'தன்னழகால் காளையர்களை கவிழ்க்க வாடிவாசல் வருகிறாள் துள்ளிக்கிட்டு... காந்தக் கண்களால் களமிறங்கி நடக்கிறாள் ஜல்லிக்கட்டு, மங்கை இவள் தேகம் இனிக்கும் கரும்புக்கட்டு' என கவிதை பாட வைப்பவர் நடிகை நந்திதா. தைத்திருநாளில் நுரை பொங்கும் அழகால் சர்க்கரை பொங்கலிட்டு... ரசிகர்களுக்காக மனம் திறந்த முல்லை மொட்டு... நந்திதா பேசுகிறார்.* 'உள்குத்து' பட அனுபவம்'கடலரசி' என்ற ..
காலங்களை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு 'ஏறு தழுவுதல்' என அழைக்கப்பட்டது. ஏறு எனும் சொல் காளையை குறிக்கும். 'காளையை அடக்கி கன்னியை கைப்பிடிக்கும் கட்டிளங் காளையர் பற்றிய வீரக்கதைகள் ஏராளம். கண்கள் சிவக்க... சினம் கொண்ட காளை வாலை முறுக்கி சிலிர்க்கும். அருகில் வரும் காளையரை முட்டிப்பந்தாடும். ..
ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்திற்கு ஏற்றவாறு உணவுகள் மாறுபட்டாலும், தமிழர்களின் பாரம்பரிய உணவிற்கு மயங்காதோர் யாரும் இல்லை. இங்கு சமைக்கப்படும் உணவுகளின் ருசியோ, கடல் கடந்து, வான் கடந்து பெருமையே சேர்க்கிறது.இத்தாலியில் இருந்து 22 பேர் குழு இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்தபோதே மதுரையை பார்த்தே ஆகவேண்டும் என்பது அவர்களின் ஆசை. ..
ராமநாதபுரம் அருகே காவனுாரில் குழந்தைகளை தெய்வங்களாக நினைத்து, பொங்கலிட்டு குப்பி பொங்கல் கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.இங்குள்ள சைவ வேளாளர் சமுதாயத்தினர் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். நுாற்றாண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் இடம் பெயர்ந்து இங்கு குடியிருந்து வருகின்றனர். மாட்டுப்பொங்கல் தினத்தில் வீடுகளின் முன் மாட்டு ..
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பலர் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் பேசப்படுவர் மயில்சாமி அண்ணாத்துரை.சந்திராயன் 1 மற்றும் 2, மங்கள்யான் செயற்கைகோள்களை ஏவி சர்வதேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர். விண்வெளி ஆராய்ச்சியில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 'பத்மஸ்ரீ ' வழங்கி ..
'ஒமக சீயா வாகி யாகா... வாகி யாகா சீயோ மெக சாயா'... ஜப்பான் சினிமால கூட இப்படி ஒரு பாட்டு வந்திருக்காது. தமிழ் சினிமால தான்ய்யா, வாய்க்குள்ள நுழையாத வார்த்தைகளை வைச்சு பாட்டு எழுதுறாங்க...ஆனால், போன வாரம் மதுரையில் திருமணம் செய்து கொண்ட ஜப்பான் பெண் சிஹாரு, அக்மார்க் தமிழ் பேசியதை பார்த்த போது, நம் மனசாட்சி... 'நீங்கெல்லாம் என்னிக்காவது இப்படி சுத்தமான தமிழ் பேசி ..
'கும்... கும்...'என நெஞ்சில் இடியாய்... இனிதாய் எதிரொலிக்கும் தபேலாவை ரசனையாய் இசைக்கும் கலைஞர்களின் உடல் பாவனைகூட ரசிகர்களை உற்சாகமாக தாளமிட வைக்கும். கச்சேரிகள், மேற்கத்திய இசை மேடையில் ஆண்கள் ஆளுமை செய்யும் இந்த இசைக் கருவியை இந்தியாவில் இசைக்கும் பெண்களின் எண்ணிக்கை அரிதிலும் அரிது. அவர்களில் ஒருவர் ரத்னஸ்ரீ அய்யர்.கேரளாவில் வைக்கத்தில் வசிக்கிறார். இவரது ..
வாசித்து ரசிக்கும் வயதில் மனதை இளக வைக்கும் கவிதைகளால் தன் கவி பயணத்தை துவங்கி, தனக்கென தனி 'ஸ்டைலால்' 2500க்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதி குவித்து களம் கண்டு வலம் வருபவர் இளம் கவிஞர் சினேகன்.தினமலர் பொங்கல் ஸ்பெஷல் பகுதிக்கு கடகடவென கவிமடை திறந்த தருணங்கள்...பொங்கல் பண்டிகையை ரசிக்கும் வயது என்றால் அது பள்ளி பருவத்தின் இளமை காலம் தான். ஒரு முறை வந்து போகும் ..
பதினாறு வகை பாடல்களை இசையுடன் பாடி பொங்கலை கொண்டாடும் வழக்கம் பளியர் இன மக்களிடையே இன்றும் உள்ளது. பொங்கல் நாளை இயற்கை திருவிழாவாக ஆதிவாசிகள் வர்ணிக்கின்றனர்.'பட்டி பெருக ... பால் பானை பொங்க .. பொங்கலோ... பொங்கல்' என நாம் வரவேற்போம். ஆனால் கொடைக்கானல், சிறுமலை, பழநி பகுதியில் வசிக்கும் மலைவாழ் சமூகத்தினரான பளியர்கள் தங்கள் வன தேவதைக்கு இரவினில் பொங்கல் வைத்து ..
