E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Advertisement
 
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
'பொறுத்தார் நாடாள்வர்; பொங்கியோர் காடாள்வர்' என்பது, பெரியோர் வாக்கு. இதற்கு மிகப் பெரிய உதாரணமே, மகாபாரத சகோதரர்கள் தான்.பாண்டவர்கள், பொறுமையை கடைபிடித்ததால், நாட்டை ஆள முடிந்தது. கவுரவர்களுக்கு பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இல்லாததால், பாரதப் போரில் மடிந்தனர். அதனால் தான், சான்றோர், பொறுமையை, பூமா தேவிக்கு ஒப்பிட்டும், கோபத்தை, மனித குலத்திற்கு எதிரான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
ஜூலை 26 - ஆடி அமாவாசைசூரியனுடைய ஒளிக்கிரகணங்கள் ஒவ்வொன்றுக்கும், தனித்தனி பெயர் உண்டு. இதில், 'அமா' என்ற பெயர் கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும் காலத்தையே, அமாவாசை என்பர்.மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில் தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை. ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம் முன்னோர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
பெண்களே... எங்கே போகிறீர்?என் நண்பர் ஒருவர், தான் வைத்திருக்கும் பேன்சி ஸ்டோர்ஸ் முன்புறம், பி.சி.ஓ., பாக்ஸ் ஒன்று தொங்க விட்டிருந்தார்.அண்மையில் அவரைப் பார்க்க சென்றிருந்தபோது, அங்கு, பி.சி.ஓ., பாக்ஸ் இல்லாதது கண்டு, காரணம் கேட்டேன்.அதற்கு அவர், 'அந்த கண்றாவிய ஏம்பா கேக்கறே... முளைச்சி மூணு இலை விடாத விடலைப் பசங்க எல்லாம், ஒரு ரூபா போன்ல, ரொம்ப நேரமா கடலைப் போடுதுங்க. பாய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
விமான நிலைய பாதையை தவற விட்ட டிரைவர் ஹியோட்டோ, பின், வண்டியை வேகமாக செலுத்தியதால், குறிப்பிட்ட நேரத்திற்குள், விமான நிலையத்தை அடைந்து விட்டோம். ஹியோட்டோவின் முகத்தில் அளவுகடந்த மகிழ்ச்சி; அவர் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும் மலர் செண்டுகள் கொடுத்தார். நானும், என் நினைவாக ஒரு சில பொருட்களைக் கொடுத்தேன்.விமானத்திற்கு புறப்படுவதற்கு முன், அவரை மார்போடு சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
செஞ்சி - திருவண்ணாமலை ரோட்டில் அமைந்துள்ளது ஆலம் பூண்டி என்ற கிராமம். வருமான வரித் துறையில் பணியற்றும் நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது; அவரது மாமனார் ஒரு நிலச்சுவான்தார். அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பிய நண்பர், என்னையும் அழைத்தார்.மிகப் பெரிய ஓட்டு வீடு அது; வீட்டின் நடுவே பெரிய முற்றம். வாசலில் இருபுறமும் பெரிய திண்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
எஸ்.சித்ரா, மயிலாப்பூர்: நான் பி.ஏ., முதலாமாண்டு மாணவி; எவ்வளவோ பேருக்கு பேனா நண்பர்களை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளீர்கள். உங்களது பேனா நட்பு எனக்கு கிடைக்குமா?உங்கள் கடிதம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. உ.ஆ., ஒருவர் உதவியுடன் தான் படித்து, கடிதத்தை புரிந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதினால், உ.ஆ.,தான் உங்களுக்கு, 'பென் பிரண்டு'ஆவார்! க.லலிதா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
கடந்த, ஜூன், ௮ம் தேதி, 'வாரமலர்' இதழில், அந்துமணியின் கேள்வி - பதில் பகுதியில், கும்பக்கரை வாசகர் வி.எஸ்.செல்வேந்திரன், 'சாமுத்திரிகா லட்சணப்படி மீசையுடன், தாடியும் வளர்ப்பவர்கள், அர்த்தபூர்வமான வாழ்க்கையை விரும்புகிறவர்களாகவும், சாதனை விரும்பிகளாகவும் இருப்பராம். இதன்படி, நீங்கள் நடத்தும் அர்த்தபூர்வமான வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?' என்று, ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
வேகமாகப் போகிற வண்டிகளில் ஏறினால், விபத்து நேர்ந்து விடக் கூடும் என்று, ராமசாமிக்கு அச்சம். 'மிக மெதுவாகப் போகிற வண்டி எது?' என்று, பல இடங்களில் விசாரித்து, அது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும், பகல் நேர பாசஞ்சர் வண்டி என, கண்டுபிடித்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.ரயில் மெதுவாக கிளம்பி, மெதுவாக ஊர்ந்து, பரமக்குடியை தாண்டி, அப்படியே நின்றது. 'என்ன... ஏது...' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
ஒரே படத்தில் விஜய் - அஜீத்!ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் தான், விஜய் - அஜீத் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பின், எந்தப்படத்திலும் இணையவில்லை. இந்நிலையில், மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்தார். அதற்காக, ஒரு கதையைதயார் செய்த அவர், அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை, ஏ.ஆர்முருகதாசிடம் கொடுத்து விட்டார். இதை யடுத்து நடந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
