ராமநாதபுரம்: ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், இந்த ஆண்டு முதல் இலவச ஸ்டால்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊனமுற்றோர் நலன் கருதி, ஊனமுற்றோர் நலவாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இலவசமாக மூன்று சக்கர சைக்கிள், பைக், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மாதம் 400 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இருந்தாலும், பலருக்கு உதவித் தொகை போன்ற சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. அரசின் உதவிகளை பெறமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இது போன்றவர்கள் தொழில் மூலம் வருவாய் ஈட்டும் பட்சத்தில் இந்நிலை மாறும் என அரசால் கருதப்பட்டது. அதன்படி ஊனமுற்றோர் வியாபாரத்திலும் ஈடுபட வசதியாக விற்பனை செய்யும் "ஸ்டால்'களை வழங்க முடிவு செய்யப்பட்டது. நடப்பாண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய திட்டத்துக்கான, முன்னோடி பணிகள் தற்போது துவங்கி உள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டத்தின் ஊனமுற்றோர் மறுவாழ்வு மைய அலுவலகத்துக்கு ஸ்டால்கள் வந்துள்ளன.
மாவட்டம் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து வரையிலான ஸ்டால்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான பயனாளியை தேர்வு செய்ய கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் நலவாரியம் மூலம் எந்த உதவியும் பெறாத நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
| வாசகர் கருத்து |
One of the Good schemes to help handicapped people. Hope there is no corruption and exploitation in this scheme, to help the physically challanged human beings!!
|
by JG JAY கணேசன்,Kumbakonam,India 11/7/2009 3:05:05 AM IST |