக்கு கை, கால்களில் சிறிய கொப்புளங்களோடு, காய்ச்சல் வருவது அதிகரித்து உள்ளது. தினமும் குறைந்தது, இரு குழந்தைகள் இந்த பிரச்னைகளோடு என்னிடம் வருகின்றனர். இதற்கு, 'ஹேண்ட், புட், மவுத் டிசீஸ்' என, பெயர். வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தப் பிரச்னை வருகிறது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை, இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது. அறிகுறிகளைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
பச்சைப் பசேல் என, கண்ணுக்கு குளிர்ச்சியான தோட்டத்தின் நடுவில், ஒரு கோடியே, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது, பிரபாசின் நவீன ஜிம். பாகுபலி பட, 'ரிலீசு'க்கு பின், உலகம் முழுவதும் தெரிந்த நடிகராகி விட்ட பிரபாஸ், 'ஏசி' ஜிம்மில் வொர்க் - அவுட் செய்வதை விரும்புவதில்லை. 'இயற்கையான சூழலில், வெட்ட வெளியில் உடற்பயிற்சி செய்யும் போது, சுத்தமான காற்று, நுரையீரல் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
இருபத்தியெட்டு முதல், 30 நாட்களுக்குள் மாதவிடாய் வருவது தான் சரி என்பது, பொதுவான அபிப்ராயம். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 60 முதல், 70 சதவீத பெண்களுக்கு, 28 முதல், 30 நாட்களில் தான் மாதவிடாய் வரும்; அதேநேரம், எல்லாருக்குமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. ஆரம்ப நாட்கள் முதல், எத்தனை நாட்களில் மாதவிடாய் வர ஆரம்பிக்கிறதோ, அது போலவே மாதவிடாய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
கீரைகள், சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான். கடைகளுக்கு சென்று அதிக விலை கொடுத்து, சத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, கீரை சாப்பிட்டால் போதும். ஆனால், கீரைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும், முழு பலன் கிடைத்து விடாது. கீரையின் சத்துக்கள், அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
பழங்கள், உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. அதில் ஒன்று விளாம்பழம். இது, காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க வல்லது. வயிற்று கோளாறுகளை சரி செய்து, வாயு பிரச்னையை குணப்படுத்தக் கூடியது. மரத்தின் பட்டை, இலை, பழம் ஆகியவை பயனுள்ளதாக விளங்குகிறது.விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும்; பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு, பூலோகத்து கற்பகதரு என்றார்கள் நம் முன்னோர். பனை, குறைந்தது, 60 வருடங்களுக்கு மேல் வாழும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
உடலில் உள்ள பிரச்னைக்கு அறிகுறியே சீரற்ற சுவாச விகிதம். இந்நேரத்தில் சுவாசவிகிதம் இயல்பைவிட குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது சுவாச விகிதம் அதிகரிப்பது இயல்பான ஒன்று.வயது வந்தவர்கள் சராசரியாக நிமிடத்துக்கு, 20 முறை சுவாசிக்க வேண்டும். மாறாக, சுவாச விகிதம், 24க்கும் மேல் இருந்தால் அது ஆபத்தானது. ஒருவர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
ஒரு நிமிடத்தில் நாம் எத்தனை முறை சுவாசிக்கிறோமோ அதுவே சராசரி சுவாச விகிதமாகும். இக்கணக்கீடு பல காரணிகளால் மாறக்கூடும். உதாரணமாக, உடல் பருமனானவர்கள், இதயநோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களின் சுவாச விகிதத்தைக் கணக்கிடுவது சற்று சிரமம். சுவாச விகிதக் கணக்கெடுப்பில் முக்கியமான மற்றொன்று, கணக்கிடும் நேரம். நாம் விழித்திருக்கும்போதோ, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து முடித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
தாய் கருவுற்றபோது ஏற்படும் தொற்று, கருவில் உள்ள குழந்தையின் உள்காதைப் பாதிக்கலாம். தாய்க்கு ஏற்படும் நோய்களும் தாய்மைப்பேற்றின்போது உட்கொள்ளும் மருந்துகளும் கருப்பையில் உள்ள குழந்தையின் காதுகளை மந்தப்படுத்தும். குறிப்பாக அம்மை, டைபாய்டு, நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களால் இந்த நிலை ஏற்படலாம்.குறைமாதத்தில் குழந்தை பிறந்தாலும், பிரசவவலி எடுத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம் என, வாசனைக்காக தலையில் சூடிக்கொள்ளும் மலர்களில், பல வகையான மருத்துவ குணம் மறைந்திருக்கிறது. அறிந்து கொண்டால் பல நோய்களுக்கு விடை கிடைக்கும்.முல்லைப் பூவின் சாறு பிழிந்து மூன்று துளி மூக்கில் விட்டால் தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை இரண்டு அல்லது நான்கு துளி வீதம் கண்ணில் விட்டு வந்தால் கண் பார்வை குறைவு குணமாகும். முல்லைப் ..

 
Advertisement