Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
தமிழக சிறப்புச் செய்திகள்
மண்ணை முத்தமிடும் அதிசய வாழைக்குலை

நவம்பர் 04,2009,00:00  IST

Tamilnadu special news update

சேலம்: சேலம் புதூர் எக்ஸ்டென்சன் குளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும் வாழை மரங்கள், 10 அடிக்கு மேல் நீளமாக குலை விடுகின்றன.



ஏற்கனவே அங்கு முழுமையாக வளர்ந்த வாழைக்குலை வெட்டப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு மரம் ஏழு அடிக்கும் மேல் குலை தள்ளியுள்ளது. விரைவில் மண்ணை தொடும் நிலையில் உள்ளது. அதனருகே உள்ள இன்னொரு வாழை மரம், சிறிதாக குலைவிட்டு தன் கணக்கை துவங்கியுள்ளது.



வாழையை பராமரிக்கும் சகோதரி பிரிஸ்கா கூறியதாவது:வாழைக்குலையில் எண்ண முடியாத அளவுக்கு காய் இருப்பதால் இந்த வாழைக்கு கேரளாவில் "ஆயிரத்தொரு காய்' என்று பெயர். இரு ஆண்டுக்கு முன், கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து இவ்வகை வாழைக்கன்று ஒன்றை எடுத்து வந்தேன். எரு சாணத்தை கலந்த மண்ணில் நட்டு வைத்தேன். மரங்களில் இருந்து விழும் இலை, தழைகளை அடியுரமாக இட்டு வருவதோடு சரி. மற்றபடி எவ்வித உரமோ, பூச்சி மருந்தோ பயன்படுத்துவது இல்லை.நான் முதலில் கொண்டு வந்த கன்று, தரையை தொடும் நிலையில் குலை வந்தவுடன் வெட்டப்பட்டது. தற்போது, அந்த கன்றில் இருந்து முளைத்த ஒரு 10 மாத வாழை, ஏழு அடிக்கு மேல் குலை தள்ளியுள்ளது. சரியாக 16 மாதத்தில் இந்த வாழைக்குலை தரையை தொட்டுவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 வாவ் சூப்பர். ஸ்வீட் போட்டோஸ். 
by J கார்த்திக் நாராயணன்,Manama,Bahrain    11/4/2009 12:41:25 PM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் தமிழக சிறப்புச் செய்திகள்
  இ-பேப்பர்