குபேர், புவனா தம்பதியினரைப் பார்த்து, எல்லாருமே ஆச்சரியப்பட்டனர்.'விழுந்து விழுந்து காதலிச்சு, போராடி ஜெயிச்சு, கல்யாணம் செய்தவங்க கூட, இவங்களப் போல, வாழுற மாதிரி தெரியலயே... பெத்தவங்க பாத்து, இணைச்சு வச்ச தம்பதிங்கன்னா, நம்பவா முடியுது...''புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியில்ல, ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க...' என, அந்த தெருவாசிகள் ஒவ்வொருவரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 48 ஆசிரியையாக பணிபுரிகிறேன். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என, அன்பு நிறைந்த குடும்பத்தில், ஒன்பது பிள்ளைகளின் நடுவில் பிறந்த, ஐந்தாவது பெண் நான். மூன்று அக்கா, ஒரு அண்ணன், இரண்டு தம்பி, இரண்டு தங்கை என, திருமணத்திற்கு முன், மிக சந்தோஷமாக இருந்தேன்.நான் எம்.ஏ., படிக்கும் போது, ஒருவரை சந்தித்தேன். அவர், பி.எஸ்சி., படித்தவர்; அவருடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
நெற்றிக்காசு!காசு கடவுள் படைத்ததல்ல...ஆனாலும், காசைகடவுளுக்குகாணிக்கையாக்குகிறான்மனிதன்!காசை,'நாணயம்' என்றான்அந்நாள் மனிதன்!நாணயம் பார்த்தால்நாணயம் வராதென்கிறான்இந்நாள் மனிதன்!படிக்காதவன்காசுக்கு அலைகிறான்...படித்தவன்டாலருக்கு அலைகிறான்!காசில்லாதவன்தூசுக்குச் சமம்உண்மைதான்...ஆனாலும்,நெற்றிக்காசு கூடநிரந்தரமில்லை என்பதுதானேநிதர்சனம்!நேர்வழியில் வராத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
மாலை, 7:00 மணி; பார்த்தசாரதி சுவாமி கோவில் தூணில் சாய்ந்து இருந்தார் விஸ்வநாதன். அவரையும் அறியாமல், கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.காலையில், மருமகள் பேசிய வார்த்தைகளே, நினைவில் நின்று, கண்ணீரை வரவழைத்தது.'ஏங்க உங்க அப்பாவுக்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கா... ஆபீஸ் போற அவசரத்தில, நானே அரக்க பரக்க வேல செய்துகிட்டு இருக்கேன்... அந்த நேரத்தில, டீ கொண்டா, பேப்பர் வந்திருச்சா, சுடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
இப்போதெல்லாம், கார் உரிமையாளர்கள் ஒரு காரை, ஐந்து ஆண்டுகள் வைத்திருந்தாலே ஆச்சர்யம். புதிய மாடல் கார்கள் வந்ததும், பழைய கார்களை விற்று, புதிய கார் வாங்கி விடுவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், 61 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரு காரையே பயன்படுத்தி வருகிறார். 1951ல், 'செவர்லே கூபே' என்ற வெள்ளை நிற காரை வாங்கினார். அன்றிலிருந்து, இந்த ஒரு காரைத் தான், அவர் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனுக்கு, 33 வயதாகிறது. இவர் எப்போதுமே, பொது நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை உடைகளை அணிந்து வருவது வழக்கம். தற்போது, இவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இனியாவது திருந்துவார் என பார்த்தால், ஊஹூம். சமீபத்தில் நியூயார்க்கில், தன் குழந்தையுடன் ஷாப்பிங் வந்த கிம் கர்தாஷியனை பார்த்து, சாலையில் போவோர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
கிரீஸ் நாட்டின் வடக்கு நகரமான பால்டிக், கடற்கரை நிறைந்த பிரதேசம். இங்குள்ள மீனவர் ஒருவர், வழக்கம் போல், கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அன்று மீன்களுடன், ஒரு பழைய பீர் பாட்டிலும் கிடைத்தது. அதனுள், ஒரு அஞ்சல் அட்டை இருந்தது. 101 ஆண்டுகளுக்கு முன், ஒருவர், தன் பேத்திக்கு எழுதிய கடிதம் அது. கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த பேத்தி, அஞ்சலா எட்மான், தற்போது ஜெர்மனியில் பெர்லின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
கனடாவில், மான்டிரியல் தாவரவியல் தோட்டம், ௧௯௦ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, பல வகையான உருவங்களை, கண்ணை கவரும் வகையில், தாவரங்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். இந்தப் பூங்காவில், ௨௦,௦௦௦க்கும் மேற்பட்ட, செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளன. உலகில் புகழ் பெற்ற பூங்காக்களில் இதுவும் ஒன்று என பெயர் பெற்றுள்ளது. ௧௯௩௧ல் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில், ௩௧ வகையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
நீங்கள் அன்பளிப்பாக புடவையோ, வேட்டியோ, சட்டையோ யாருக்காவது கொடுத்தால், விலைச் சீட்டை கிழித்துவிட்டுத் தான் கொடுப்பீர்களா... அப்படியானால், இன்னும் சற்று உயர்ந்த ரகத்தில், அன்பளிப்பை செய்திருக்கலாம் என்ற உறுத்தல், உங்களுக்குள் உள்ளது என்று அர்த்தம்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
சீனாவில் விவசாயி ஒருவர் பியர்ஸ் பழங்களை மனிதமுக வடிவில் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த பழங்களை வாங்க மார்கெட்டில் மக்கள் போட்டி போடுகின்றனர். என்னே கை(பழ)வண்ணம்.— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
உலகில் பல வடிவங்களில் வீடுகள் வந்தாலும், சில வீடுகள் மட்டுமே உலகளவில் பேசப்படுகின்றன. அவற்றில் இரண்டு வீடுகள், மிகவும் வித்யாசமானவை.கல் வீடு: போர்ச்சுகல் நாட்டில், பேப் மலையில் உள்ள வீடு, 'கல் வீடு' என்று, அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த நான்கு பெரிய பாராங்கற்களுக்குள், இரண்டு அடுக்குகளாக, இயற்கை சூழலில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே அனைத்து வசதிகளும் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2014 IST
..

 
Advertisement