ஊட்டி : ஊட்டியில் நடந்து வரும் தேயிலை மற்றும் சுற்றுலா விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக தேயிலை, சுற்றுலா விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் நாள்தோறும் இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், தேயிலை உற்பத்தி, அதன் தரம் மற்றும் போலியான தேயிலையை இனம் காண்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின் றன. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, ஊட்டி சாந்தி விஜய் பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதில், பல மாணவிகள் "சார்லி சாப்ளின்' போல வேடமணிந்து நடனமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த நான்கு நாட்களாக நடந்த தேயிலை சுற்றுலா விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
| வாசகர் கருத்து |
மாணவர்களின் இந்த செயல் முறைகள் மிகவும் பாராட்ட கூடியது. எங்களுக்கு மிகுந்த மனமகிழ்வு அடைகிறது
|
by v லாரன்ஸ் bhavani,chennai,India 11/4/2009 10:34:18 AM IST |