Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
தொடரும் மணல் கொள்ளையால் பொதுமக்கள் அதிர்ச்சி : ஆற்றை தொடர்ந்து கால்வாயிலும் கைவரிசை

நவம்பர் 04,2009,00:00  IST

Tamilnadu special news update

செங்கல்பட்டு : பாலாற்றை கொள்ளையடித்த மணல் திருடர்கள், தற்போது கால்வாய்களில் உள்ள மணலையும் கொள்ளை அடிக்க துவங்கியுள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புகள் பெற்றது. தற்போது, மணல் கொள்ளைக்கு புகழ் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வளம் சேர்த்த பாலாறு இன்று அழிந்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல், விதிகளுக்கு புறம் பாக அள்ளப்படுகிறது.அரசு மணல் குவாரிகளிலும் அதிக ஆழத்திற்கு மணல் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவது குறித்து கவலைப்படாமல், அதிகாரிகள் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ளனர்.அரசு குவாரிகளுக்கு இணையாக திருட்டு மணல் குவாரிகளும் இயங்கி வருகின்றன. மணல் கொள்ளையர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பலஆண்டுகளாக பாலாற்றை சுரண்டி வருகின்றனர்.



வருவாய்த் துறையினரும், போலீசாரும் சில மாதங்களுக்கு முன்பு வரை, மணல் திருடர்களை பிடித்து அபராதம் விதித்தனர். தற்போது, அவர்கள் வளமாக மணல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.பாலாற்றில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், தற்போது அருகில் உள்ள கால் வாய்களிலும் மணல் திருட துவங்கியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பாலாற்றிலிருந்து களத்தூரான் கால்வாயை இணைக்கும் ஆற்றுக்கால்வாயில் தொடர்ந்து மணல் திருடப்படுகிறது.



பாலாற்றில் வெள்ளம் வரும் போது பொன்விளைந்த களத்தூருக்கு ஆற்றுநீரை கொண்டு செல் லும் முக்கிய கால்வாய் இது.தற்போது, கால்வாய் கரையை உடைத்து தினமும் ஏராளமான மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் மணல் திருடப்படுகிறது. இதனால், கால்வாய் ஓரம் அகலமாகி அங்குள்ள மின்கம்பங்கள் சேதமடைகின்றன.சுடுகாட்டு சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், கால்வாயை தேட வேண்டிய நிலை ஏற்படும். மழைக்காலத்தில் தண்ணீர் ஊருக் குள் வரும். எனவே, அதிகாரிகள் விழித்துக் கொண்டு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்