Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
புறா எச்சங்களால் பொலிவு இழக்கும் மகால்

நவம்பர் 04,2009,00:00  IST

Tamilnadu special news update

மதுரை : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் கூடு கட்டி வசிக்கும் புறாக்களின் எச்சங்களால், மகால் பொலிவை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.



சுற்றுலாத்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் மகால் சீரமைக்கப்பட்டது. மீண்டும் ஒளி-ஒலி காட்சி செப்.,12 ல் துவங்கியது. இது சுற்றுலா வளர்ச்சிக் கழகபராமரிப்பில் உள்ளது. திறந்தவெளியாக உள்ள சொர்க்க விலாசம் மற்றும் டூம்களின் இடைவெளிகளில் புறாக்கள் சுலபமாக புகுந்து கூண்டுகளில் கூடு கட்டி வசிக்கின்றன. அதன் எச்சங்கள் மகாலின் தரை, தூண்களின் மீது விழுகின்றன. இந்த துர்நாற்றம் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் மகால் முழுவதும் புறாக்களின் எச்சம் நிரம்பி விடும். கோடிக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லாமல் போகும். டூம்களில் உள்ள இடைவெளி மற்றும் சொர்க்கவிலாசத்தின் மைய பகுதியில் வலை அமைக்க வேண்டும். அதற்கு உணவாக தானியங்களை மகாலின் முன் பகுதியில் தூவினால், அங்கு தங்குவதை குறைக்கலாம். சொர்க்கவிலாசத்தில் தேனீக்கள் கூடு அமைத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதை அகற்ற தொல்லியல்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மணிக்கூண்டு: பிரிட்டிஷ் ஆட்சியில் 1873 ல் சென்னை கவர்னராக இருந்த லார்டு நேப்பியரால் மகாலில் மணிக் கூண்டு அமைக்கப்பட் டது. இது இரு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந் தது. பழுது நீக்கி ஆக.,14 முதல் மணிக்கூண்டு இயங்கியது. சில தினங் களாகஅதுஇயங்கவில்லை. மகால் அலுவலக வட்டாரங்களில் விசாரிக்கையில்,"" அதற்கு சாவி கொடுக்கும் அலுவலர் விடுப்பில் சென்றதால் இயங்கவில்லை,'' என்றனர். ஒரு அலுவலர் விடுப்பில் சென்றதற்காக மணிக்கூண்டு ஒலிக்கவில்லை. மேலும் சில அலுவலர்களுக்கு பயிற்சி கொடுத்தால் மணியோசை தடையில்லாமல் ஒலிக்கும்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்