கிராமங்களில் பொங்கலுக்காக கூடும் சந்தைகளில் கரும்பு, மஞ்சள், பானைகள், கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனையில் களைகட்டும். அதே போன்று பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் 'நம்ம சந்தை' என்ற பெயரில் சந்தை நடத்தி, அங்கு உடலுக்கு பாதிப்பில்லாத பனை, தென்னை பாகில் தயாரித்த கருப்பட்டியால் இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து விற்று ..
''மக்களுக்கு பிடிச்சத குடுக்குறது கலையோட வேலை இல்லை, மக்களுக்கு தேவையானதை தான் குடுக்கணும்'' என்கிறார் ஜெர்மனி, கொரியா திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய முதல் குறும்படம் 'டூ - லெட்'டின் இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி.அவருடன் ஒரு நேர் காணல்...* உங்கள் சொந்த கதை...பிறந்தது மதுரை. படித்தது சென்னையில் மீடியா ஆர்ட்ஸ். இயக்கியது பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள். ..
பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேட்டி ஒன்று வேண்டும் நாம் கேட்க, ''பொங்கல் திருநாள் வந்ததுபொங்கிடும் இன்பம் தந்ததுஎங்கள் திருநாள் இதுவன்றேஇதனை ஏற்றல் மிகநன்றே..!''என வெண்கல குரலில் தைப்பொங்கலை வரவேற்று பாடவே ஆரம்பித்துவிட்டார் புஷ்பவனம் குப்புசாமி. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது மென்மையான குரலில் சுருதி சேர்த்தார் அவரது மனைவி அனிதா. நகரத்தில் ..
கிராமங்களில் அந்தக் காலத்தில் பொதுக்கிணறுகள் இருந்தன. மனித உழைப்பு மூலம் கடப்பாரை, மண் வெட்டியால் பூமியை துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியே எடுப்பதற்கான ஆதிகாலத்தின் விஞ்ஞானம் அது. சதுரம், வட்ட வடிவங்களில் கிணறுகளை அமைத்தனர். உள்புறம் மண் சரிவை தடுக்க மணல், சுண்ணாம்பு அல்லது மணல், சிமென்ட் கலவையால் உட்பூச்சு, மேற்பகுதியில் நான்குபுறமும் தடுப்புச் சுவர், அதைச் ..
சசிகுமார் மதுரை தமிழில் மக்களின் மனம் கவர்ந்த நாயகன், மண்மணம் வீசும் படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்களை வளைத்து போட்டுள்ளார். சுப்ரமணியபுரத்தில் துவங்கி, நாடோடிகள், கொடிவீரன் என பல வெற்றி படங்களில் வெண் நிலவாய் பிரதிபலித்த சசிகுமார் அளித்த பேட்டி* பொங்கல் நினைவுகள்...தமிழர் விழாக்களிலேயே, ஜாதி, மதம் கடந்து ஆறறிவு மக்களை மட்டுமின்றி, ஐந்தறிவு மாக்களையும் ..
சித்திரையில் உழவு, ஆடியிலே விதைப்பு, ஐப்பசியில் களையெடுப்பு, தையிலே அறுவடை, மாசியிலே வழிபாடு, விழா, கொண்டாட்டம் என்று வேளாண்மையின் உச்சங்களை தனதாக்கி கொண்டது தான் நமது தமிழர் பண்பாடு. தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரை அவர்கள் கொண்டாடும் விழாவாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி, வழிபாடாக இருந்தாலும் சரி, அதன் அர்த்தமெல்லாம் வேளாண்மை பண்பாட்டை சார்ந்தே ..
'காவியமா நெஞ்சின் ஓவியமா... தெய்வீக காதல் சின்னமா'... ஆம், ஓவியங்கள் எல்லாம் ஒரு காவியம் தான்... அந்த ஓவியங்களுடன் ஒட்டி உறவாடும் ஓவியர்கள் எல்லாம் காதல் சின்னங்கள் தான்...விரல்களில் விளையாடும் துாரிகை, கண்களில் தெறிக்கும் கற்பனை, எண்ணங்களில் வழியும் வண்ணங்கள்... என, நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்களுடன் உறவாடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஓவியக் காதலர் சுதாகரன் தன் ..
மரபு சார்ந்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, விடாமுயற்சி என ஏதேனும் ஒரு வகையில் நன்மை அளிக்கக்கூடியதாக உள்ளன. ஆனால் அவை குறித்து தற்போதைய பெற்றோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புக்கள் குறைவுதான்.ஆனால் இதற்கெல்லாம் மாறுபட்டு தேனி அல்லிநகரத்தில் நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் கவனம் செலுத்தி அதை ஒவ்வொரு ..
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல உருவத்தில் சிறிதாக இருந்தாலும் குறுந்தானியங்கள் தான் நம் பாரம்பரிய செல்வங்கள் என்பதை அனைவருமே உணரத் துவங்கி விட்டோம். குறுந்தானியங்களில்தக்காளி சாதம் துவங்கி தயிர் சாதம், புளிச்சாதம், எலுமிச்சை சாதம், பிரியாணி வரை செய்யலாம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். பொங்கல் ஸ்பெஷலாக இந்த முறை சாமை சர்க்கரை பொங்கல், ..