Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
சமூக விரோதிகளால் ஏரி ஆக்கிரமிப்பு : வீட்டுமனைகளாக விற்பனை

நவம்பர் 04,2009,00:00  IST

Tamilnadu special news update

திருவள்ளூர் : ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய்யை சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக விற்கப்படுவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.



திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் செல்லும் சாலையில் வீரகநல்லூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்பாசனத்தை நம்பி 150க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.ஏரியில் தண்ணீர் சேமித்து வைத்தால் தொடர்ந்து எட்டு மாதங் களுக்கு மேல் நெற்பயிர் விவசாயம் செய்யலாம்.ஏரியில் தண்ணீர் இருந்தால் சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏரியில் நாளுக்கு நாள் சேமிப்பு தண்ணீர் குறைந்துக் கொண் டே வருகிறது. இதற்கு காரணம் போதிய மழை இல்லை.மேலும், ஏரியின் நீர்வரத்து கால்வாய்யை சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்வதும், சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர்.



ஏரியின் முக்கால் பங்கை சில சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்கப் பட்டு வருகிறது.ஏரி நீர்வரத்து கால்வாயும் ஆக்கிரமித்து உள்ளதால் ஏரிக்கு மழைநீர் வருவதற்கு வழி இல்லாமல் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.இதனால் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து, விவசாயம் செய்ய முடியாமல் கட்டட மேஸ்திரி வேலைக்கு சென்று வருகின்றனர்.தமிழக அரசு ஏரி, குளம், குட்டை போன்ற அரசு நிலங்களை ஆக்கிரமித்தால், குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.



ஆனால், இங்கு மட்டும் ஏன் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்பது விவசாயிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது.இனியாவது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து ஏரி,குளம் மற்றும் குட்டை போன்ற அரசு நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன் வரவேண் டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்